20:24 | Author: சாகம்பரி

(இது திரை விமரிசனம் அல்ல)
ஒரு ஆரம்பத்திற்காக....
  ஐந்தறிவு  - அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு
  ஆறாம் அறிவு - பகுத்தறிவு
  ஏழாம் அறிவு - ஜெனிடிக் மெமரி (மரபியல் சார்ந்த அறிவு...? )

நான்கு பரிணாமங்கள் - நீளம்,அகலம்,உயரம்,நேரம்.
ஐந்தாவது -.....?
குறிப்புகள்: பழந்தமிழரின் அற்புதமான ஆற்றல். அதனை கையாளும் ஆழ்ந்த ரகசியங்கள் நம்மிடம்தான் இருந்தன. ஆயுதமாகவும் கையாளப்பட்டது. கால வெள்ளத்தில் மறக்கப்பட்டு புதைக்கப்பட்டுவிட்டது. அதைப் பற்றி தெரிந்து கொள்ள காத்திருங்கள்.


கேள்வி என்ன வென்றால் ஐந்திற்கும் ஏழிற்கும் என்ன தொடர்பு? இதை தெரிந்து  கொள்ள சில வேலைகளை செய்ய வேண்டும். தூசு படிந்துள்ள கண்ணாடியை துடைக்கும் வேலைதான். அதன் வழியாக பார்த்தால் எதுவும் தெரியாது. அதே போல் மேற்கத்திய நாட்டின் கலாச்சாரத்தின் பிடியிலிருக்கும் நமக்கு நாம் இழந்த ஒரு அதிஅற்புதமான விசயத்தை பற்றி புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருக்கும். பொருள் ஆற்றல் எனில் ஆற்றல் பொருளாகும் என்ற ஐன்ஸ்டைனின் கருத்தை ஒட்டியே இதன் விளக்கம் கிட்டுகிறது. ஆரம்பத்திலிருந்து பேசலாமா? ஆரம்பம் என்றால் முன்பிருந்து மூத்த காலத்திலிருந்தே.....

இனி ஆரம்பிக்கலாம்.
  பரிமாணம் ஒரு பருப்பொருளின் அளவை குறிக்கும் சொல். இன்னும்கூட விளக்கமாக கூறமுடியும். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் கணக்கீடுகள். ஒரு பொருளின் அளவை குறிக்கும் முறை ஏன் வந்தது? வியாபாரத்தின் தேவை கருதிதான்.

அதற்கு முன் முப்பரிமாணம் நமக்குத் தெரியும். நீளம்,அகலம், உயரம்.  நான்காவது பரிமாணம் என்ன? காலம். ஒரு பொருளை குறிப்பிடும்போது அதன் அளவு மிக முக்கியம். அத்துடன் கால அளவிற்கு என்ன அவசியம் வந்தது? இதுவும் வியாபார சிக்கல்களுக்குத்தான். பண்டை காலத்தில் கடல் வழித் தொடர்புகள் வழியாகவே வணிகப்பரிவர்த்தனை நடந்து வந்தது. வணிகப்பொருளின் முப்பரிமாணங்கள் மட்டும் குறிக்கப்பட்டு வந்த காலம். ஒரு முக்கியமான சிக்கல் வந்தது. சில பொருட்கள் குறிப்பிடப்பட்டிருந்த அளவிலிருந்து மாறியிருந்தன. நீண்ட காலம் பயணப்பட்டு வந்ததால் காற்று, மழை போன்ற இயற்கை சக்திகளின் காரணமாக இந்த அளவுகள் மாறியிருப்பது தெரியவந்தது. உ-ம், சூடம். காற்று படப்பட கரைந்துவிடும். எடையும் அளவும் குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளினால் நாலாவது பரிமாணத்தையும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. அது அந்தப் பொருள் அனுப்பப்பட்ட தேதியை குறிப்பிட்டது. இந்த தேதியில் இந்த அளவுள்ள பொருளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது. (இப்போதுகூட when packed என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதல்லவா?) இந்த காலமாகிய நான்காவது பரிமாணத்தை புரிந்து கொண்டால்தான் அடுத்ததற்கு செல்ல முடியும்.

வெறும் அளவீடுகளாக மட்டுமே இருந்த பரிமாணம் இன்னும் சில முக்கிய ரகசியத்தை தன்னகத்தே கொண்டிருந்ததை நாம் அறிந்திருந்தோம். ஒரு பொருள் ஆக்கிரமிக்கும் அல்லது வியாபித்து இருக்கும் அளவு  என்பதே பரிமாணம் எனில் சில கேள்விகள்...

