16:58 | Author: பிரணவன்
வீர மன்னர்கள்
வள்ளல் சிகரங்கள்
வாழவைத்த தெய்வங்கள் என
எண்ணில் அடங்கா
இயற்கைப் புனைப்பெயர்கள்
இந்தியர்களுக்கு. . .

அர்த்த சாஸ்த்திரம்
வான சாஸ்த்திரம்
என அடுக்கடுக்காய்
சாஸ்த்திரங்கள் பல
படைத்த இந்தியர்கள்
அடிமையாக்கப்படுவதா
ஆங்கிலேயர்களால். . .

வீரத்திற்கே விதையாய்
இருந்த நம்மவர்கள்
வீழ்ந்துகிடப்பதா
அன்னியன் காலடியில். . .

எத்தனையோ சடலங்கள்
எண்ணற்ற போர்க்கலங்கள்
ஏமாற்றங்கள் பல கண்டும்
எழுச்சி பெற்றது இந்தியா. . .

அகிம்சை அறங்கள்
ஆயுத போராட்டங்கள் என
அடுக்கடுக்காய் தொடர்ந்தன
அச்சுருத்தல்கள் பல
ஆங்கிலேயர் மேல். . .

அறமும் வீரமும் சேர்ந்தது
அகிம்சையும் ஆயுதமும் சூழ்ந்தது
விற்க வந்தவர்கள் வேட்டையாடுவதா?
விரட்டி அடிக்கப்பட்டனர். . .

வீன்போகவில்லை போராட்டங்கள்
சிந்திய ரத்தமும்
போர்க்கல புழுதியும்
எடுத்து திலகமாய் இட்டுக்கொள்ள
பெறப்பட்டது சுதந்திரம். . .
வென்றது இந்திய தேசிய ஒற்றுமை
வந்தே மாதரம். . .வந்தே மாதரம். . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On August 15, 2011 at 5:04 PM , சாகம்பரி said...

வந்தே மாதரம், பாரதத்தாயினை வாழ்த்திடுவோம்.

 
On August 15, 2011 at 6:24 PM , கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்தியாவின் வெற்றி சரித்திரம்....

சுதந்திரதின வாழ்த்துக்கள்...