20:03 |
Author: அன்னைபூமி
அகண்ட பெரிய விழிகள்
பட்டாம்பூச்சி இமை
வில்லாய் வளைந்த புருவம்
விரிந்த நீண்ட காதுகள்
மூக்கின் நிறமோ வெள்ளி
சாம்பல் நிற உடல்
காலணி அணிந்தது போல்
வெள்ளை நிற கால்கள்
திமிரில்லை
தோழமையான உயரம்
தொழிலாளியின் நண்பன்
அடிமையான வீட்டு விலங்கு
காணாமல் போன இனம்
வீதியோரத்து இளவரசன்
எத்தனையோ புகழலாம்
ஆனாலும்.....
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது
Category:
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
|
2 comments:
சுவையான கவிதை வாழ்த்துக்கள்..
/////
கழுதை என்று திட்டியபோது
கொஞ்சம் இறங்கினாற்போல்
உள்ளுக்குள் எங்கேயோ வலித்தது//////
அருமையான டச்சிங்..
கவிதை வீதியும் தங்களை அன்போடு அழைக்கிறது..