09:07 |
Author: Ravi
படியெடுப்பு...... அறிவியல் வளார்ச்சியின் அடுத்த பரிணாமம்……….
ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் அம்பர் (படிமங்கள்) மூலம் பாதுகாக்கபட்ட கொசுவின் உரைந்திருக்கும் ரத்ததிலிருந்து பிரித்துஎடுக்கபட்ட டி.என்.ஏவை கொண்டு டைனசோரை உருவாக்குவதாக கூறுயிருப்பார்கள்.... இதுவே படியெடுப்பு முறைக்கு சிறந்த உதாரணம் .....
படியெடுப்பு (cloning) இனப்பெருக்கம் எனும் போது கலப்பின் மூலமாக உருவாகும் உயிர்க்கலம் போலல்லாமல் நேரடியாக முதலாமவரின் உயிர்க்கலமொன்றை அவரின் உடலின் ஏதேனுமோர் பகுதியிலிருந்து பிரித்தெடுத்து அடுத்ததோர் பெண்ணின் கருவறையினுள் கருக்கட்டச் செய்வதாகும். இதனால் கருவைச் சுமக்கும் பெண்ணின் பரம்பரை அம்சங்களில் எதுவும் வாரிசுக்கு கடத்தப்படாது.மாறாக 100 வீதமும் முதலாமவரைப் ஒத்த உயிராகவே வளரும்.
இந்த முறையை பயன்படுத்தி 1996ம்ஆண்டு உருவாக்கபட்டதுதான் டொலி ஆடு என்பது அனைவரும் அறிந்ததே...... அதை போலவே நாய், ஒட்டகம், மாடு போன்ற பல மிருகங்களை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கிவிட்டர்கள்........
இந்த படியெடுப்பு முறைக்கு தேவையானது அந்தந்த மிருகங்களின் முழுமையான டி.என்.ஏக்களே.....
பனிப் பிரதேசங்களில் உரைந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்ட பழங்காலத்து அழிந்து போன மிருகங்களின் எலும்பு, திசுக்கள் போன்றவற்றில் இருக்கும் டி.என்.ஏகளை கொண்டு மீண்டும் அத்தகைய மிருகங்களை உருவாக்கும் வேலையை உயிர்தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தொடங்கிவிட்டனர்....
(பனிப் பிரதேசங்களில் இருக்கும் குளிர் வெப்பநிலையில் டி.என்.ஏ எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் பாதுகாக்கப்படும்)
பழங்காலத்து மிருகங்கள் என்றால்??? எந்த மிருகம் ???
அவை இனிவரும்......
Category:
அறிவியல் பக்கம்
|
0 comments: