18:38 | Author: sagampari
ஒரு நோயாளி வியாதியின் கொடுமையினால் அவதியுறுகிறான்....
நான் ஒரு மருத்துவர் எனில் அவனின் துன்பம் என்னை பாதிக்காது. மாறாக அதனை நீக்கும் வழிமுறைகளை சிந்திப்பேன். இது வெறும் எண்ணம் மட்டும்தான். இது மூளையின் செயலாக்கம்.

நான் அந்த நோயாளியின் அன்புமிக்க உறவினர் எனில் அந்த துன்பத்தையும் உணர்வேன். அது விரைவில் நீங்க வேண்டும் என்று நினைப்பேன். இது போன்ற சூழ்நிலை உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் அந்த சமயத்தை நினைவு கூருங்கள். உங்களுடைய எண்ணம் அல்லது வேண்டுதல் உங்கள் உள்ளிருந்து ( உணர முடியும். அதுதான் வலிமை மிக்க எண்ணம். இது கண்டிப்பாக வெற்றிபெறும். உள்ளிருந்து வருதல் என்பது பிராண சக்தியை சேர்ப்பது எனலாம். எண்ணங்களுடன் பிராண சக்தி சேரும்போது மனோசக்தி உருவாகிறது.

முன்பெல்லாம் பெரியவர்கள் சொல்வார்கள், ஒரு விசயத்தை எண்ணி பொறாமையுடன் பெருமூச்சு விடாதே என்பார்கள். ஏனெனில் அது செயல்த்துவம் உள்ள சக்தி. அழிக்கக்கூடிய தன்மை உடையது. பிராண சக்தி என்றால் என்ன? எப்படி எண்ணங்களுடன் பிராண சக்தியை சேர்ப்பது?

பிராண சக்தி நம்மை சுற்றியிருக்கிறது. பிராணவாயு எனப்படும் ஆக்ஸிஜனை உட்கிரகிப்பதால் இது கிட்டும். இப்போது புரிந்திருக்குமே! . சரியான அளவில் உட்கிரகிக்கப்படும் பிராணவாயு தன்னுடைய அதீத சக்தியை பல்வேறு வடிவங்களில் உடலுக்குத் தருகிறது. இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் காந்த சக்தியை அதிகரிக்கிறது. சிலருக்கு மூளையின் செல்களைத் தூண்டிவிட்டு தெளிவான சிந்தனைகளை தருகிறது . சிலருக்கு இரத்த ஓட்டத்தை தூண்டிவிட்டு அதீத செயல்களை செய்யவைக்கிறது.

சில விசயங்களை நினைத்து பார்க்கலாமா?
1. தியானம் செய்யும்போது சுத்தமான இடம் இருக்க வேண்டும். ஒரு விளக்கு எரிந்து கொண்டிருப்பது நல்லது. இதெல்லாம் பிராண வாயுவின் இருப்பை உறுதிபடுத்தும் விசயங்கள்.

2. காலையில் மூச்சுப்பயிற்சி செய்வது நல்லது என்பார்கள். அப்போது கரியமில வாயு குறைவாக இருக்கும். அதிக அளவில் பிராணவாயுவை உட்கொள்ள முடியும்.

3. மனம் தெளிவடைய மலைக்குப் போ அல்லது கடற்கரைக்கு செல் என்பார்கள். இங்கெல்லாம் தூய்மையான காற்று பிராணவாயு செரிவுடன் இருக்கும்.

இவையெல்லாம் பிராண சக்தி பற்றிய ரகசியத்தை சொல்கின்றன அல்லாவா? இயற்கையிலிருந்து உருவான மனிதனுக்கு இயற்கை வழங்கும் அதீத ஆற்றல் இது. இது பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?
Category: |
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On February 6, 2012 at 9:26 PM , shanmugavel said...

பிராணாயாமம் செய்வது மிகவும் நல்லது.கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் நன்று.

 
On February 7, 2012 at 12:59 AM , வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுபோன்ற நல்ல நல்ல விஷயங்களைப் படிக்கும் போதே பிராண சக்தி கிடைப்பது போல உணர முடிகிறது. தொடருங்கள். ;))))

 
On February 8, 2012 at 1:18 AM , Anonymous said...

பிராணவாயுவுக்குள் இவ்வளவா?

சுவாரஸ்யம்...

தொடருங்கள்..வாழ்த்துக்கள் சகோதரி...

 
On March 22, 2012 at 1:10 AM , kowsy said...

அனைத்தும் எம்மைச் சுற்றி இருக்க நாம் தாம் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கின்றோம்

 
On April 4, 2013 at 5:47 PM , Jobs said...

நண்பரே அருமையான பதிவு, மேலும் ஒரு தகவல் . கூகுளே அட்சென்ஸ் போல. http://www.taxads.in/ தமிழ் தளங்களுக்கு விளம்பரம் தருகிறார்கள். உங்கள் தளத்தையும் பதிவு செய்து பயன் பெறுங்கள். http://www.taxads.in/

 
On February 17, 2014 at 6:40 PM , அப்துல் ரஹ்மான்.ஜ said...

சுவாரசியமான பதிவுகள். இத்துடன் நிறுத்திவிட்டீர்களே? அடுத்தப் பதிவு எப்போது?