20:23 |
Author: அன்னைபூமி
ஏன் தாமதிக்கிறாய்
மெல்ல முயற்சி செய்
வருவதை ஏற்றுக் கொள்
மலையிலிருந்து நதி
மலையிலிருந்து நதி
இறங்கியபின்
பாறைகள் பல
தரை தொட்ட மகிழ்ச்சியில்
துள்ளி ஒடும்
பாறைகள் பல
தாண்டி பூமி வந்து
வெற்றி ஓசையிடலாம்
தடையில்லா சமதளத்தில்
போராட்டம் தேடாது
கரையும் சற்று
அமைதியாய் உறங்கும்
மாமர கூட்டம்
குறு நதிகளையும்
தலையசைக்காமல்
வேடிக்கை பார்க்கும்
குறு நதிகளையும்
ஓடைகளையும்
ஏற்றுக் கொண்டு
வற்றாத ஜீவ நதியாய்
கடலில் கலக்கும்.
நீயும் தேங்கி நிற்காமல்
நீயும் தேங்கி நிற்காமல்
தடை தாண்டி
சிறுமை தவிர்த்து
எல்லைவரை
ஓடிக் கொண்டிருப்பாயாக.
- சாகம்பரி மதுரை
Category:
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
|
5 comments:
நல்லாருக்கே...
கருத்துரைக்கு நன்றி திரு.ராஜ ராஜ ராஜன்
ஓடிக்கொண்டேயிரு நதிப்போல... வாழ்த்துக்கள்!
கருத்துரையிட்டதற்கு நன்றி She-nisi
வாழ்த்துக்கள்.நிற்காமல் ஜீவநதியாய் அருமையாய் அருமையான கவிதையாய் ஓடிக்கொண்டிருக்க.