22:09 | Author: சாகம்பரி
Thanks to wiki resource- Kumari continent
தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?

அதாவது செப்பு காலம், வெண்கல காலம் ஆகியவற்றிற்கான தொல்லியல் சான்றுகள் தமிழ் மண்ணில் கிட்டவில்லை. இலக்கியத்திலிருந்த ஒரு விடை கிட்டுகிறது. ஆரம்ப கால தமிழ் இலக்கியங்களில் ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. குமரி கண்டம் என்பதுதான் அது. அப்படி ஒரு நிலப்பரப்பு இருந்ததாக தெரியவில்லை. இலக்கியங்கள் அதனை அழகான விவரித்திருந்தன. அது ஏழு பனை நாடுகள் கொண்டது. அங்கு வசித்தவர் குமரி மாந்தர். இரண்டு பெரிய மலைத்தொடர்களுக்கு இடையே உருவாகியயிருந்த பரந்த நிலப்பரப்பு. குமரி கண்டத்தின் மக்கள் நாகரிகமாக இருப்பிடங்கள் உருவாக்கி வாழ்ந்திருந்தனர். முதலிரண்டு கடற்கோள்கள் நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றை உருவாக்கி குமரி கண்டத்தை கடலுக்கடியில் கொண்டு சென்றது என்று கூறப்படுகிறது. இதற்கான புவியியல் ஆதாரம் : http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm 1990ல் கண்டுபிடிக்கப்பட்டது.

குமரி கண்டம் எனப்படும் பரந்த நிலப்பகுதி தற்போதைய குமரி முனையுடன் இருந்தது என்று கூறப்படுகிறது. இது பற்றி தமிழறிஞர் தேவ நேய பாவாணர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலப்பரப்பு ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை இணைத்து பரவியிருந்தது. அந்த சமயத்தில் இலங்கை இதனுள்தான் இருந்தது.

மிகப்பெரிய அளவில் நான்கு கடற்கோள்கள்  ஏற்பட்டன. அவைதான் குமரி கண்டத்தின் அழிவிற்கு காரணமானவை என்றும் கூறப்படுகிறது. 2,00,000 ஆண்டுகளுக்கு முன் இருந்த குமரி கண்டத்தின் அழிவு 50,000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடைசியாக ஏற்பட்ட கடற்கோள்தான் காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரை கடல் கொண்டதாக கூறப்படுகிறது. இது 17,000 வருடங்களுக்கு முன் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன. 1980ல் நடத்தப்பட்ட கடல் ஆய்வுகள் தற்போதைய காவிரிபூம்பட்டினத்தின் கடற்பகுதியில் 75 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் புதையுண்டிருக்கும் நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த சமயத்தில், பெரிய பூகம்பங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடித்தது. கடற்கோள் ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த நிலப்பரப்பான குமரி கண்டம் கடலுக்கடியில் சென்றது. ஏராளமானோர் மாண்டனர். இவை வரலாற்று குறிப்புகள். இந்த காலகட்டத்தில் மானசீகமாக பயணித்தால் சில கேள்விகள் எழுகின்றன.

அதிரம்பாக்கம் தொல்லியல் சொல்வது, 15,00,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுக்களாக வாழும் நாகரிகமான காலகட்டத்தில் தமிழன் வாழ்ந்திருக்கிறான். உலகம் முழுவதும் சரியான தட்பவெப்பம் நிலவாத அந்த காலகட்டத்தில் இங்கே குளிர்ச்சியான பசுமையான தட்பவெப்பம் நிலவியதை உணர முடிகிறது. அதற்கான விலங்கியல் படிமங்கள் கிட்டியுள்ளன. இயற்கையுடன் ஒன்றிய வாழ்வு வாழ்ந்திருக்கிறான்.

கிருஷ்ணகிரி மலைப்பகுதியில்  தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன. கல்லை பயன்படுத்
தி ஏர்கலப்பை, போர் ஆயுதங்கள், போன்றவையும் இரும்புகாலத்தின் சான்றாக செங்கற்களால் கட்டப்பட்ட இரும்பு உருக்கும் தொழிற்கூடங்களும் கண்டுபிடிக்கப்படுள்ளன. (இங்கேயும் 50,000 ஆண்டுகள் பழமையான் கற்கால சான்றுகளுக்குப் பிறகு 3000 ஆண்டுகள் பழமையான இரும்புகாலத்திற்கான சான்றுகள் கிட்டுகின்றன.
     
Indus-valley civilization

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன. இது போன்ற இயற்கை அழிவுகளை விலங்குகள் முன்கூட்டியே கண்டுகொள்ளத்தக்கவை. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த மனிதனுக்கும் இந்த சக்தி இருந்திருக்கும் அல்லவா? அப்படியெனில் அழிவு வரப்ப்போவதை உணர்ந்து புலம் பெயர்ந்திருக்கலாமே. சரி அப்படி புலம் பெயர்ந்தால் அவன்னுடைய பாதையை எது வரையறுத்து இருக்கும். இயற்கை வரையறுத்த எல்லைகள்தான் அவர்களுடைய பயணப்பாதையாக இருக்கும். அந்த பயணப்பாதை மேற்குத் தொடர்ச்சி மலையின் வழியாக சென்றது எனில், அதன் முடிவு சிந்து சமவெளியை அடைகிறது. சிந்து நதியின் கரையோரத்தில் இருக்கும் சமவெளி இது இன்றைய ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கியது.
      

இந்த கூற்றுக்கு ஆதாரமாக சொல்லப்படுபவை, அங்கு கிட்டிய பசுபதி, ஒற்றை கொம்புடைய நீர்யானையின் வடிவங்களும். இதனை யூனிகார்ன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதிரம்பாக்கம் தொல்லியல் பகுதியில் நீர்யானையின் படிமம் கிட்டியுள்ளது.   ஈரமான நிலப்பகுதியில் மட்டுமே நீர் யானை வசிக்கும். காப்புரிமை சம்பந்தபட்டதால் இங்கே அந்த படத்தை பிரசுரிக்க முடியவில்லை. வாலை பார்க்கும்போது அது குதிரை இல்லை என்று தெரியும்.


சில இடங்களின் பெயர்களும் தமிழ் பெயர்களாக காவ்ரி,பெருனை போன்ற வார்த்தைகள் பிராமி எழுத்து வடிவில் கிட்டியுள்ளன. மீண்டும் தெற்குப்பக்கம் குடியேற்றம் கிமு.3000லிருந்து -இரும்புகாலத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கலாம் என்று கொள்ளப்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சி மட்டுமல்லாமல் கடலியல் ஆய்வுகளும் மேற்கொண்டால்தான் இயற்கை அழித்த தமிழ் வரலாறு தெரியவரும்.

அடுத்த பதிவில் மனோசக்திக்கான சான்றுகள் - அழிந்து போன வரலாற்றில் மறைக்கப்பட்ட பக்கங்களை செவி வழி கதைகளாகவும், இலக்கியவழிசெய்திகளாகவும் உறுதிபடுத்தலாமா?.

இவற்றை கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.
http://news.bbc.co.uk/2/hi/science/nature/353277.stm
http://balubpos.blogspot.com
http://jayabarathan.wordpress.com/2011/07/15/kumari-kandam-3/

R. Mathivanan, then Chief Editor of the Tamil Etymological Dictionary Project of the Government of Tamil Nadu, in 1991 claimed to have deciphered the still undeciphered Indus script as Tamil, following the methodology recommended by his teacher Devaneya Pavanar, presenting the following timeline (cited after Mahadevan 2002):

    ca. 200,000 to 50,000 BC: evolution of "the Tamilian or Homo Dravida",
    ca. 200,000 to 100,000 BC: beginnings of the Tamil language
    50,000 BC: Kumari Kandam civilisation
    20,000 BC: A lost Tamil culture of the Easter Island which had an advanced civilisation
    16,000 BC: Lemuria submerged
    6087 BC: Second Tamil Sangam established by a Pandya king
    3031 BC: A Chera prince in his wanderings in the Solomon Island saw wild sugarcane and started cultivation in Kumari Kandam.
    1780 BC: The Third Tamil Sangam established by a Pandya king
    7th century BC: Tolkappiyam (the earliest known extant Tamil grammar) 
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On November 21, 2011 at 10:34 PM , shanmugavel said...

