16:59 |
Author: அன்னைபூமி
கட்டிய கூட்டின்மேல்
கல்லெரி விழுந்ததென்ன. . .
கோபுரமாய் இருந்த வாழ்க்கை
கொடியிழந்த மலரானதென்ன. . .
ஒரு குலப்பிறப்பே
ஊமையாய் பிறந்திருந்தாலும்
உயிர் பிழைச்சு வாழ்ந்திருப்போம். . .
ஒரு திருமொழி பேசியதால்
உயிர்வாழ தகுதியற்று
உருக்குலைந்து போனோம். . .
ஒண்ட வந்த பிடாரி
ஊரையே உலுக்கிய கதையாய்
பூர்வீக குடியில்
பூகம்பங்கள் பல வந்துவிட்டன. . .
புண்ணியம் தேடும்
பூமிக்கு அருகில் இருந்தும்
கரைக்கப்பட்டன எங்கள்
கண்ணீர்த்துளிகள் கடலுக்கு அடியில். . .
தாயகம் இழந்த நாங்கள்
தரணி முழுதும் பறக்கின்றோம். . .
எங்கள் கூடு
கலைக்கப்பட்டுவிட்டது. . .
Category:
பிரணவனின் கவிதைகள்
|

7 comments:
ஏக்கம் நிறைந்த வரிகள்
கருத்துரைக்கு நன்றி. . .
மனதின் வலியை சொல்லியாகிவிட்டது. விடிவு.....
ஒரு திருமொழி பேசியதால்
உயிர்வாழ தகுதியற்று
உருக்குலைந்து போனோம். . .//
வலியை உருக்கமாய் கூறிய வரிகள் மனதை உருக வைத்தன.
மொழியால் வழி இழந்த வம்சம். உணர்ந்ததர்க்கு நன்றி அக்கா.
தங்கள் கவிதையின் உள்ளார்ந்த வலி
இப்போது என்னுள்ளும்
தரமான படைப்பு
தங்களைத் தொடர்வதில்
பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்
கருத்துரைக்கு நன்றி சார். இப்போதுதான் கவிதை எழுதி பழகுகிறோம். உங்களைப் போன்ற மூத்தவர்கள் கருத்து சொல்வது அன்னை தமிழின் கரம் பற்றி நடக்க ஊக்குவிக்கும்.