00:41 |
Author: அன்னைபூமி
இதமான அதிகாலைப்பொழுது, அந்த ஆற்றங்கரை ஓரம் நடந்து செல்கையில் ஈரத்தினுடன் இணைந்த அந்த வாசனை, எந்த வெளியில் நடந்தாலும் அந்த வழிப்பாதையும் அதன் வாசமும் நான் எங்கும் சூவாசித்தறியேன். நம் பார்வைக்கு அப்பார்பட்டு பல விசயங்களில் நாம் நம்மை மறந்து அனுபவித்த விசயங்க்களில் வாசனை நுகர்தலும் நம்மை அறியா நம் மனதுக்குள் நுலைந்த ஒரு அழகிய விசயமாகும். உண்ணும் உணவுகளில் இருந்து உடுத்தும் உடைவரை இந்த வாசமும் அதன் தனித்தன்மையும் மாறாதது.
சுவாசம் நம் உயிர் வாழ்வதற்கான விசயம் எனில், வாசம் நம் உணர்வுகளுக்கான விசயங்களில் ஒன்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு முறை நாம் பிரயாணம் மேற்கொள்ளும் போதும் அந்த இடங்களின் காட்சிகள் மட்டும் மனதில் பதிவதில்லை அந்த மண்ணின் வாசமும் நம் நினைவுகளில் பதியப்படுத்தப்பட்டு விடுகின்றன.
நம் பள்ளிப் பருவ நாட்களாகட்டும், கல்லூரி நாட்க்களாகட்டும், பணி செய்த இடமாகட்டும், அதன் வாசனைகளும் நினைவுகளும் நம் நினைவைவிட்டு என்றும் நீங்கியதில்லை. மாலைப்பொழுதில் சாலையோர தேனீர் கடையில் அருந்திய தேனீரின் வாசம், நாம் எந்த பகுதியில் தேனீர் அருந்தினாலும் நம் நினைவுக்கு சட்டென்று வந்துவிடும்.
நமக்கு பிடித்த விசயங்களையும் அதன் அத்தனை பரிணாமங்களையும் நாம் அதிகம் உள்வாங்கிவிடுகின்றோம். அம்மாவின் கைப்பக்குவ சாதம், ரயில் நிலைய சிற்றுண்டிச் சாலை, கோயில் திருணீறு, திருவிழாக்கால மிட்டாய் கடைகள், தேர்வு நேர வினாத்தாள், வயல் வெளிகளின் பசுமை வாசம் என பல விசயங்கள் நம்மையும் அறியாமல் நம் மனதில் பதிந்தவையாகும்.
பழகிய, நாம் பழக்கப்படுத்திவிட்ட பல விசயங்கள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன. எல்லாவற்றிர்க்கும் பதிலாக நாம் எதைத் தேர்ந்தெடுத்தாலும் நம்மில் உரைந்துவிட்ட அந்த வாசம் என்றும் நம் நினைவில் இருந்து நீங்குவதில்லை. தனிமையில் கண்ணில் நிறைந்த காட்சிகளுக்கு உயிர் கொடுபதும் கூட இந்த வாசனை நினைவுகள் தான்.
வாசனை ஒன்றேவும் பல நினைவுகளையும் நம் ஞாபகத்திற்கு கொண்டுவந்து விடுகின்றன. வாசம் மாறாது பலவிசங்களையும் நம் நினைவில் வைத்திருக்கும் என்னற்ற நினைவுகள் நாளடைவில் பழமையென பெயர் பெற்றுவிடுகின்றன, இருந்த போதும் அதன் வாசம் மட்டும் என்றும் மாறுபடுவதே இல்லை. . .
Category:
கட்டுரை
|
2 comments:
//நமக்கு பிடித்த விசயங்களையும் ....தேர்வு நேர வினாத்தாள்.... // அப்படியா...! அதுதான் படிப்பு என்கின்ற தொடர் வண்டியிலிருந்து இறங்கவே மாட்டேன் என்கிறீர்களா? ..வாசம் மனதின் நேசம். இதே போல சில சுவைகளும் ஏதோ ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தும். ரசித்தேன் பிரணவன்.
வணக்கம் அம்மா, நான் இறங்க வேண்டும் என்று நினைத்தால் கூட கற்றல் எங்கின்ற தொடர்வண்டி நிற்கவே மாட்டேன் எங்கின்றது. . .நன்றி . . .