18:01 |
Author: அன்னைபூமி
இது பரீட்சை முடிந்த காலம். எதிர்காலத் திட்டங்களை எடுத்து இருப்பீர்கள். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி மனதில் இருக்கும். உங்கள் திட்டமிடலில் பெற்றோரின் கருத்துக்களையும் சேர்த்து சிந்தியுங்கள். எந்த திட்டமிடலும் இல்லை என்பவர்களுக்கு சில யோசனைகள்.
உங்கள் பெற்றோரின் கருத்திற்கு முக்கிய இடம் இருக்கட்டும். உங்களுடைய குண நலங்கள் தெரிந்தவர்கள் அவர்கள்.
நண்பர்களின் திட்டத்தை உங்களுக்குள் கொண்டு போகாதீர்கள். உங்கள் தகுதி திறமையை எடை போடுங்கள்.
நல்ல கல்லூரியில் எந்த பிரிவானாலும் சேர முயற்சியுங்கள். அனுபவம்மிக்க ஆசிரியர்கள், உட்கட்டமைப்பு இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட பிரிவில் சேர வேண்டுமென்று சுமாரான கல்லூரியில் சேராதீர்கள்.உங்களுடைய எதிர்காலத்தை கல்லூரியில்தான் தேடப்போகிறீர்கள், அதற்கு உறுதுணையான ஆசிரியர்கள் குழுமம் இருக்கும் கல்லூரியில் சேருங்கள்.
எங்கிருந்தாலும் படிக்கிறவன் ஜெயிப்பான் என்று சுமாரான கல்லூரியை தேடாதீர்கள். நல்ல மாணவர்கள் இருக்கும் கல்லூரியில் மாணவர் போராட்டம், ஸ்டிரைக் என்று இல்லாமல் சரிவர பாடத்திட்டம் நடத்தப்படும். ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை இருக்கும்.
கல்லூரியில் சேர்ந்தபின் நீங்கள் தேர்ந்தெடுத்த பிரிவில் ஏற்கனவே படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள், அவர்களின் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரை நம்பிக்கைக்குரிய வழிகாட்டி (mentor)ஆக கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது உதவும்.கல்லூரி வாழ்க்கையை புரிந்து கொண்டால், உங்கள் எதிர்காலம் உங்கள் வசப்படும்.

Category:
உலகத்தின் தொடர்பில்
|
0 comments: