12:15 |
Author: அன்னைபூமி
எத்துனை உறவுகள் வந்தாலும், மனதிற்கு வலிமையாகவும், வாழ்க்கையின் இருதிவரை நம் தோழோடு தோழாக வரும் துணை தோழன் மட்டுமே. இந்த உழகத்தில எதிர்பார்ப்பும் பங்கீடும் இல்லாமல் உறவுகள் இல்லை. இவைகள் அணைத்தும் இருந்தாலும் இல்லாவிட்டாலும். என்றும் நம்முடன் வழித்துனையாய் வருவது நட்பு மட்டுமே. நட்பில் விரிசல்களும் புரிதல்களும் அதிகம். தேடுதலும் புரிதல் தன்மையும் இல்லாமல் எதுவும் கிடைப்பதும் இல்லை, எதுவும் நிலைப்பதும் இல்லை.
"பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்துஆங்கு அமையாக் கடை"
உரிமையோடு நண்பன் செய்தனவற்றிற்கு உடன்படாவிட்டால் பழகின நட்பினால் என்ன பயன்.
"கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்"
நண்பனின் குற்றத்தைப் பிறர் சொன்னாலும் நம்பாதவர்க்கு, தம் நண்பன் குற்றம் செய்தால், அது அன்றைய சூழலின் குற்றமாகவே தோன்றும், அவர் செய்ததாக கருதப்படாது. . .
20:03 |
Author: அன்னைபூமி
அகண்ட பெரிய விழிகள்
பட்டாம்பூச்சி இமை
வில்லாய் வளைந்த புருவம்
விரிந்த நீண்ட காதுகள்
மூக்கின் நிறமோ வெள்ளி
சாம்பல் நிற உடல்
காலணி அணிந்தது போல்
வெள்ளை நிற கால்கள்
திமிரில்லை
தோழமையான உயரம்
தொழிலாளியின் நண்பன்
அடிமையான வீட்டு விலங்கு
காணாமல் போன இனம்
வீதியோரத்து இளவரசன்
எத்தனையோ புகழலாம்
ஆனாலும்.....
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது
18:37 |
Author: அன்னைபூமி
அழுக்கு நிறத்தில்
நாய் குட்டி ஒன்று
வாலை ஆட்டி நிற்க
பிய்த்து போடப்பட்ட
பெட்டிக் கடை
ரொட்டித் துண்டை
எடுப்பதற்குள்
கொட்டி தீர்த்தது மழை!
என் விருப்பமில்லாமல்
தவறவிட்ட எனக்கான
சந்தர்ப்பங்களை போல
அவை கரைந்து ஓட....
கையாலாகாத கோபத்துடன்
நாய்குட்டியும் நானும் !
- சாகம்பரி, மதுரை
18:21 |
Author: அன்னைபூமி
நிமிசமாய் வேர்த்துக் கொட்டியது
காந்தி சிரித்த ஐம்பது ரூபாய்
எங்கேயோ தொலைந்து விட்டது
கையில் இருந்த தொகையில்
அது ஒன்றும் பெரிதில்லை
ஆனாலும் உழைப்பின் அருமை
கவனமின்மையை கண்டித்தது
கடைவீதி மூலையில் எண்ணினால்
கணக்கு குறைந்து கவலை வந்தது
துணிக்கடையிலா? நகைக்கடையிலா?
மறந்ததோ... மறைந்ததோ....
கண்மூடி திறந்தால் எதிரே....
நோட்டுகளும் சில்லரையுமாய்
கைகளை நீட்டி "அண்ணா" என்றபடி
மொத்த மானிட இனத்தின்
நம்பிக்கை வில(ள)க்கமாய் ....
பூ வாங்கியது இவளிடமோ...?
நன்றி தந்து வாங்கிய பணத்தை
பையில் வைத்த நொடி....
