10:19 |
Author: Ravi
புற்கள் இல்லாத புல்வெளி
வெறும் கட்டாந்தரையாகிட,
மேய்ச்சல் காணாத ஆநிரை
கூட்டத்தில் இருந்து விலகி
பால் வற்றிய மடியுடன்
பயனில்லாத உயிராய்காகிதக் கழுதையாகும்
நகரத்து பகல்வேளைகள்
சற்றே கண்ணயரும் மரத்தடி
பேசும் மொழி புரியாவிடினும்
வழிப்போக்கனின் துணையில்
கரைந்து உணரும் இன்பம்...
ஏதோ கேட்டு பேசி சிரித்தாலும்
இரவில் இதுவும் இல்லாத
தெருவோரத்து சிந்தனைகளில்
அடிமாடாகப் போகும் அவலம்
இங்கேயும்கூட,
பணி ஓய்வு மரணப் போராட்டம்.
-
- Sagampari
Category:
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
|
1 comments:
பணி ஓய்வு மாறுபட்ட கரு... நல்ல கவி... தொடரட்டும் வாழ்த்துக்கள்!