//கிருஷ்ணகிரி மலைப்பகுதியில் தொல்லியல் சான்றுகளாக கிட்டியவை 50,000 வருடங்களுக்கு முன் அங்கு வாழ்ந்த மக்கள் பெருங்கற்காலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறுகின்றன//

மியூஸியத்தில் ஏதாவது இருக்கிறதா தெரியவில்லை.போய் பார்க்கவேண்டும்.அருமை,தொடருங்கள்.

 
On November 21, 2011 at 11:53 PM , புகல் said...

மிக அருமையான தகவல்,
பகிர்ந்து கொண்டுதற்க்கு நன்றி.

இந்தியா தமிழ் மொழியின் வளர்ச்சி மற்றும் அதன் தொல்லியல் ஆராய்ச்சிக்கு
உணர்வுபுரமாகவோ, நியாயமான பண உதவியையோ இந்திய அரசு செய்வதில்லை
தமிழ், தமிழர்கள் என்றாலே இந்தியாவுக்கு பிடிப்பதில்லை
இப்படி ஒரு நாட்டில் இருந்துகொண்டு நம் தமிழின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி என்பது மிக கடினம்.
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலையை அண்டை மாநிலத்தில் திறக்க
அல்லோல்பட வேண்டியது இருக்கு, போராட்டம் நடத்த வேண்டியது இருக்கு என்ன ஒரு கொடுமை.
இந்திய அரசின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து என்று தமிழினம் விடுபடுகிறதோ அன்றுதான் தமிழும், தமிழரின் சிறப்பும், வாழ்வும் முன்னேறும்

 
On November 22, 2011 at 10:38 AM , பால கணேஷ் said...

17,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் மண்ணை, பூகம்பம், எரிமலை, கடற்கோள்கள் என்று இயற்கையின் அழிவு சக்திகள் புரட்டி போட்டிருக்கின்றன.
-குமரிக் கண்டத்தைக் கடல் கொண்டது என்றும், சோழர்கள் காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்த பூம்புகார் கடற் கோளால் அழிந்தது என்பதையும் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘கடல் கொண்ட தென்னாடு’ என்ற தலைப்பும் நினைவில் வருகிறது. தமிழர் நாகரிகம்தான் எத்தனை பழமையானது. படிக்கப் படிக்க பிரமிப்பு எழுகிறது. உங்கள் இந்த அரிய முயற்சி தொடரட்டும்... என் வாழ்த்துக்களும், நன்றிகளும்!

 
On November 22, 2011 at 6:58 PM , SURYAJEEVA said...

ஒற்றைக் கொம்புடைய நீர் யானையா? சுவாரஸ்யம் தான்... தொடர்கிறேன்

 
On November 23, 2011 at 4:58 PM , சாகம்பரி said...

மியூஸியத்தில் இல்லை சார். அது பரந்த பகுதி. வரட்டனபள்ளி, தொப்பூர் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. மிக்க நன்றி

 
On November 23, 2011 at 4:59 PM , சாகம்பரி said...

தொல்லியல் துறையின் ஆர்வமில்லாத போக்கு நிறைய ஆய்வுகளில் தென்படுகிறது. பட்ஜெட் போதாக்குறையாகவும் இருக்கலாம். மிக்க நன்றி திரு. புகழ்.

 
On November 23, 2011 at 4:59 PM , சாகம்பரி said...

மிக்க நன்றி கணேஷ் சார்.

 
On November 23, 2011 at 5:23 PM , சாகம்பரி said...

Amynodontidae என்ற பழங்கற்கால உயிரினத்தை மொழிபெயர்த்துள்ளேன். அதற்கு தமிழில் சரியான பெயர் கிட்டவில்லை. நீர் யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் முந்தைய தொகுதி.. சிந்து சமவெளி வடிவங்களில் இருக்கும் உருவம் குதிரை அல்ல என்று குறிப்பிடவே இதனை கூறியிருந்தார்கள். தொடருவதற்கு திரு.ஜீவா.