23:27 | Author: அன்னைபூமி
தருமம் அம்மா தருமம்
தருமம் ஐயா தருமம்
பூமியில நாங்க வாழ
போடுங்க கொஞ்சம் தருமம். . .

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில
வாழ்க்கை போற பாதையில
வயித்துக்காக நாங்க போடுறஆட்டம்
கயித்துக்கும் கம்புக்கும் இடையில. . .

கசந்து போகா நாட்களில
காகித பூவா எங்கவாழ்க்கை
விடியலுக்கும் சாயலுக்கும் நடுவில
விதியோ சதியோ ஒன்னும்புரியல. . .

ஆசை தீர விளையாட
அரபிக்கடல் பக்கம் போனதில்லை
அம்பானி ஆவோம்னு
அடிக்கடி சொன்னதிலை. . .

வாயிக்கும் வயித்துக்கும் நடுவில
வஞ்சம் வச்சு இருந்ததில்லை
வாய்க்கா வரப்பு சண்டையின்னு
வாழ்க்கை காலத்த கழிச்சதில்லை. . .

குருவி கூட்ட கலச்சுபுட்டு
கோபுரத்த நாங்க கட்டினதில்லை
குழிய தோண்டி போட்டுபுட்டு
குப்புற விழுந்தவுங்கள ரசிச்சதில்லை. . .

கோடி கோடியா சேத்துவச்சு
கொல்லையில நாங்க அடுக்கியதில்லை
கொரங்கு மனசு புத்தியெல்லாம்
கோட்டத்தாண்டி நாங்க ஆடவிட்டதில்லை. . .

வீதியில நாங்க கிடந்தாலும்
நடைபிணமா நாங்க வாழ்ந்ததில்லை
இந்த நிலைம தொடர்ந்தாலும்
திருடி நாங்க பொழைச்சதில்லை. . .

ஆட்சி மாற்றம்
அறுவடை காலம்
எதைப்பத்தியும் எங்களுக்கு கவலையில்ல. . .

தினம் நாங்க போடுற ஆட்டத்தில
எங்க அரைவயிறுகூட நிறைஞ்சதில்லை
தருமம் ஐயா தருமம்
தருமம் அம்மா தருமம். . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On June 26, 2011 at 7:28 AM , சாகம்பரி said...

எது எப்படியிருந்தாலும் வாழ்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உள்ளதே.

 
On June 26, 2011 at 11:17 PM , அன்னைபூமி said...

உன்மைதான் அம்மா. . .வாழ்க்கை நம்மை எந்த நிலையில் வைத்திருந்தாலும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் தான். . .