20:14 |
Author: Ravi
முதல் கட்டுரையில் கூறியது போல பனிப் பிரதேசங்களில் உரைந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்து போன மிருகங்களின் எலும்பு, திசுக்கள் போன்றவற்றில் இருக்கும் டி.என்.ஏகளை பிரித்து அதனை கொண்டு மீண்டும் அத்தகைய உயிரினங்களை உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர் ..... இது சாத்தியமானதே.........
எனென்றால் 16 வருடங்களுக்கு முன் மண்ணில் புதைந்த ஒரு எலியின் திசுவிலிருந்து பிரித்த டி.என்.ஏவை கொண்டு படியெடுப்பு முறை மூலம் பல எலிகளை ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்......
தற்பொழுது ஜப்பானை சேர்ந்த ஆராய்ச்சியாளர் அகிரா ஐரிடானி தலைமையில் 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த மம்மோத் (mammoth) என ஆங்கிலத்தில் கூறப்படும் கம்பிளி யானைகளை உயிர்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.....
இந்த மம்மோத் யானைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இவை 13-16 அடி உயரம், 8000-10000 கிலோ எடை, 15அடி உயர தந்தங்கள் இதன் முக்கிய சிறப்பம்சங்களாகும்......
2007ம் ஆண்டு சைபீரியா நாட்டில் பனியில் உரைந்துபோன 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குட்டி மம்மோத்தின் சடலம் கண்டுபிடிக்கபட்டது. இது தற்பொழுது ரஷ்யா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கபடுகிறது.
ஆராய்ச்சியாளர் அகிரா தலைமையிலான குழு இந்த குட்டி யானையின் திசுக்களிலிருந்து அதன் டி.என்.ஏகளை பிரித்து அந்த டி.என்.ஏகளை பெண் ஆப்பிரிக்கா யானையின் கருமுட்டையில் செலுத்தி அது சரியாக வளர்ச்சியடைவதன் முலம் மம்மோத் யானைகள் பூமியில் மீண்டும் உயிருடன் வலம்வரலாம் என்கிறார்கள்.... அவர்களின் கணக்குப்படி அடுத்த 4-6 ஆண்டுகளுக்குள் இது சாத்தியம் என்கிறார்கள்.......
அடுத்த பதிவில்.........
Category:
அறிவியல் பக்கம்
|
1 comments:
இனிமேல் யாருமே உடலை எரிக்கமாட்டார்கள். மம்மிக்கள் போல் உடலைப் பாதுகாத்து வைக்கப்போகின்றார்கள்.