00:04 |
Author: அன்னைபூமி
தமிழர் பண்பாட்டில் ஈகை ஒரு கடமையாக கருதப்பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை தீர்த்த பல செல்வந்தர்கள் தன்னலம் பாராமலும் செருக்கு இல்லாமலும் தேடிவந்த பலருக்கு தங்களால் இயன்றவரை அன்புக்கரம் நீட்டி இருக்கின்றனர். வள்ளுவர் தமது குரலில், ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்றவர் கையில் பொருள் கொடுப்பது எல்லாம் தனக்கு ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும். என்று சொல்லி இருக்கின்றார்.
குரல்
"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து"
பண்டமாற்று முறை என்ற பழக்கமே மனிதனின் தேவை கருதி தான் வழக்கத்திற்கு வந்தது, பின் இந்த தேவை என்ற பயன்பாடு மட்டும் தொடர்ந்து ஈகை மறுக்கப்பட்ட பின் மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஆனால் ஈகை இன்றளவும் அதன் தன்மையில் பல நல்ல உள்ளங்களில் வழக்கில்லிருந்து கொண்டுதான் இருக்கின்றது. . .
இனிவரும் களங்களில் மாறிவிட்ட மறக்கடிக்கப்பட்ட நம் மரபுகளை நினைவு கூறுவோம். நன்றி. . .
Category:
தமிழர் பண்பாடு
|

0 comments: