13:33 | Author: பிரணவன்
அந்நாளில் தேடுதல் என்ற ஒன்றே மனித வாழ்வாதரங்களை பெரிதும் பூர்த்தி செய்வதாக அமைந்தது. உறைவிடம் அற்ற மனிதன் உணவை மட்டுமே தேடினான். காடுகளுக்குள் தன் வாழ்க்கையை தொடங்கிய மனிதன் அவனுக்கு உணவு மட்டுமே பிரதானமாக இருந்தது, பின் ஆற்றங்கரைகளில் குடியேரினான், நெருப்பு, சக்கரம் என அவனது தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆரம்பம் முதலே விலங்குகளை வேட்டையாடி உணவிற்காக மட்டுமே பயன்படுத்திவந்த அவன் பின் நாளில் அதனை தன் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். முதலில் காட்டு ஆடு, பின் யானை பிறகு மாடு என பல வலிய மிருகங்களை தன் இயல்பிற்கு கொண்டுவந்தான்.
                                கிரிஸ்த்து பிறப்பதற்கு 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோதுமை மற்றும் பார்லி பயிரிட்டு வளர்த்ததாக சொல்லப்படுகின்றது, கி.மு 8000 முதல் 6000 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் நெல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது, இந்த காலகட்டத்தில் தான் யானையும் வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
                                 இயற்க்கையை மட்டுமே சார்ந்த இந்த வாழ்வில் நீர்பாசனம் என்ற ஒன்று கி.மு 4500 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது.  பின் இதையடுத்த வேதகாலம், கிரிஸ்த்துவ காலம், போன்ற காலங்களிலும் கூட மக்களில் வாழ்வாதரம் என்பது விவசாய உற்பத்திசார்ந்து தான் அமைந்தைருந்தது. பின் நாளில் மனிதன் கடுமையான உழைப்பில் இருந்து விலகி சுகமாக வாழ்வது என்பதற்கு பழகத்தொடங்கிவிட்டான்.
                                விவசாயம் என்பது பிரதானமாக இருந்த காலம் மாறி இயந்திரத்தொழில்,  அணு, வாகனம், சாயத் தொழில், மின்உற்பத்தி, குளிர் பாணங்கள், மது, கேளிக்கை என அத்தியாவசியம் சாந்துஅல்லாத பல தொழில்கள் உருவெடுக்க தொடங்கிவிட்டன.
                              முன் நாளில் அத்தியாவசியம் என கருதப்பட்டது உணவு, உடை, இருப்பிடம், இந் நாளில் அப்படியா ? எல்லாவற்றிலும் செயற்கையை புகுத்திவிட்டோம். செயற்கை குளிர்பாணம், பாலி எஸ்டர் ஆடைகள், உரைகள், பாதுகாப்பு பெட்டகங்கள், முக்கியமாக தொலைத்தொடர்பு, அணு ஆயுதம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
                           மனிதனின் தன் நிறைவு என்ற ஒன்றே இந் நாளில் இல்லாமல் போய்விட்டது. நாணயங்கள் சங்க காலம் முதலே பயண்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்றது, அவைகள் ஆட்சியாளர்களில் அடையாளங்களை சுமந்த படியே இருந்ததே தவிர பெருவாரியாக புழக்கத்தில் இல்லை, அதாவது சாமானியர்களை சென்றடையவில்லை, பண்டமாற்று முறையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது, பண புழக்கம் என்பதே ஆங்கிலேய ஆட்சியிலேயே கொண்டுவந்தாதாக சொல்லப்படுகின்றது, ஆனால் இந்தியாவில் மூன்று இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை அந் நாளில் இருந்து இன்றளவும் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
                       இந் நாளில் உற்பத்தியின் மதிப்பு குறைந்து நாணயத்தின் மதிப்பு மட்டுமே அதிகரிக்க தொடங்கிவிட்டது. நெல் உற்பத்தியில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு 25காசு மட்டுமே லாபம் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத உன்மை. ஆனால் விவசாயம் அல்லாத பிறதொழிலில் ஈடுபடுபவர்கள் அடையும் நிகரலாபம் 3 முதல் 5 மடங்கையும் தாண்டி செல்கின்றது. இங்கே வாங்கி விற்பவர்களுக்குத்தான் அதிக லாபம்.
                       மனிதனின் அத்தியாவசியத்திற்காக வேலை செய்பவன் தன் உடல் உழைப்பையும் கொடுத்து குறைவான லாபத்தையே அடைகின்றான், மாறாக ஒரு தொலைதொடர்பில் வேலை பார்ப்பவனோ, கணினியில், சொகுசு வாகனங்கள், பொருட்கள், மதுபாண உற்பத்தி என இதன் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது. இயற்கை பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீதான கவனம் குறைவுதான்.
                          விவசாயம் மீதான கவனம் குறைந்து, சொகுசு வாழ்க்கை மீதான கவனமே அதிகரித்துவிட்டது. . .

