16:46 |
Author: சாகம்பரி
அலைகளின் அழியாத்தன்மையும் அவற்றின் பாதிப்பும்.
இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.
நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
இப்போது மேலும் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்வோம். சிறிய வயதில் இயற்பியலில் படித்ததுதான். நாம் இந்த உலகத்துடன் தொடர்பு கொள்ளுவது பெரும்பாலும் அலை வடிவங்களாகவே நடக்கின்றன. நாம் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளும் செய்திகள் அலைவடிவங்களாக உள்ளன. உதாரணமாக ஒலி,ஒளி போன்றவை அலைகளாகவே நம் புலன்களை அடைகின்றன. சரிதானே, ஒருவர் நம்மிடம் பேசும்போது அவருடைய பேச்சானது ஒலி அலையாக நம்முடைய செவியை அடைகிறது. அதுபோலவே நாம் காணும் காட்சிகளும் ஒளி அலையாகவே நம்மை அடைகிறது. என்ன ஒன்று, ஒலியைவிட ஒளி விரைவாக செல்லும். அதனால்தான் மின்னலை முதலிலும் இடியை சற்று பொறுத்தும் நம்மால் உணரமுடிகிறது.
நம்முடைய எண்ணங்கள்கூட அலைகளாக பரவுவதாக நிருபிக்கப்பட்டுள்ளது. அது மற்றவர்களை பாதிப்பதையும் நிருபித்துள்ளார்கள். இது பற்றி விரிவாக பிறகு பார்ப்போம். இப்போது இந்த படத்தை பாருங்கள்.
இந்த படத்தில் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் நம்முடைய புலனால் உணரக்கூடியது. இரண்டாவது தெளிவாக உணரமுடியாது. மூன்றாவது நம்மால் உணரவே முடியாத அளவிற்கு இருக்கிறது. சக்தி குறைந்து கொண்டே போகிறதே தவிர முற்றிலுமாக இல்லையென்று சொல்லமுடியாது(not nullified). சரியான சாதனங்களை பயன்படுத்து பெரிதுபடுத்தி மீண்டும் உணர முடியும்.
உதாரணமாக, நம் அருகில் இருப்பவர் பேசுவது தெளிவாக கேட்கும். அவர் சற்று தொலைவு சென்றவுடன் கேட்பது படிப்படியாக குறைகிறது. இன்னும் அவர் நகரும் போது சுத்தமாக எதுவும் கேட்காது. ஏனெனில் அலையின் அளவு குறைகிறது. சரியான சாதனங்கள் உதவியுடன் கேட்க முடியும். இன்னும் விலகிச் செல்லும்போது நம்முடைய சாதனங்கள் உதவி செய்யாது. அதனால் அதனை உணர முடியாமல் போகிறது. ஆனால், அவை வலு குறைந்த அலைகளாக பிரபஞ்சத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன.
ஒரு தகவல் சொல்கிறேன். பென்சியாஸ் மற்றும் வில்சன் (Penzias and Wilson) என்ற இயற்பியல் விஞ்ஞானிகள் 1978ல் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர். பெல் ஆய்வக விஞ்ஞானிகளான அவர்கள் CMB எனப்படும் பிரபஞ்சம் சம்பந்தப்பட்ட 'அண்டவியல் நுண்ணலை பின்புல கதிர்வீச்சு' ஆராய்ச்சிக்காக அந்த பரிசை வென்றனர். 1964ல் அண்டவெளியில் பரவியிருக்கும் நுண்ணலைகளை பதிவு செய்து கொன்டிருந்த போது, ஒரு புதிய பதிவொன்று கிட்டியது. மிக அதிக வெப்பவீச்சை பதிவு செய்திருந்த அந்த காஸ்மிக் கதிர்களின் மூலதாரம் நம்முடைய பால்வெளிக்கு வெளியில் இருந்து வந்தது என்று தெரிந்தது. சிலபல அறிவியல் தேடல்களுக்குப் பிறகு அந்த அலைவீச்சானது நெபுலா வெடித்தபோது வெளிப்பட்ட கதிர்வீச்சு (வெடிப்பு தொடங்கிய 3,00,000 வருடங்களுக்குள்) என்று உறுதிபடுத்தினர். அதுவரை (1970வரை) பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி எழுந்த வேறுபட்ட கருத்துக்களை பொய்யாக்கி வெடிப்பின் மூலமே உருவானது என்ற கருத்தை உறுதிபடுத்திய இந்த ஆய்விற்கு நோபல் பரிசு கிட்டியது.
