05:18 |
Author: Ravi
நம்மை நாமே வடிவமைத்துக் கொண்டோம்
பலவேறு வடிவமாக சிதறியிருந்தோம்
ஒரே பெயரில் ஒன்று சேர்ந்தோம் - இந்தியா
பிரிக்கப்பட்ட பல கோடுகளாய் இருந்தோம்
யாரோ தீண்டிவிட அழித்து எழுதப்பட்டது
ஆரம்பமும் முடிவுமான எல்லை கோடானோம்
ஆட்சி முறையின் சதுரங்கத்தில்
தோல்வி எதிர்பார்த்து கேலியாய்
காத்துக்கிடந்த அத்தனை பேருக்கும்
கரித்தூள் பூசி பதில் தந்தோம்
சின்னக் குழந்தையின் கிறுக்கலாக இல்லாமல்
தலைவிதியை தெளிவாக்கினோம்
நம்மை நாமே நிர்ணயித்தோம்
இன்றும் மூன்று கடல் சூழ
நான்கு புறமும் எதிர்ப்பு நிற்குது
என் பாரதத்திற்காக இன்னுயிர் தந்த
அத்தனை பெயர்களையும் நினைவுறுத்தி
சிந்தப்பட்ட குருதியில் எம் மூச்சாக
இனவாதம் மதவாதம் பலியிட்டு
இம்மண்ணை மதித்து இந்தியனாவோம்
Category:
கவிதை
|
0 comments: