15:56 | Author: சாகம்பரி
வெடித்து சிதறிக் கொண்டிருக்கும் நெபுலாவிலிருந்து உருவாகும் அண்டவெளி.
இப்போது நாம் கவனித்துக் கொண்டிருப்பது நான்காவது பரிமாணம் காலம் பற்றியே.

காலம் என்ற பரிமாணத்தில் இன்று காலை பத்துமணி, நான், மதுரை, என் வீடு ஆகிய அனைத்தும் ஒன்றாக கட்டுப்படுகின்றன இப்போது இன்னும் கேள்விகளை எழுப்பலாம். கால அளவை பொறுத்தவரை எல்லாவற்றிற்கும் சுழற்சி என்றொரு விசயம் உள்ளது. காலை பத்து மணி மீண்டும் வரும். ஆனால் தேதி மாறும். தேதி என்று நாம் குறிப்பிடுவது ஒரு ஒப்புமை நேரம் மட்டுமே. ஆங்கில வழிமுறையில் கிறிஸ்து பிறந்ததிலிருந்து முதல் வருடம் கணக்கிடப்படுகிறது. ஆனால் நம்முடைய தேடுதலுக்கு இந்த ஒப்புமை நேரம் பயன்படாது. ஒரு பொருளின் இருத்தல் என்பது அண்டவெளியில் அது இருக்கும் காலத்தை குறிப்பிடுகிற்து எனில் நம்முடைய காலத்தின் ஆரம்பமும் அண்டவெளியின் பிறப்பிலிருந்துதான் குறிப்பிடப்பட வேண்டும். எனவே நான்காவது பரிமாணமாகிய காலத்தை அண்டவெளியின் நேரமாக குறிப்பிடுவதுதான் சரி.

அப்படி பார்க்கும்போது ஒரு விசயம் புலப்பட்டது. அண்டவெளியின் உருவாக்கமும் முடிவும் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றன என்பதே அது.. நெபுலா எனப்படும் ஒரு பெரிய நெருப்பு உருண்டை வெடித்து சிதறியதில் உருவானதுதான் அண்டவெளி என்பது உங்களுக்குத் தெரியும். நெபுலா எப்படி உருவானது? அண்டவெளியின் முடிவில்தான். எப்படி?

கோள்கள், விண்மீன்கள், அண்டங்கள் (நாம் வசிப்பது பால்வெளி அண்டத்தில்) என்ற பலவாறான விண்வெளிபொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள அண்டவெளி தற்சமயம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இன்னமும் அதன் மையத்தில் வெடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. வெடிக்கும் பொருள் தீர்ந்துவிடும் ஒரு நாளில் அங்கே ஒரு வெற்று புள்ளி உருவாகும். வெற்றிடமானது சுற்றியுள்ள பொருட்களை தன்னிடம் மீண்டும் இழுத்துக் கொள்ளும். ரொம்ப சரி, வெளியே தள்ளப்பட்டதெல்லாம் மீண்டும் ஒன்று சேர்ந்து கைகுலுக்கும். ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் மீண்டும் நெபுலா உருவாகும். சற்று அமைதியாக இருந்து மீண்டும் வெடிக்கும். அண்டம் முதல் நீங்கள்,நான்  வரை மீண்டும் அத்தனையும் அந்த அந்த காலக்கட்டத்தில் உருவாகும். இந்த கோட்பாட்டினை உலகம் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால்....   

அண்டவெளியின் முடிவின் மாதிரி - மத்தியில் இருப்பதுதான் black hole எனப்படும் வெற்றிடம்

ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பட்டினத்தார் 'பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும்' என்றும்  'தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும்....' என்று இந்த சுழற்சியை  குறிப்பிடுகிறார்.

இதனையே கணிதக்குறிப்பாக சொல்லும்போது equal to =
என்ற குறியினை பயன்படுத்துகிறார்கள்.

இந்த
= குறிதான் எண்ணிலடங்கா கேள்விகளுக்கு விடை தந்த ஐன்ஸ்டைனின் சமன்பாட்டையும் முக்கியத்துவம் பெற்றதாக்கியது.


ரிக் வேதத்திலும் பிந்து(புள்ளி)வில் இருந்து அனைத்தும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதங்கள்தான் உலகத்தின் தோற்றத்தை பற்றிய கோட்பாடுகளை முதன்முதலில் குறிப்பிட்டிருக்கின்றன. இன்றைக்கும் அறிவியல் கணிப்புகள் இதனை ஒட்டியே நிருபிக்கப்பட்டு வருகின்றன.



எனில், அண்டவெளியின் தோற்றத்தை வைத்து இன்றைய நாளை குறிப்பிடமுடியுமா? இதுவும் நம்முடைய பூஜை முறைகளில் உள்ளது.

பூஜை ஆரம்பிக்கும் முன் சொல்லப்படுகின்ற சங்கல்பத்தை படியுங்கள்.

'த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே, ப்ரதமபாதே, ஜம்பூ த்வீபே,பாரத வர்ஷே, பரத கண்டே, சகாப்தே...' என்று சொல்லப்படும் மந்திர வார்த்தைகள் உலகம் தோன்றிய நாளில் இருந்து இன்றைய நாளினை குறிப்பிடுகிறது.

