00:33 | Author: அன்னைபூமி
எத்துனை இதயங்கள் இருந்தாலும், ஒரு இதயத்திற்காக துடிக்கவும், இறக்கவும் துணிவதுதான் காதல். காதல், அனைத்தையையும் அழகாய்காட்டும். காதல் இறக்கை கட்டிப்பறக்கும் ஒரு சிந்தை கலங்கிய பறவை. எந்த திசையும் தெரியாத ஒரு அழகான கடல் பகுதி. வின்மீங்கள் நிரப்பப்பட்ட செவ்வானம். ஒரு முழுச்சந்திரன். இப்படி காதலை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். காதல் அழகானது தான் ஆனாலும் அன்றில் இறுந்து இன்று வரை பெற்றோரின் புரிதலுக்கு அப்பார்பட்டதாக உள்ளது. இதில் நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லையா?. இல்லை அவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையா?. ஆனால் காதலில் புரிதல் மட்டும் அவசியம். காதலை இன்று பலரும் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர், எடுத்தவரெல்லாம் வென்றுவிட்டால் காதல் மரம் இன்று படிமமாய் மாறியிருந்திருக்காது. காதலுக்கென்று தனி வரையரை ஒன்றும் இல்லை. அது கையில் எடுத்தவர்களின் கண்ணோட்டத்தை பொருத்தது. பலதரப்பட்டவர்களும் காதலை அனுவிக்கின்றனர் ஆனால் வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ்கின்றனரா? என்றால் அது அவரவர்களைச் சார்ந்தது.
                   காதலிக்கத் தொடங்கும் முன் தயவு கூர்ந்து உங்களின் குடும்ப சூழ்நிலையை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். காதல் பிறப்பதற்கு எந்த தருணமும் தேவை இல்லை, ஆனால் பிறந்தது காதலா? இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கின்றதா என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
                        காதலில் வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள் பற்றி நீங்கள் கவலை படத்தேவை இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் நடந்தன வற்றை உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு நடந்தன அனைத்தும் உங்களுக்கு நடக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ஒருவேலை அதற்கு மேலும் நடக்கலாம்.
                         காதல் செய்வதற்கு தகுதிகள் தேவையில்லை ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக தகுதிகள் அவசியம். காதலின் மேல் சமுதாயத்தின் பார்வையில்லை, ஆனால் அதுவே திருமணமாக மாறும் போது அனைவரின் பார்வையும் காதலர்களின் மேல் திரும்புகின்றது. எதையும் எதிர்பார்க்காமல் வந்த காதல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யமுடியாமல் இறுதியில் தோல்வியில் முடிகின்றது.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On February 12, 2011 at 6:30 PM , சாகம்பரி said...

காதல் என்றாலும் கல்யாணம் என்றாலும் தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் தேவை. சிலருக்கு பாய்மரம் சிலருக்கு கட்டுமரம். தெரியாத விசயத்தை பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?