00:46 | Author: அன்னைபூமி

மது இல்லாத தமிழகம் உருவாகுமா? இந்த கேள்விக்கு முதலில் மதுவை எதிர்க்கும் பல கூட்டங்கள் மக்கள் மத்தியில் உருவாகி இருந்திருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடந்ததாக தெரியவில்லை, மாறாக இன்றைய நிலையில் மது அருந்துவோர் மறுவாழ்வு மையங்கள் தான் பல இடங்களிலும் காணப்படுகின்றன. மதுவை வைத்து வாழ்வது பல குடும்பங்களா? இல்லை சாவது பல குடும்பங்களா? என்றால் சாதல் தான் அதிகம். ஆனால் இன்று இது வெளிப்படையாக தெரியவில்லை, காரணம் மது மக்களிடையே ஊரிப்போய் விட்டது. மதுவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் செயல்களை பொருத்துக்கொல்லும் சமூகமும் சூழலலும் இன்று உறுவாகிவிட்டது. 
                  ஒரு செயலை நாம் செய்ய வேண்டும் என்றால் அதை பற்றிய அறிமுகமோ அல்லது அதில் முன்னோடியாக இருப்பவர்களின் வழிநடத்துதலோ தேவைப்படுகின்றது, செயலுக்கான கலமும் நம் அருகில் இருப்பது அவசியம். நாம் எதிர்பார்க்கும் ஒரு வேலைக்கே இத்துனை படிகள் என்றால், மது அருந்துவதர்க்கு? இதில் ஒரு அவசியமும் இல்லை, ஒரு முறை வாசம் பிடித்துவிட்டால் நம் நாசித்துளைகளை விட்டு இவைகள் அகல்வதே இல்லை. இப்படி ஒருவரால் அறிமுகபடுத்தப்பட்டு பின் நம்மால் பலருக்கு பயணிக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க ஒருவருமே இல்லை.  
                           நம் மனச்சோகங்களை பகிர்ந்துகொள்ள, இறக்கிவைக்க பின் என்னதான் வழி எங்கின்றீர்களா? இதற்கான பதிலையும் வழிமாறி நடந்த நாம் தான் யோசித்தாக வேண்டும். எந்த ஒரு மனிதனிடத்தும் போதைக்கான தேடல் இல்லாமல் இல்லை. இன்றைய சூழழில் மது ஒரு சிறந்த வழித்தடம். பலரும் இந்த முட்பாதையில் நடந்து இதை சிறந்த பாதையென பெயர் மற்றம் செய்து பெயர்பலகை அடித்துவைத்துவிட்டனர். உடனடியாக இந்த பாதை அடைக்கப்பட்டுவிட்டால், பயணிப்பவர்கள் பாதை மாறி போவார்களோ என்ற பயமும் எழுகின்றது. இதற்கு சிறந்த வழி பாதையை இன்னும் அதிகப்படுத்தாமல் முதலில் குறுகளாக்கி பின் அதை அடைத்து விடலாம். நமது வாழ்வில் இன்றுவரை தொடர்ந்து வந்த இந்த மதுவை நாம் கைவிட்டே ஆகவேண்டும்.           
                          மக்களின் வழ்வில் அதீதம் ஊறிவிட்ட இந்த மது இன்று அரசுடமை ஆக்கப்பட்டு, புத்தாண்டுக்கும், தீபவளிக்கும் 70 கோடிகள் 80 கோடிகள் என்று வருமாணம் ஈட்டித்தரும் நல்ல லாபகரமாண தொழிலாக உருப்பெற்றுவிட்டது. நாளை மதுக்கடை விடுமுறை என்றால் முதல் நாளே பல புட்டிகளை வாங்க்கிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு நாள் கூட இதை பிரிய மனம் இல்லாமல் இப்படியும் செய்கின்றனர் பலர். மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடும் நிலை வரும் என்றான் பாரதி, இன்று அழித்தே சாப்பிடும் நிலைக்கே வந்துவிட்டோம். 
                         அரேபிய நாடுகளில் மதுவே கிடையாது, மது அருந்துவது குற்றம்.ஏன் பஞ்சாப்பில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் மதுவிலக்கு நடைமுறை படுத்தப்பட்டால் இனி வரும் நம் இளைய தலைமுறை சிறந்த தலைமுறையாக மது வாசம் அற்ற தலைமுறையாக மலரும் என்பதில் வியப்பேதும் இல்லை.முதலும் முடிவுமாகச் சொல்லப்போனால் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, நம் உயிருக்கு கேடு.!!!!!!!!!
                           

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: