00:54 | Author: அன்னைபூமி
அழகழகாய் வண்ண வண்ண புட்டிகளில் அடைபட்டிருக்கும் இவைகள் பலரின் கவலைகளையும், மனக்குமுறல்களையும், பலதரப்பட்ட நினைவலைகளில் இருந்தும் அவர்களை நிலைமறக்கச்செய்யும் இனிமையான அழகிகள். சில இனிப்பான நேரங்களின் போதும் ரசமேற்றிக்கொடுப்பதும் இதுதான். மது மனிதர்கள் கவலை மறக்கவும் சந்தோசமாய் இருக்கவும் பயன்படுகின்றது என்றால் அது உன்மைய்யா? இதற்கு ஆம் என்றே பதில் சொல்லியே ஆகவேண்டும்.
                         இன்றைய சூழலும் தொடர்பும் அப்படி மனிதர்களை மாற்றிவிட்டது, என்றல் அது உன்மைதான். கிராமங்களில் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக மதுக்கடைகள் காணப்படுகின்றன. கிராமங்களிலேயே இந்த நிலை என்றல் நகரங்களைச் சொல்லவா வேண்டும். ஆம் சொல்லித்தான் ஆகவேண்டும். வசதி படைத்தவர்கள் சென்று மகிழயென குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள், ஒளி மங்கிய விளக்குகள் என மரணத்தை வரவேற்கும் மயாணங்கள் பல.
                        மனிதனின் சோகம், மகிழ்ச்சி, என்பதை தாண்டி திருவிழாக்கள், திருமணங்கள், இறுதி ஊர்வலம் என அத்தனைகளிலும் தனது முத்திரையை பதித்துவிட்டது இந்த மது. இதற்கு யார் காரணம்?
                       சற்று காலத்திற்கு முன்னர் அன்றைய நாட்களில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மிககுறைவு, வயதில் மூத்தவர்களும் உடல் வருந்தி உழைப்பவர்களும் மட்டுமே செல்லும் பழக்கம் இருந்தது. இளைஞ்கர்கள் மூத்தவர்களின் வார்த்தைக்கு பயந்து நடத்தையில் ஒழுக்கத்தை பின் பற்றினர். அவர்களின் சிந்தனையும் அன்றைய சூழலும் வேறு.
                       திருவிழாக்களும், திருமணநிகழ்வுகளும், விளையாட்டுகளும் அதன் சடங்குமுறைகளும் அன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறையை சந்தோசமாகவும், சீறிய நெறிமுறையோடும் வழிநடத்தியது என்றால் அது மிகையில்லை.
                       இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றிர்க்கும் ஆரம்பமும் முடிவுமாக மதுக்கடை இருக்கின்றது. ஆம் கல்லூரியில் சேர்ந்ததில் தொடங்கி முதல் மதிப்பெண், புது வண்டி, முதல் காதல், காதல் தோல்வி, திருமணம், முதல் குழந்தை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
                      படித்தவர்கள் முதல் பாமரர் வரை மது ஊடுருவியதற்கு யார் காரணம். எண்ணில் அடங்கா மதுக்கடைகளா? இது தவறில்லையென  மாற்றிவிட்ட சமூகமா? தனி மனித ஒழுக்கத்தை கை உதரிவிட்ட நல்ல உள்ளங்களா? இல்லை வழினடத்த வேண்டிய ஆசானா, அரசனா? யாரைச்சொல்ல.
                      தவறுகள் பழகிப்போனதால் சரியென்று ஆனது. பல குடும்பங்களின் வழ்வும் பறிபோனது. பழகிய காரணத்தால் கைவிட முடியாத விஷ்வாசியாகிவிட்டது மதுவும்.
                         தன்னிலை தவறுதலில் காரணமாகவே சமூகத்தில் தவறுகல் நிகழ்கின்றன. எனவே எந்த பிரச்சனைக்கும் யாரையும் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. தனி மனித ஒழுக்கமே சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்யும். சுய ஒழுக்கமே இன்றைய சமூகத்தை மாற்றும்.
                    எது வாழ்க்கைக்குத்தேவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், யாருக்காகவும் தவறுசெய்வதற்காக இனங்கிப் போகாதீர்கள். நன்றி. . . .!!!!!!!!!!   
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: