15:14 | Author: அன்னைபூமி
ரொம்ப தாகம் எடுக்குதே!
வழக்கமா இந்த வாய்காலில் தான்
தண்ணீர் வரும்
இப்படி கொஞ்சம் கூட
எனக்கு மிச்சம் வைக்காம
இந்த பூமி உரிஞ்சுடுச்சே. . .

கிணத்துக்குள்ள பறந்து குடிச்சுடலாம்னா
உள்ள உக்காந்து குடிக்க
வசதியா இடம் இல்லை. . .

என்ன பண்ணூரது
இந்த சித்திர மாசத்துல
கள்ளழகருக்கே தண்ணீர் இல்லை
எனக்கு மட்டும்
மகேசன் மடையவா திறக்கப்போராரு. . .

மணி 3 ஆச்சே!
மின்சாரம் வந்துருக்கணுமே!
மகேசா நீ மடைய
தொறக்குரையோ இல்லையோ
தயவு செய்து இந்த
பம்பு செட்டவாவது போட்டுவிடு
நான் வாய்க்கால் ஓரம்
வர்ற தண்ணிய
வயிரார குடிச்சுகிறேன். . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 15, 2011 at 8:44 PM , எல் கே said...

vasanak kavithai nandru

 
On April 16, 2011 at 12:54 PM , சாகம்பரி said...

ப்ரணவன் குருவி க(வி)தை நன்று. இந்த காதல் பற்றி எழுதுவதைவிட உணர்ந்து எழுதுவது மிக நன்று.வாழ்த்துக்கள். ஆமா உங்க ஊர்ல குருவி இருக்கிறதா?

 
On April 17, 2011 at 5:45 PM , அன்னைபூமி said...

இந்த புகைப்படம் எமது ஊரில் எடுக்கப்பட்டதே, குருவிகள் இருக்கின்றன, வாழ்த்துரைக்கு நன்றி அம்மா. . .

 
On April 18, 2011 at 6:11 PM , அன்னைபூமி said...

Welcome sir. Thank you for your appreciation Sir