19:22 |
Author: அன்னைபூமி
ஆகாயத்திலிருந்து
பூமிக்கு வந்த
மழைத்துளியின்
சரணாலயம்
இல்லை .....
பூமிக்கு வரவில்லை
இடையில் மலையரசியின்
மடிப் பிள்ளையானது
கைப்பிள்ளையானதால்
தரையிறங்க பயந்து
அங்கேயே கொஞ்சம்
தஞ்சம் புகுந்தது
வெண் மேகங்கள் உலா
விடியாத பொழுதில்
வானின் வண்ணம்
வாங்கி நீல ஆடை
உச்சி வெயிலில்
சூரிய கதிர்களின்
மஞ்சள் பட்டு தரித்து
இருளின் கரும் ஆடை
வெள்ளி நிலா பொட்டு
விண்மீன்களின் ஜிகினா
குமரிப்பெண்ணின்
குதூகலத்துடன் .....
மலையை விட்டு
வண்டல் மண்ணின்
அழுக்கு தேசத்தில்
பயத்துடன் பயணிக்க
பச்சை மரங்கள்
தலையசைத்து வாழ்த்த
வறண்ட பூமியின்
தாகம் தீர்த்து
தாய்மை கண்டது.
Category:
கவிதை
|
4 comments:
nice one
அருமை
மழைத்துளியிலிருந்து நதி நீர்வரையிலுமான விவரணைகளும் உவமைகளும் மிகப்பொருத்தமாக இருக்கிறது ..!
நன்றி. திரு அரசன்
கருத்துரைக்கு நன்றி திரு.வசந்த்