19:17 |
Author: Ravi
பட்டதெல்லாம் கஷ்டமாக
பாத்ததெல்லம் கானலாக
பாடாதி உலகத்துல
பகல்கூட இருட்டாக. . .
வல்லரசா ஆக்குறோமுன்னு
வரிஞ்சுகட்டி நிக்கிராக
குடிசையெல்லாம் கோபுரமாக்க
மல்லுகட்டி மருவுராக. . .
கூழக்குடிக்கும் சனங்களுக்கு
குடிசைகூட இங்கில்ல
வரிஞ்சுகட்டி நிப்பவரெல்லாம்
எதைத்தான் கோபுரமாக்க. . .
குலசாமி கோயிலுக்கு
குடும்பத்தோட புறப்பட்டு
ஒருநாள் கஞ்சிய காசாக்கி - ஏழைக
ஊருதாண்டி போராக. . .
சாப்பாடு கறிசமச்சு - சாமிக்கு
சந்தனமும் பொட்டுவச்சு
தருவாறு சந்தோசமுன்னு
தரிசனம் செஞ்சுவாறாக. . .
கண்தொறப்பார் சாமின்னு
காத்துக்குகிடக்கும் ஏழைக்கு
உடுத்திக்கிற கந்தைகூட
உருப்படியா ஒன்னும் இல்லை. . .
துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .
தேடிவந்த ஏழைக்கெல்லாம்
சோறுபோட மறந்துபோய்
அவர்மட்டும் தினம்தினம்
அபிசேகத்தில் குளிக்கிறாரு . . .
எத்தனையோ ஜென்மமாக
ஏழைக்கு வாழ்வில்ல
கண்ணாமுச்சி உலகத்தில
கஷ்டம் மட்டும் சாகவில்ல. . .
என்னதான் நடந்தாலும்
எல்லாத்தையும் பாத்துகிட்டே
சாமிமட்டும் நிக்குதிங்க
ஒத்தையில கல்லாக. . .
இது ஒரு மீள் பதிவு...
Category:
சகாவின் கவிதைகள்
|
4 comments:
காலம் மாறும் சகா. மழைக்கு வெள்ளம் , வெயிலுக்கு பஞ்சம் . எதுவானாலும் பாதிப்பு உணவு தொழில் செய்யும் கடவுளுக்குதான். வேதனை புரிகிறது.
காலமகள் கண்திறப்பாள்.காலம் ஒருநாள் மாறும். கவலைகள் யாவும் தீரும்..
//துக்கத்த மறைச்சுவைக்க
தூக்கங்கூடத் துணையில்ல
காக்கவேண்டிய கடவுள்மட்டும்
கலர்கலரா தெரியுறாரு. . .//
valimigundha varigal....
chandhan-lakshmi.blogspot.com
This is a greeat post