ஒரு பொருளின் இருப்பை அல்லது வியாபிதத்தை வெறும் முப்பரிமாணமாக குறிப்பிடுவது அதனுடைய இயற்பியல் அளவீடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அத்துடன் காலத்தையும் குறிப்பிடும்போது இந்த அகண்ட வெளியில் அதனுடைய இருத்தலையும் குறிக்கிறது. ஒரு சிறு பொருளுடன் மட்டும் ஒப்பிடாமல் நாம் வசிக்கும் இந்த பூமி ,சூரிய குடும்பம், அண்டவெளி என்று பார்க்கும்போது ஒரு பெரிய ரகசியம் புலப்படும். 

  இன்று காலை பத்து மணிக்கு  என் வீட்டில் மதுரையில் இருந்த நான்  இரவு பத்து மணிக்கு சென்னையில் இருக்கிறேன், எனும்போது தற்சமயம் நான் என்ற ஒரு இயற்பியல் வரையறைக்குட்பட்ட ஒரு பொருள் மதுரையில் இல்லை என்றாகிறது. சரிதானே அப்படியெனில் இன்று காலை பத்துமணியை மறுபடியும் அடையமுடியுமெனில் நான்  மதுரையில்தானே இருக்கவேண்டும். இது சாத்தியமாகுமா?.அதாவது காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக் கட்டுப்படுகின்றன அல்லவா? இன்னும் சற்று விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

13 comments:

On November 8, 2011 at 8:52 PM , Ramani said...

ஊட்டும் விதத்தில் ஊட்டினால்
எந்தக் குழந்தையும் சாப்பிடும் என்பதைப்போல
சொல்லுகிற விதத்தில் சொன்னால்
புரியாததெல்லாம் புரிந்து போகும் என்பது
தங்கள் பதிவைப் படிக்கப் புரிகிறது
அசத்தலான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

 
On November 8, 2011 at 8:53 PM , Ramani said...

த.ம 1

 
On November 9, 2011 at 1:11 AM , வை.கோபாலகிருஷ்ணன் said...

// உ-ம், சூடம். காற்று படப்பட கரைந்துவிடும். எடையும் அளவும் குறைந்துவிடும். இது போன்ற பிரச்சினைகளினால் நாலாவது பரிமாணத்தையும் குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. அது அந்தப் பொருள் அனுப்பப்பட்ட தேதியை குறிப்பிட்டது. இந்த தேதியில் இந்த அளவுள்ள பொருளை அனுப்புவதாக தெரிவிக்கப்பட்டது. (இப்போதுகூட when packed என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதல்லவா?) இந்த காலமாகிய நான்காவது பரிமாணத்தை புரிந்து கொண்டால்தான் அடுத்ததற்கு செல்ல முடியும்.//

அருமையான உதாரணத்துடன் விளக்கியுள்ளது, கற்பூரம் போல டக்குனு மனதில் பற்றிக்கொண்டது. தொடருங்கள்.
த.ம : 2 vgk

 
On November 9, 2011 at 7:24 AM , K.s.s.Rajh said...

அருமையாக உதாரணத்துடன் விளக்கியுள்ளீர்கள் பளிச்சென்று மனதில் ஒட்டிக்கொள்கின்றது

 
On November 9, 2011 at 4:47 PM , G.M Balasubramaniam said...

இன்னொரு பௌதிக பாடமா.? (In theory of relativity. )

 
On November 9, 2011 at 7:40 PM , சாகம்பரி said...

நன்றி ரமணி சார். இது மிக சிக்கலான கருத்துக்கள் உள்ள பதிவு. தெளிவாக எழுத முயற்சிக்கிறேன்.

 
On November 9, 2011 at 7:41 PM , சாகம்பரி said...

இன்னும் வருகிறது சார். தங்களுக்கு பிடித்த வானவெளி பற்றிய அறிவியலுடன். நன்றி சார்.

 
On November 9, 2011 at 7:42 PM , சாகம்பரி said...

இன்னும் முக்கியமான குறிப்புகளுக்கு வரவில்லை. தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்கள் ராஜா.

 
On November 9, 2011 at 7:43 PM , சாகம்பரி said...

இன்னுமொரு பாடம்.... மறைக்கப்பட்ட தத்துவங்கள் ஐயா. மிக்க நன்றி.

 
On November 9, 2011 at 8:12 PM , shanmugavel said...

ஆஹா! அருமை ,தொடருங்கள்.

 
On November 9, 2011 at 9:51 PM , M.R said...

கனமான பதிவு ,கவனமாக படித்தேன்
தொடருங்கள் விரிவையும் படித்துணர வேண்டும் சகோதரி ,வருகிறேன் படிப்பதற்கு நன்றி ,

 
On November 10, 2011 at 10:49 AM , suryajeeva said...

தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்

 
On November 10, 2011 at 5:50 PM , புலவர் சா இராமாநுசம் said...

உன்னதமான பதிவு சகோதரி
இதை நான் மாணவ நிலையில் கவனமாகப் படிக்கிறேன்
தெளிவான விரிவுரை!
தொடரத் தொடருவேன்
நன்றி!

புலவர் சா இராமாநுசம்