21:50 |
Author: அன்னைபூமி
( பெண்பால் கூற்று )
என் உணர்வுகளின்
உச்சகட்ட வெளிப்பாடு, முடிந்து
இன்றுடன் ஒருவருடம்
ஆகிவிட்டது. . .
கல்லூரி கனவுகளில்
நானும் கால்பதிக்கின்றேன்
புல்லின்மீது பனித்துளியாய்
புதிதாக. . .
அன்னையின் அரவணைப்பு
அதற்கடுத்து தோழிகளுடன்
கைகுலுக்கினேன் எனைமறந்த
உணர்வுகளுடன். . .
இரவுகளில் மட்டுமே
கனவுகளை ரசித்தஎனக்கு
பார்க்கும் இடமெங்கும்
பசுமையாய். . .
ஊமை உணர்வுகளுக்கு
செவிசாய்க்கின்றேன் அதன்
உச்சரிப்புமொழி என்னவாக
இருக்குமென்று. . .
மலர்ந்த உணர்வுகள்
உதிராமல் இருக்க
மண்ணின் ஈர்ப்புவிசையை
எதிர்க்கின்றேன். . .
என் மனக்கண்ணடியில்
ஒவ்வொரு நினைவையும்
உரசிப்பார்க்கின்றேன் அதன்
நிலைதெரியாமல். . .
மழையில் நனைந்திருக்கின்றேனா
ஒருமுறை கூடஇல்லை
இன்று நனைகின்றேன்
மாலைத்தூரலில். . .
சாரலின் நடுவே
பூமனம் பூக்களின்
மேலே நீர்த்துளி
உணர்வுகளாய். . .
மலர்சுமந்து வரும்
தாமரை முகம்
கைகள்நீட்டியது காசுக்காக
வாங்கினேன். . .
மனதின் பிரதிபிம்பங்களை
வானில் வெளிச்சமிட
கிழக்கே உதித்ததோர்
வானவில். . .
என்னைத்தவிர வீதியில்
எவருமில்லை இன்றுதான்
இன்பம் கொண்டாடினேன்
இயற்கையோடு. . .
தென்றல் காற்றும்
பனி மூட்டமும்
இரவுப்பொழுதை இனிமையாய்
வரவேற்தன. . .
என் நிழலின்
உருவை இறுதியாய்
பார்ப்பதர்க்கு சற்றே
தலைசாய்கின்றேன். . .
தெருவிளக்கின் ஒளியில்
கறுப்புநிற ஆடையில்
சூரியனை விழியில்சாய்த்த
ஒருவன். . .
மீண்டும் மீண்டும்
ஒரே வழிப்பாதையில்
வெவ்வேறு சூழ்நிலையில்
என்பின்னே. . .
பருவ மாறுதல்கள்
பூமியில் மட்டுமல்ல
என்னுள்ளும் – குழப்பத்தில்
நான். . .
என்னுள்ளே ஏதோஓர்
உணர்வுகளை உண்டாக்கும்
அவன் வழிகள்
கனவுகளில். . .
அதிகாலைப் பாடல்
விழித்தெழும் சூரியன்
விடியலுக்காய் காத்திருக்கும்
மேகங்கள். . .
கதிர்களின் ஒளியில்
கண்களின் இமைதிறந்து
கால்கள் நடக்கின்றேன்
சாலையில். . .
இதய அதிர்வுகள்
இம்சையாய் துடிக்க
என்நிலை மாற்றியவன்
என்னருகே. . .
கருங்குகைக்குள் காதுகள்
திறந்ததென அவன்
உதிர்த்த வார்த்தைகள்
இதயஅறையில். . .
அர்த்தங்கள் புரியவில்லை
அவஸ்தைகளும் தீரவில்லை
மனம்சொன்ன வார்த்தைகள்
மந்திரங்களாய். . .
தேகத்தை தொட்ட
தென்றலால் நினைவு
திரும்புகின்றேன் அழுத்தங்கள்
உள்மனதில். . .
இதயம் நுழைந்தவன்
என்ன சொன்னான்
எளிதில் புரியவில்லை
எனக்கு. . .
நிலவின் முகம்
பிரதிபலிக்கும் குளம்
கல்லெரிந்து கலங்கியது
காதல். . .
என் வழிப்பாதையில்
பயணித்த அவன்
நிஜங்களின் உருவாய்
வாழ்க்கைப்பாதையிலும். . .
காதல் நுழைந்த்து
கனவுகள் பிறந்தது
பார்வைகள் அனைத்தும்
புதுமையாய். . .
வழிமாறி நடந்தேனோ
வாரங்கள் கடந்தும்
காணவில்லை கண்கள்
அவனை. . .
காதலின் கைகளில்
எப்படி விழுந்தேன்
இமைமறந்து பிரிகின்றது
கண்ணீர்த்துளி. . .
ஏதோ ஒருநாள்
இதயம் கணத்தது
யாரிடமும் பேசாதவள்
கேட்கின்றேன். . .
எங்கோ ஓர்மூலையில்
அழுகைச் சத்தம்
ஓடுகிறேன் வாழ்க்கையைத்தேடி
பாதைகள் மறந்து. . .
இரவு முழுவதும்
அழுகைச் சத்தம்
அவன்வீட்டில் மட்டுமல்ல
என்னுள்ளும். . .
வாழ்நாளை என்னுள்
ஆரம்பித்து வைத்துவிட்டு
அவன் வாழ்க்கையை
முடித்துக்கொண்டான். . .
எதற்காக தேர்ந்தேடுத்தான்
மரணத்தை – எப்படித்
தேடியும் கிடைக்கவில்லை
பதில்கள். . .
விடைகளை வெளிச்சமிட்டு
பார்ப்பதர்க்குள் விடிந்தது
என்வாழ்க்கைப் பயணத்திற்கு
முற்றுப்புள்ளி. . .
நினைவுகளுக்கு உயிர்கொடுத்தவன்
உயிரற்றுக் கிடக்கின்றான்
ஏனோ பிரியவில்லை
என்உயிரும். . .
கனவுகளை காட்சிக்குத்
தந்தவன் கருகுகின்றான்
அவனுடன் என்நினைவும்
சாம்பலாகின்றது. . .!!!!!
( காதலை அறிந்திடாத ஒருத்தி, காளையன் ஒருவனை கண்டு அவன் செயல்பால் ஈர்க்கப்பட்டு, காதல் பூத்து அதை அவனிடம் சொல்லும்முன், அவன் ஏதோ ஒரு காரணத்தால் இறக்க. பூத்ததும் உதிர்ந்த காதலை யாரிடமும் சொல்ல முடியாமல் எண்ணிப் புலம்புகிறாள் )
Category:
பிரணவனின் கவிதைகள்
|
0 comments: