22:32 |
Author: அன்னைபூமி
என்னை புழுதியில் புரட்டி
ஊரில் இருக்கும் அழுக்குகளை
உடல் மேல் பூசிக்கொண்டு
உருண்டு புரள்கிறேன் - இருந்தும்
உருவம் மாறவில்லை
எனக்கு. . .
இரக்கத்தை மறந்த இதயத்துடிப்புகள்
இரத்தத்தின் சூடால் சுட்டுவிட்ட
சுயநலமான சுரங்கப்பாதைகள்
சுகங்களை மறந்த நாடித்துடிப்புகள்
அர்ச்சனைகள் ஆசிர்வாதங்கள்
அன்பளிப்புகள் என அத்தனையும்
மறந்துவிட்ட மரத்துப்போன கைகள்
மறந்தும் கூட நன்நெறி
பாதை பக்கம் நகர்ந்துவிடாத
கால்கள். . .
சிரிப்பை மறந்து சிறகொடிந்த
உதடுகள். . .
மறந்தும் கூட மற்றவருக்கு
உதவாத மனம். . .
என்னேரமும் வெறுப்பையும் கோபத்தையும்
தாங்கிய முகம். . .
நான் வாழ்வதற்காக இத்தனை
கோரமுகங்களா. . .?
நிலையாமை நிதர்சனம்! புரிந்துகொண்டபின்
புத்திசுவாதினம் அற்றுப்போனேன். . .
எவருக்கும் இந்த நிலைதான்
என்ற பின்
எதற்காக இத்தனை முகங்கள். . .?
என்னை புழுதியில் புரட்டி
ஊரில் இருக்கும் அழுக்குகளை
உடல் மேல் பூசிக்கொண்டு
உருண்டு புரள்கிறேன் - இருந்தும்
உருவம் மாறவில்லை
எனக்கு. . .
பயணங்கள் முடிவதில்லை
என் பயணம் இதோ முடிவடைகின்றது. . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|
2 comments:
பிரணவன், ஆழ்ந்த சிந்தனை...? சிறிய வயதில் எல்லோரிடமும் நல்லதை எதிர்பார்க்கும் வெள்ளை மனம் இருக்கும். ஆனால் உலகம் அப்படியில்லையென்று புரியும் போது கோபம் அல்லது விரக்தி வரும். ஆனால், 'மனிதர்களை' தேடும் பயணம் முடிந்துவிடாது. good keep it up.
மண்ணுக்குள்ள போர மனுச வாழ்க்கைல, மத்தவுங்க மேல கோபம் எதுக்கு? கோபமும் கூட ஒரு சிலர் மேலதான். அனுசரித்து போற தன்மை கூட இல்லையே.!அதான் இந்த வரிகள். . .