17:50 |
  Author: அன்னைபூமி
ஓரவஞ்சனை
அதென்ன .........
பௌர்ணமி வானத்திற்கு 
மட்டும் தங்க மேகங்கள் !
பயணிகள் இன்றி தனித்து
செல்கிறது ரயில் பூச்சி !
ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம் 
வாடகைக்கு  இடம் தேடிவீட்டுடன் அலைகிறது நத்தை!
மின் தடை 
இருட்டென்றால் பயமா 
விளக்குடன் மின்மினி பூச்சி!
சுமைதாங்கி
பனித்துளியின் பாரத்தால் 
வளைகிறது புல், மலர்கிறது பூ.
விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்
கள்ளாட்டம் 
வெட்கம்
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்
தியாகி 
காலடி நிழலில் குளிர்ச்சி
தலையின் சூரியனின் சுட்டெரிப்பு
     - தவிப்பில் ஆலமரம். 
அலையின் கல்லா மண்ணா 
ஆட்டத்தில் வென்றது கடல்.
வெட்கம்
காற்றின் கவிதை கேட்டு 
தலைகுனிந்ததா பன்னீர் பூ.
                                          - சாகம்பரி,மதுரை
Category: 
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
 |
	


2 comments:
//மின் தடை
இருட்டென்றால் பயமா
விளக்குடன் மின்மினி பூச்சி//
//விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்//
மிகவும் ரசித்தேன்..:-)
ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம்
ரசிக்கவைத்தது