12:36 | Author: அன்னைபூமி
நம் அன்றாட வாழ்வில் பயணம் செய்யக் கருதியே பல வாழ்க்கைத் தத்துவங்களை மறந்துவிடுகின்றோம். இன்றைய வாழ்வில் பலரது பிரச்சனை பொருளாதாரம், இங்கு ஆதரவு அற்றவர்களும் இருக்கின்றனர், ஆகாசத்தை தொடும் அளவுக்கு பொருள் படைத்தவர்களும் இருக்கின்றனர். இல்லாதவர் நாளைய வாழ்வை என்னி உழைக்கின்றார். இருப்பவர் இன்னும் கொஞ்சம் பொருள்தேடி பயணிக்கின்றார். பசி போல் செல்வமும் ஒரு தேவை கருதியே, அத்தியாவசியமே. உணவை ஒரு அளவுக்கு மேல் உடல் ஏற்க மறுப்பது போல். மனமும் ஒரு அளவுக்கு மேல் செல்வத்தை மறுத்தால் நன்று. நிலையானவை எவை என்பதை மறந்துவிட்டு இது போல் பல அற்ப விசயங்களுக்கு மனதை விட்டுவிடுகின்றோம். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகம்.

     "நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
     வாள்அது உண்ர்வார்ப் பெறின்"

இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள் நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரை அறுக்கும் வாள் என்பதை அறிவர்.

அடுத்த நொடி வாழ்வோமா என்பதை மனிதர் அறிய முடிவதில்லை, ஆனால் அவர்தம் எண்ணங்களோ கோடி

நிலையாமையை நன்கு உணர்ந்த வள்ளுவர்
     
     "புக்கில் அமைந்தின்று லொல்லோ உடம்பினுள்
      துச்சில் இருந்த உயிர்க்கு"


உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு தங்குவதற்கு நிலையான இடம் கிடைக்கவில்லை போலும் எங்கின்றார்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On June 17, 2011 at 1:36 AM , kowsy said...

வாழ்க்கை நிலையில்லாததுவே. ஆனால் வாழத்தான் வேண்டும். நிலையில்லை என்று வந்து பிறந்த பூமியில் தெரியவேண்டிய ருசிக்கவேண்டிய எத்தனையோ அற்பதங்களை விட்டுவிட முடியுமா? தேவை என்று கருதுவது அனைத்தும் தேவையே ஒன்று இல்லாமல் வாழ்வது கடினமே. நீங்கள் சொல்வதுபோல் எதுவும் அளவோடு இருந்தால், சுகமாக வாழலாம்.

 
On June 17, 2011 at 8:56 PM , அன்னைபூமி said...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. . .இருப்பவுங்க இல்லாதவங்கள கொஞ்சம் பார்க்கனும். . .நன்றி madam. . .

 
On June 19, 2011 at 8:00 PM , Yaathoramani.blogspot.com said...

குடல் உணவை அளவுக்குமேல் ஏற்க மறுப்பதுபோல்
மனதுக்கும் பொருளை மறுக்கத் தெரிந்தால்...
வித்தியாசமான அழகான சிந்தனை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

 
On June 21, 2011 at 11:39 PM , அன்னைபூமி said...

நன்றி sir. . .