15:46 | Author: அன்னைபூமி
மஞ்ச அரைச்சு
மாராப்பு தேச்சு. . .
அரப்பு அரைச்சு
அள்ளி குளிச்சு. . .

பட்டுடுத்தி பொட்டுவச்சு
பாவட தாவணி
பருவமெல்லாம் கடந்து. . .
பந்தக்கால் நட்டு
பச்சரிசி உலக்குதட்டி
பாலும் பழமுமென
பல கனவு கண்ட
காலம் அது. . .

கருப்பனுக்கு பொறந்ததால
கஞ்சிக்கு கூட வழியத்து
காக்கானி நிலம் கூட
சொந்தமில்லாத ஊரவிட்டு
நான் மட்டும் விரட்டப்பட்டேன்
ஒத்தையில வீட்டவிட்டு. . .

காளையாக பொறந்திருந்தா
கலப்பைக்கு வாக்கப்பட்டு
பசுவாக பொறந்திருந்தா
பாலுக்கு மடிதந்து
பண்ண வீட்டோரம்
பக்குவமா வளந்திருப்பேன். . .

கருவகாட்டு குடிசையில
கள்ளியாக பொறந்ததால
கஞ்சிக்காக தள்ளப்பட்டேன்
கண்ணுக்கெட்டாத காட்டோரம். . .

கருப்பாயி மருதாயியென
மந்தையாடு போல
பெட்டைக கூட்டம். . .

கல்லொடைக்க
காணாத தூரம் போக
மண்ணு சொமக்க
மதிக்கெட்டாத தூரம் போக. . .
மத்தவுக பெத்தவுக மத்திரம்
சொந்த மண்ணோட தங்கிநிக்க. . .

எட்டு வருச குத்தகைக்கு
ஏழுறு தாண்டிப்போறோம். . .
போறமக்க அனைவருக்கும்
பத்தும் பதினொன்னுமா
பருவமாறா சின்ன வயசு. . .

போற இடம்
புழுதிக் காடோ
கரட்டு மேடோ. . .

பத்தில போற நாங்க
பதினெட்டில திரும்பி வருவோம். . .
பக்கத்து வீடென்ன
பக்கத்து நாடென்ன
பொறந்தவீட்ட
 பிரிஞ்சு போற எங்களுக்கு
பொழப்பத்தேடி போற இடமெல்லாம்
புகுந்தவீடுதான். . .

குழந்தையா போற நாங்க
குமரியா திரும்பி வருவோம்
குச்சுகட்ட மாமனுமில்ல
கொல்லப்புற குடிசையுமில்ல. . .

சொந்த மண்ணுல பொறந்தநாங்க
பூத்தது எங்கயோ
புகுந்தது எங்கயோ

போய்ட்டு வர்றோம் நாங்க
பொழப்பத்தேடி. . .


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On June 10, 2011 at 2:02 AM , மதுரை சரவணன் said...

அருமையான பொழப்பத் தேடும் கவிதை.. வாழ்த்துக்கள்

 
On June 10, 2011 at 6:33 AM , சாகம்பரி said...

பல்வேறு பெயரில் - கொத்தடிமைகள் ஒழிக்கப்படவே முடியவில்லை. கண்ணீர் கவிதை நன்று.

 
On June 11, 2011 at 8:32 AM , Yaathoramani.blogspot.com said...

சமீபத்தில் நான் படித்த மிகச் சிறந்த கவிதை என
இந்த கவிதையைச் சொல்லலாம்
உணர்வுகளில் ஊறித்தெறிக்கும் வார்த்தைகள்
சுமங்கலி திட்டம் என்கிற பெயரில்
பெண்கள் படுகிற அனைத்து அவலங்களையும்
மிக ஆழமாக உணரச் செய்து போகிறது இந்த கவிதை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

 
On June 11, 2011 at 8:35 PM , பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி மதுரை சரவணன் sir. . .

 
On June 11, 2011 at 9:08 PM , பிரணவன் said...

பெண்களை அடிமைகளாக பார்க்கும் குணம் இன்னமும் போகவில்லை எங்கோ ஒரு மூலையில் இக் குணமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. . .நன்றி அம்மா. . .

 
On June 11, 2011 at 9:14 PM , Samy said...

Manasu kanakkirathu. PonnKulanthai=liability, ithu maravendum. Samy

 
On June 11, 2011 at 9:36 PM , பிரணவன் said...

நாட்டை ஆழ்வதும் ஒரு பெண் தான். பெரிய நிருவனங்களுக்கு குத்தகைக்கு அனுப்பப்படுவதும் பெண்கள் தான்... நன்றி ரமணி sir. . .

 
On June 11, 2011 at 9:47 PM , பிரணவன் said...

ஏழ்மையும் இழிவுபடுத்தும் தன்மையும் இருக்கும் வரை இது மாறப்போவதில்லை. நன்றி சாமி sir. . .

 
On June 12, 2011 at 12:34 PM , இராஜராஜேஸ்வரி said...

அவலங்களை
ஆழமாக உணரச் செய்த கண்ணீர் கவிதை!

 
On June 12, 2011 at 3:16 PM , பிரணவன் said...

வாழ்த்துரைக்கு நன்றி ராஜி அக்கா. . .