நேர்மையின் இருப்பிடம் காரணம்
வறுமையா... பள்ளிச் சிறுமி என்பதாலா
இதய ஓரத்தில் அநியாயமாய்
தராசு தாழ்ந்து கேட்டது
ஐம்பதிற்கு என்பது சிறிய தொகையோ?
அடுத்த நொடியில்........
தாழ்ந்த தட்டில் கனத்த இதயம்
சிந்தனை தாழேல் என்றது
Category:
|
21:50 |
Author: அன்னைபூமி
உச்சகட்ட வெளிப்பாடு, முடிந்து
புல்லின்மீது பனித்துளியாய்
உரசிப்பார்க்கின்றேன் அதன்
மழையில் நனைந்திருக்கின்றேனா
என்னுள்ளும் – குழப்பத்தில்
விடியலுக்காய் காத்திருக்கும்
திரும்புகின்றேன் அழுத்தங்கள்
வாழ்க்கைப்பாதையிலும். . .
ஓடுகிறேன் வாழ்க்கையைத்தேடி
பார்ப்பதர்க்குள் விடிந்தது
என்வாழ்க்கைப் பயணத்திற்கு
நினைவுகளுக்கு உயிர்கொடுத்தவன்
( காதலை அறிந்திடாத ஒருத்தி, காளையன் ஒருவனை கண்டு அவன் செயல்பால் ஈர்க்கப்பட்டு, காதல் பூத்து அதை அவனிடம் சொல்லும்முன், அவன் ஏதோ ஒரு காரணத்தால் இறக்க. பூத்ததும் உதிர்ந்த காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் எண்ணிப் புலம்புகிறாள் )
00:57 |
Author: அன்னைபூமி
நீ கவிதை கேட்டால்
வார்த்தைகள் பத்தாதடி - தமிழில்
வானம்வரை நீண்டு விடுகின்றது
உன்னைப் பற்றிய கற்பனைகள்
என்னுள். . .
00:33 |
Author: அன்னைபூமி
எத்துனை இதயங்கள் இருந்தாலும், ஒரு இதயத்திற்காக துடிக்கவும், இறக்கவும் துணிவதுதான் காதல். காதல், அனைத்தையையும் அழகாய்காட்டும். காதல் இறக்கை கட்டிப்பறக்கும் ஒரு சிந்தை கலங்கிய பறவை. எந்த திசையும் தெரியாத ஒரு அழகான கடல் பகுதி. வின்மீங்கள் நிரப்பப்பட்ட செவ்வானம். ஒரு முழுச்சந்திரன். இப்படி காதலை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். காதல் அழகானது தான் ஆனாலும் அன்றில் இறுந்து இன்று வரை பெற்றோரின் புரிதலுக்கு அப்பார்பட்டதாக உள்ளது. இதில் நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லையா?. இல்லை அவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையா?. ஆனால் காதலில் புரிதல் மட்டும் அவசியம். காதலை இன்று பலரும் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர், எடுத்தவரெல்லாம் வென்றுவிட்டால் காதல் மரம் இன்று படிமமாய் மாறியிருந்திருக்காது. காதலுக்கென்று தனி வரையரை ஒன்றும் இல்லை. அது கையில் எடுத்தவர்களின் கண்ணோட்டத்தை பொருத்தது. பலதரப்பட்டவர்களும் காதலை அனுவிக்கின்றனர் ஆனால் வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ்கின்றனரா? என்றால் அது அவரவர்களைச் சார்ந்தது.
காதலிக்கத் தொடங்கும் முன் தயவு கூர்ந்து உங்களின் குடும்ப சூழ்நிலையை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். காதல் பிறப்பதற்கு எந்த தருணமும் தேவை இல்லை, ஆனால் பிறந்தது காதலா? இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கின்றதா என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
காதலில் வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள் பற்றி நீங்கள் கவலை படத்தேவை இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் நடந்தன வற்றை உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு நடந்தன அனைத்தும் உங்களுக்கு நடக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ஒருவேலை அதற்கு மேலும் நடக்கலாம்.