இதுதான் அவர்கள் உபயோகித்த தொலைநோக்கி. |
குறிப்பிட்ட அந்த கதிர்வீச்சின் ஒலிவடிவ பதிவு இணையத்தில் கிடைக்கிறது. முடிந்தால் கேட்டுபாருங்கள். மிக அதிகபட்ச அதிர்வெண்களில் பதிவாகியுள்ள அந்த ஒலிப்பதிவை கேட்டு காது வலியெடுத்தால் நான் பொறுப்பல்ல.(எனக்கு இரண்டு நாட்கள் வலியிருந்தது)
இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னவென்றால் உருவாக்கப்பட்ட அலைவீச்சு அல்லது கதிர்வீச்சு அழிவடைவதில்லை. அவை பிரபஞ்சத்திலேயே சுற்றி வருகின்றன. இதே போல்தான் ஒரு நிகழ்வு நடக்கும்போது உருவாகும் ஒளி, ஒலி செய்திகள் அலைகளாக நம்மை சுற்றி பரவிக் கிடக்கின்றன. இவற்றை 'ஆகாஷிக் ரெக்கார்டுகள்' என மெட்டாபிஸிக்ஸ் (புலன் தாண்டிய நுண்ணியல்) ஆய்வுகள் ஒப்புக்கொள்கின்றன. நம் எண்ணங்கள்கூட கதிர்வீச்சுகளாக பரவுவதை பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த வானுரை பதிவுகள் நம்மை பாதிக்குமா? கண்டிப்பாக பாதிக்கும். அவை நம் சம்பந்தப்பட்டவையாக இருந்தால். உதாரணமாக, பலவிதமான மின்காந்த அலைகளாக வானொலி நிகழ்ச்சிகள் பரவிக்கிடக்கின்றன. சரியான அலைவரிசைக்கு பொருந்தி (tuned)வருகின்ற நிகழ்ச்சியை மட்டும் நம்மால் கேட்கமுடிகிறதல்லவா? அதேபோல, மிகவும் மெல்லிய வீச்சுகளாக தேய்வுற்று கிடக்கும் நமக்குத் தொடர்பு உடைய அலைகளுக்கு சரியான உள்வாங்கியாக(reciever) நாம் விளங்கமுடியும். அதற்கான ஆய்வுச்செய்திகளுக்கு போவதற்கு முன் சில விசயங்களை நாமே உணர முயற்சிக்கலாமா?
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா?
- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.
- ஒரு சிக்கலில் இருக்கும்போது அதற்கான சரியான தீர்வு நாம் உறக்கத்திலிருக்கும்போது கிட்டும்.
இவற்றுக்கெல்லாம் விளக்கம் இருக்கிறதா?
15 comments:
நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது./
அருமையான நிறைய சந்தித்த உணர்வு..
பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
அன்னைபூமிக்கு குழந்தைகள் தின இனிய வாழ்த்துகள்...
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
தமிழ்மணம் : 3
//- சில நிகழ்வுகள் நடக்கும்போது அது ஏற்கனவே நடந்ததுபோல உணர்வோம். ஆனால், நமக்குத் தெரிந்தவரை அது முற்றிலும் புதிதான சூழ்நிலையாக இருக்கும்.
- நொடிகளில் முடிவெடுக்க வேண்டிய சில நிகழ்வுகளை சந்திக்கும்போது யாரோ உடனிருந்து வழிகாட்டுவதைப்போல உணர்ந்து முடிவெடுப்போம். ஏன் அந்த முடிவை எடுத்தோம் என்பதற்கு விளக்கம் கூட நம்மால் சொல்ல இயலாது.
- அப்போதே எனக்குத் தோன்றியது என்று நிறைய முறை சொல்லியிருப்போம்.
- பெரும்பாலும் இதுபோன்ற உணர்வுகள் அந்த சூழ்நிலைக்குள் நாம் செல்லும்போதுதான் தோன்றும். முன்கூட்டியே எதுவும் தோன்றாது.//
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
vgk
அருமையான பதிவு.இது தொடர்பாக
முன்னரே நீங்கள் வேறு பதிவுகள் இட்டிருந்தாலும்
லிங்க் கொடுத்தீர்கள் ஆயின் தொடர வசதியாக இருக்கும்
தொடர வாழ்த்துக்கள்
அத்தனையும் உணர்ந்தவைதான்,அருமை.
இவற்றை உணர்ந்திருக்கிறீர்களா? //
அத்தனையும்...
குழந்தைகள் தின வாழ்த்துகள்...
சில நிகழ்வுகளை முன்பே நடந்திருப்பது போன்றும் சில இடங்களைப் பார்த்தபோது முன்பே எப்போதோ பார்த்தது போன்றும் நானும் உணர்ந்ததுண்டு. அருமையான கட்டுரையைப் படித்ததில் மகிழ்ச்சி. நன்றி!
வருகைக்கு மிக்க நன்றி தோழி.
மிக்க நன்றி K.s.s.Rajh.
கருத்துரைக்கு மிக்க நன்றி VGK சார்.
மிக்க நன்றி ரமணி சார். இது தொடர்பாக நான் எழுதிதான் வைத்திருக்கிறேன். பதிவிடவில்லை. இப்போதுதான் முயற்சிக்கிறேன். நான்காவது பரிமாணம் பற்றீ எளிய முறையில் கோகுலத்தில் மட்டும் கட்டுரை எழுதியிருக்கிறேன் -1995ல்.
தொடர்வதற்கு மிக்க நன்றி திரு.ரெவரி. சரியான புரிதலுடன் இருக்கிறது என்று உறுதிபடுத்திக் கொள்ள இதுபோன்ற கருத்துரைகள் தேவைப்படுகின்றன.
மிக்க நன்றி திரு.சண்முகவேல்
@கணேஷ் said...
முதல் வருகைக்கும் கருத்து பதிந்ததற்கும் மிக்க நன்றி சார். இது என்னை ஊக்குவிக்கிறது