23:14 | Author: அன்னைபூமி
கூத்துக்கலையில் வீழ்ந்து ஆடும் ஆட்டங்கள்

துடி
       கடலின் நடுவே ஒளித்த சூரபதுமனை வென்ற பிறகு அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி கொட்டியாடிய கூத்துத் துடி என்ப்படும்.

கடையம்
        வாண்னுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய மனைவி அயிரானி உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து கடையக்கூத்து எனப்படும். இதற்கு உறுபுகள் ஆறு.

பேடு
       மன்மதன் தன் மகனான அநிருத்தனைச் சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரில் பேடி உருவம் கொண்டு ஆடிய ஆடல் பேடு எனப்படும். இது நான்கு உறுப்புக்களை உடையது.

மரக்கால்
       கொற்றவை முன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக்கருதிப் பாம்பு, தேள் முதலிய ஏவிவிட, அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழுக்கி ஆடிய ஆடல் இது. இதற்கு நான்கு உறுப்புகள் உண்டு.

பாவை
       அவுணர்கள் மோகித்து வீழ்ந்து இறக்கும் படி ஆடிய கூத்து இது, இப்பாவைக் கூத்து மூன்று உறுப்புக்களையுடையது.

இப்பதினொரு வகை ஆடலையும் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகின்றது.
இந்தப் பதிப்புடன் கூத்த்துக்கலை முடிவு பெற்றது.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.