காதல் செய்வதற்கு தகுதிகள் தேவையில்லை ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக தகுதிகள் அவசியம். காதலின் மேல் சமுதாயத்தின் பார்வையில்லை, ஆனால் அதுவே திருமணமாக மாறும் போது அனைவரின் பார்வையும் காதலர்களின் மேல் திரும்புகின்றது. எதையும் எதிர்பார்க்காமல் வந்த காதல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யமுடியாமல் இறுதியில் தோல்வியில் முடிகின்றது.
21:29 |
Author: அன்னைபூமி
வெயில் காலத்திலும் துள்ளியோடும்
வெள்ளி நீரோடை குளிர் குளியல்
பச்சை பட்டுடுத்திய அழகராய்
மருத நிலத்து மரங்கள் தலையசைக்க
பூமிக்கும் ஆடை தரும் புல்வெளி
கால் நடைகளுக்கும் சிற்றுண்டி சாலை
வேலியோரத்து வீரர்களாய் குறு மரங்கள்
ஆடுமாடுகளுக்கு அனுமதி மறுத்த
உள் நாட்டு தூதரகங்கள் அவை
கரடுமுரடான பாதைகள் கால் வலிக்க
நீல வானம் கண்ணுக்கு குளிர்ச்சி
அப்படியே ஏறியது குறிஞ்சி நிலம்....
எவ்வளவுதான் கற்பனை செய்வது
டிஜிட்டல் திரையில் வண்ணக்கோடுகள்
முப்பரிமாண தோற்றத்தின் மாயாஜாலம்
குளிரூட்டப் பட்ட அறையின் உதவியுடன்
கொஞ்சம் நம்பினாலும் தொலைதூரத்தில்
விமானத்தின் ஓசை கிளம்பி
சங்க காலத்திலிருந்து சட்டென
காதை பிடித்து இழுத்து வந்து
அத்தனை கவலைகளையும் ஆரம்பித்தது.
00:46 |
Author: அன்னைபூமி
மது இல்லாத தமிழகம் உருவாகுமா? இந்த கேள்விக்கு முதலில் மதுவை எதிர்க்கும் பல கூட்டங்கள் மக்கள் மத்தியில் உருவாகி இருந்திருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடந்ததாக தெரியவில்லை, மாறாக இன்றைய நிலையில் மது அருந்துவோர் மறுவாழ்வு மையங்கள் தான் பல இடங்களிலும் காணப்படுகின்றன. மதுவை வைத்து வாழ்வது பல குடும்பங்களா? இல்லை சாவது பல குடும்பங்களா? என்றால் சாதல் தான் அதிகம். ஆனால் இன்று இது வெளிப்படையாக தெரியவில்லை, காரணம் மது மக்களிடையே ஊரிப்போய் விட்டது. மதுவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் செயல்களை பொருத்துக்கொல்லும் சமூகமும் சூழலலும் இன்று உறுவாகிவிட்டது.
ஒரு செயலை நாம் செய்ய வேண்டும் என்றால் அதை பற்றிய அறிமுகமோ அல்லது அதில் முன்னோடியாக இருப்பவர்களின் வழிநடத்துதலோ தேவைப்படுகின்றது, செயலுக்கான கலமும் நம் அருகில் இருப்பது அவசியம். நாம் எதிர்பார்க்கும் ஒரு வேலைக்கே இத்துனை படிகள் என்றால், மது அருந்துவதர்க்கு? இதில் ஒரு அவசியமும் இல்லை, ஒரு முறை வாசம் பிடித்துவிட்டால் நம் நாசித்துளைகளை விட்டு இவைகள் அகல்வதே இல்லை. இப்படி ஒருவரால் அறிமுகபடுத்தப்பட்டு பின் நம்மால் பலருக்கு பயணிக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க ஒருவருமே இல்லை.