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On September 27, 2011 at 5:30 PM , Ramani said...

அருமையான பதிவு
இப்போதெல்லாம் அனைத்து வகைகளிலும்
இடையில் இருப்பவர்களே அதிகம்
பயன் பெறுகிறார்கள்
வாழைப்பழம் தோட்டத்தில் ஐம்பது காசு என்றால்
நம்க்கு அது இரண்டு ரூபாய்க்கு வந்து சேருகிறது
ஐம்பது காசு இடைச் செலவு எனக் கொண்டால் கூட
நடுவில் ஒரு ரூபாய் வியாபாரிகளிடம்தான்
தங்கிவிடுகிறது
சிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள் த.ம 1

 
On September 27, 2011 at 5:51 PM , சாகம்பரி said...

ம்..., பிரணவன் சொல்வது அத்தனையும் உண்மை. வரும்காலத்தில் அரிசிக்கு பதிலாக கார்போஹைட்ரேட் மாத்திரகளை சாப்பிடத்தயாராக வேண்டும்.

 
On September 27, 2011 at 6:07 PM , "என் ராஜபாட்டை"- ராஜா said...

நல்ல விழிப்புணர்வு பதிவு

 
On September 27, 2011 at 9:54 PM , thozhargal said...

நன்றி ரமணி sir. உன்மையில் நம்முடைய தேடல் என்பது அத்தியாவசியம் என்பதை தாண்டி ஆடம்பரம் என்ற அளவில் சென்றுவிட்டது. . .

 
On September 27, 2011 at 10:01 PM , thozhargal said...

அப்படித்தான் ஆகிவிடப்போகின்றது அம்மா, விவசாய நலனுக்கா கடன் கொடுக்க வங்கிகள் இருந்தாலும், credit card க்கு கிடைக்கும் மரியாதை இவர்களுக்கு கிடைப்பதில்லை. . .

 
On September 27, 2011 at 10:03 PM , thozhargal said...

வாழ்த்துரைக்கு நன்றி ராஜா சகா. . .

 
On September 27, 2011 at 10:03 PM , சீனுவாசன்.கு said...

ப்ளீஸ்…சீனுவாசன் பக்கங்களுக்கும்
ஒரு வாட்டி வாங்க!
நல்லா இருக்கா சொல்லுங்க!
வாங்க பழகலாம்!...

 
On September 27, 2011 at 10:35 PM , thozhargal said...

நிச்சயம் சகா.......நன்றி

 
On September 28, 2011 at 12:34 PM , Anonymous said...

விவசாயம் மீதான கவனம் குறைந்து, சொகுசு வாழ்க்கை மீதான கவனமே அதிகரித்துவிட்டது. . .

-சரியா சொன்னிங்க....
ஒவ்வொரு விளைபொருட்களில்
விவசாயிகளின் உழைப்பு இருப்பது
அதன் முக்கியதுவதும் யாரும் அறிவதில்லை