இப்போது ஆரம்பத்திற்கு செல்லுவோம். முதலில் நான் குறிப்பிட்ட இன்று காலை பத்து மணி உண்மையில் எனக்கு மீண்டும் வர வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா? அப்போது கண்டிப்பாக நான் மதுரையில் என் வீட்டில்தான் இருப்பேன். ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான். நாம் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். 
நாம் மட்டுமல்ல அண்டவெளியில் உள்ள அத்தனை பொருட்களும். என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.

இந்த பதிவு சொல்லும் விசயத்தை ஒரே வாக்கியமாக சொல்ல வேண்டுமெனில் , அனைத்தும் ஏற்கனவே நடந்து பதிவு செய்யப்பட்டவை. நாம் அதனை மறுபடியும் தொடர்கிறோம்.
                               

இதே விசயத்தை வேறுமாதிரி சிந்திக்கவும் முடியும்.
'='  குறியினை பயன்படுத்தி பேசும்போது... இந்த நான்காவது பரிமாணமாகிய காலத்தின் பிடியில் நிகழ்வுகளும் அதன் தொடர்புடையவர்களும் உள்ளார்கள் எனில்   ஒரு நிகழ்வு சம்பந்தப்பட்டவற்றை செயற்கையாக இணைக்கும்போது அந்த காலகட்டத்திற்குள் செல்ல முடியுமா? மீண்டும் தொடர்வோம்.


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On November 10, 2011 at 5:05 PM , வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்ன ஒரு வித்தியாசம், மற்றவை ரொம்பவும் பேசாமல் இதனை செய்கின்றன. ஆனால், நாம்தான் அனைத்தையும் செய்வதாக சத்தம் போட்டு பேசிக் கொண்டே இயற்கை விதித்தவற்றை செய்கிறோம்.//


எங்களுக்குப் புரியாத பாடத்தில் உள்ள
உண்மைகளை நன்கு புரியவைத்து அழகாக உணர்த்திச் செல்கிறீர்கள்.

பாராட்டுக்கள். vgk

 
On November 10, 2011 at 5:08 PM , SURYAJEEVA said...

என்னமோ சொல்றீங்க, தொடர்கிறேன்

 
On November 10, 2011 at 5:46 PM , சாகம்பரி said...

மிக்க நன்றி சார்.

 
On November 10, 2011 at 5:47 PM , சாகம்பரி said...

கண்டிப்பாக இது சற்று சிக்கலான விசயம்தான். ஆனால் சொல்லியே ஆக வேண்டும் என்று கையாளுகிறேன். நான் தேடியவரை ஐந்தாம் பரிமாணம் பற்றிய பதிவுகள் தமிழில் இல்லை. நாம் ஆரம்பித்து வைப்போமே என்றுதான். ஆரோக்கியமான நிறைய விவாதங்களைஇந்த பதிவுகளின் வாயிலாக எதிர்பார்க்கிறேன்.
தெளிவாக பதிவிட அவை உதவும் என்றும் நம்புகிறேன்.
You are welcome Mr.Suriyajeeva.

 
On November 10, 2011 at 7:59 PM , Anonymous said...

இது எனக்கு புரிய எட்டாவது அறிவு வேண்டும் போல சகோதரி...

 
On November 10, 2011 at 9:24 PM , ADMIN said...

அண்டவெளிக் கதைகளில் எனக்கு ஆர்வம் அதிகம்..!!

ஒன்றும் இல்லை என்பதை விளக்கும் ஆத்மார்த்த தத்துவமே அண்டவெளியின் மத்தியில் இருக்கும் இந்த பிளாக்ஹோல் . சரியா சகோதரி..?!

 
On November 12, 2011 at 11:05 AM , G.M Balasubramaniam said...

சமுத்ராவின் அணு ,அண்டம் ,அறிவியல் தொடர்களை படிக்கத் துவங்கி ஒரு கட்டத்துக்குமேல் புரிந்து கொள்ளும் திறனில்லாமல் தொடர்வதை நிறுத்தி விட்டேன். அதுதான் இன்னுமொரு பௌதிக பாடமா என்று போன பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். உங்கள் பதிவு புரியுமா என்பது போகப் போகத்தான் தெரியும். வித்தியாசமான முயற்சி. பாராட்டுக்கள்.

 
On December 26, 2011 at 4:07 PM , Shakthiprabha (Prabha Sridhar) said...

அஹ...தொடர்கிறேன்.
அண்டவெளி தோன்றுதலும் மறைதலும் செய்தாலும், தொடர்புடைய அனைத்தும் பதிவு செய்ய பட்டது அல்ல. பதிவுகள் அனைத்தும் 'அறிவி'னால் மாறிக்கொண்டே இருப்பவை என்று நான் நினைக்கிறேன்.

தவறாகவும் இருக்கலாம்.
தொடர்கிறேன்....

 
On February 13, 2016 at 9:14 AM , Unknown said...

பெருத்தன சிறுக்கும்.... சிறுத்தன பெருக்கும் = Moon
தோன்றின மறையும்... மறைந்தன தோன்றும் = Sun
பட்டினத்தார் maybe things possible like that above.