நம் மனச்சோகங்களை பகிர்ந்துகொள்ள, இறக்கிவைக்க பின் என்னதான் வழி எங்கின்றீர்களா? இதற்கான பதிலையும் வழிமாறி நடந்த நாம் தான் யோசித்தாக வேண்டும். எந்த ஒரு மனிதனிடத்தும் போதைக்கான தேடல் இல்லாமல் இல்லை. இன்றைய சூழழில் மது ஒரு சிறந்த வழித்தடம். பலரும் இந்த முட்பாதையில் நடந்து இதை சிறந்த பாதையென பெயர் மற்றம் செய்து பெயர்பலகை அடித்துவைத்துவிட்டனர். உடனடியாக இந்த பாதை அடைக்கப்பட்டுவிட்டால், பயணிப்பவர்கள் பாதை மாறி போவார்களோ என்ற பயமும் எழுகின்றது. இதற்கு சிறந்த வழி பாதையை இன்னும் அதிகப்படுத்தாமல் முதலில் குறுகளாக்கி பின் அதை அடைத்து விடலாம். நமது வாழ்வில் இன்றுவரை தொடர்ந்து வந்த இந்த மதுவை நாம் கைவிட்டே ஆகவேண்டும்.
மக்களின் வழ்வில் அதீதம் ஊறிவிட்ட இந்த மது இன்று அரசுடமை ஆக்கப்பட்டு, புத்தாண்டுக்கும், தீபவளிக்கும் 70 கோடிகள் 80 கோடிகள் என்று வருமாணம் ஈட்டித்தரும் நல்ல லாபகரமாண தொழிலாக உருப்பெற்றுவிட்டது. நாளை மதுக்கடை விடுமுறை என்றால் முதல் நாளே பல புட்டிகளை வாங்க்கிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு நாள் கூட இதை பிரிய மனம் இல்லாமல் இப்படியும் செய்கின்றனர் பலர். மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடும் நிலை வரும் என்றான் பாரதி, இன்று அழித்தே சாப்பிடும் நிலைக்கே வந்துவிட்டோம்.
அரேபிய நாடுகளில் மதுவே கிடையாது, மது அருந்துவது குற்றம்.ஏன் பஞ்சாப்பில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் மதுவிலக்கு நடைமுறை படுத்தப்பட்டால் இனி வரும் நம் இளைய தலைமுறை சிறந்த தலைமுறையாக மது வாசம் அற்ற தலைமுறையாக மலரும் என்பதில் வியப்பேதும் இல்லை.முதலும் முடிவுமாகச் சொல்லப்போனால் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, நம் உயிருக்கு கேடு.!!!!!!!!!
05:46 |
Author: அன்னைபூமி
நேற்று கடைவீதியில் வண்ண விளம்பரம்
" விளம்பரம் செய்ய இங்கே அணுகவும்"
விளம்பரத்திற்கும் விளம்பரம் தேவை
அது வியாபாரம்.......
தோட்ட மூலையில் தொட்டி மறைவில்
குழந்தையாய் ஒற்றை ரோஜா
வீட்டுக்கூரையில் உச்சியில் பெரிதாக
பூத்திருந்தது மஞ்சள் பூசணிப்பூ
விளம்பரதாரர் விருப்பம்
கிடைத்தென்னவோ பூசணிக்குதான்
உச்சியில் இருந்தால்தான்
ரோஜாவிற்கும் மதிப்பு
சமதளத்திலிருந்து உயர
உயர செல்ல மாற்றம் தேவை
வாழ்க்கை மாற்றங்களின் இயந்திரசாலை
பட்டுப்புழு பூச்சியாக அழவில்லை
பட்டம் உயரப் பறக்க பயப்படவில்லை
வானவில் மறைவதை நினைப்பதில்லை
கல் சிலைக்கு உளிவலி வலித்ததில்லை
கற்றுக்கொள்!
மலை உச்சியை நோக்கியே பயணம்
விழி அடிவாரத்திலேயே நிற்பதேன்?