22:02 | Author: சாகம்பரி
இந்த பதிவு பழந்தமிழர் அறிந்திருந்த சிறப்புமிக்க ஐந்தாம் பரிமாணம் என்னும் மனோசக்தி பற்றியது.

பழந்தமிழரின் வரலாறு தேடி காலப்பயணம்.
முதலில் சில விசயங்களை தெளிவுபடுத்திக் கொள்வோம். தமிழன் என்பது தமிழ்மொழி பேசும் இனம். இதனை குலத்தின் பெயரோடோ, மதத்தின் பெயரோடோ தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ள வேண்டாம். அதேபோல தமிழ் மொழி பல மாற்றங்களுக்கு உள்ளானதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இலக்கியத்திலிருந்து - தொல்காப்பியம் -கிமு700-கி.மு300
பழந்தமிழர் வரலாறு என்ற தேடலுக்கு நிறைய விசயங்கள் கிட்டுவது இலக்கியங்களில் இருந்துதான்.  அவை தமிழரின்ன் தோற்றம் பற்றி சுட்டுவது கிமு. 700லிருந்துதான். தலைச்சங்கம் வைத்து பதியப்பட்ட நூல்களுள் முதன்மையானது 'அகத்தியம்' என்ற இலக்கண நூல். அதனுடைய காலம் 'தொல்காப்பியத்திற்கும்' முன் என்று அனுமானிக்க முடிகிறது. ஏனெனில் தலைச்சங்கத்தில் இடம்பெற்றிருந்த புலவர்களுள் அகத்தியரும் ஒருவர். அவருடைய சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர் விளங்கினார் அன்று கூறப்படுகிறது. இதனைக் கொண்டு தொல்காப்பியத்தின் காலம் கிமு700-கிமு300 வரை இருக்கலாம் என்று பதியப்படுகிறது. தொல்காப்பியம் என்பது இலக்கண நூல். தமிழ் மொழியின்  இலக்கணம் பற்றிய வரையறகள் இதில் இருக்கின்றன.

நம்முடைய தேடல் தமிழரின் தோற்றம் பற்றியது. முதல் இலக்கிய நூல் சொல்வதோ பண்பட்ட முதிர்ந்த மொழியின் லட்சணங்களை. இன்னும் தேடலை பின் நோக்கி நகர்த்த முடிவு செய்தேன். தொல்பொருள் துறையின் பதிவுகளில் கிட்டியது ஆதிச்ச நல்லூர். திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி படுகையில் உள்ளது.

ஆதிச்ச நல்லூர் - கிமு.1000
அதற்கும் முன்பு வரலாற்று ஆதாரமாக ஆதிச்ச நல்லூரில் கிடைத்த புதைபொருட்களை சொல்லலாம். முதுமக்கள் தாழிகளில் மனித எலும்புக்கூடு மற்றும் மண்பாண்டங்கள், சில உலோக பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை கிமு1800ஐ சேர்ந்தது என்கிறார்கள் இவை கி.மு 10ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தபட்டன. இதற்கான சுட்டி: http://asi.nic.in/asi_exec_adichchanallur.asp 

இந்த இடத்தில் மேலும் ஒரு குறிப்பு கிட்டுகிறது. வேதிய முறைப்படி செய்பவர் அல்லாதவர் என்று இரு பிரிவினர் உள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  வேதகாலம் என்பது கிமு.2000-500 வரை.

செம்பியன் கண்டியூர் -கிமு.2000-கிமு.1000
மயிலாடுதுறையில் செம்பியன் கண்டியூர் என்ற இடத்தில் 2006ல் நடைபெற்ற ஆய்வுகள் அங்கு கிட்டிய பொருட்கள் கற்கோடாரிகள் கற்காலத்தின் பிற்பகுதியை சேர்ந்தவை என்று உறுதிபடுத்தப்படன. தொன்மை கிமு 2000-1000.  
சிந்து சமவெளி நாகரிகத்தின் (கிமு.3300-1300)தொடர்புடைய எழுத்துருக்கள் கிடைத்தன.

மரபியல் ஆதாரம் - 50,000-70,000 வருடங்கள்
தற்கால மனிதன் ஹோமோ சாபியன் இனத்தை சேர்ந்தவன் என்றும் அதற்கு முன்பாக நியாண்டர்தால் இன மனிதன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. நமக்கு மூதாதையர் ஹோமோ சாப்பியனிலிருந்து கணக்கிடப்படுகின்றனர்.  இந்த மனிதன் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியாவிற்குள் வந்ததாக கூறப்படுகிறது. காலம் 50,000-70,000 முன்பு. இந்த மரபணு மாதிரி மதுரை பக்கத்திலிருக்கும் கிராமத்திலிருக்கும் ஒரு மனிதரின் மரபணு உடன் பொருந்தியது. எனவே ஆசியாவில் மனிதர்கள் குடியேற்றம் 70,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று கூறப்பட்டது. ஆஸ்திரேலியாவில் 40,000 வருடங்களுக்கு முன் நிகழந்ததாகவும் பதிவு செய்யப்பட்டது.

அதிரம்பாக்கம் -15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்.
திருவள்ளுவர் மாவட்டம் பூண்டி நீர்தேக்கம் அருகே அதிரம்பாக்கம் தொல்லியல் ஆய்வில் கிட்டியது ஆச்சரியப்படுத்தியது. 15,00,000 ஆண்டுகளுக்கு முன் பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கிட்டின. ஆப்பிரிக்காவில் கிட்டிய மாதிரியுடன் ஒத்திருந்தன. இதற்கு முன் தெற்காசியாவில் பழைய கற்காலம் ஆரம்பித்ததே 70,000 ஆண்டுகளுக்கு முன்புதான் என்று ஒரு கருத்து இருந்ததை பொய்யாக்கியது இந்த ஆய்வு.
இதற்கான சுட்டி
http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece

அங்கே அருகிலேயே அல்லிகுழி மலைத்தொடரில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதன் வாழ்ந்த குகைகள் இருக்கின்றன. அவை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இத்தனை தகவல்களும் ஒரு விசயத்தை உறுதிபடுத்துகின்றன. முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதா
ன் அது. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே குழுக்களாக மக்கள் வாழ்ந்துள்ள ஒரு நாகரிகமான சமுதாயம் இங்கிருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் கற்காலத்திற்கான ஆதாரங்களுக்குப்பின் கிட்டியவை  இரும்பு காலத்திற்கு சென்றுவிடுகின்றன.

கற்காலம் ,செப்புகாலம்,வெண்கல காலம், இரும்பு காலம் என்று பிரிக்கப்பட்ட கால கட்டங்களில் பயணித்த மனித நாகரிகத்தில், தமிழ் பழங்குடியின் வாழ்க்கை முறைகளுக்கான ஆதாரம் கற்காலத்திலிருந்து சட்டென்று இரும்பு காலத்திற்கு வந்துவிட்டதை குறிப்பிடுகின்றன. இடைப்பட்ட இரண்டு உலோக காலங்களுக்கான தொல்லியல் சான்றுகள் கிட்டவில்லை. இவை சிந்து-சமவெளி நாகரிகத்தில் கிட்டியுள்ளன. இடையில் என்ன நடந்தது...?


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

9 comments:

On November 17, 2011 at 10:10 PM , shanmugavel said...

உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது,நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

 
On November 17, 2011 at 10:21 PM , நிவாஸ் said...

அற்ப்புதமான பதிவு, மிகவும் கடுமையான பணி. பாராட்டுகள் சகோ.

ஒரு சிறு வேண்டுகோள்

கி.மு. கால அளவை நிர்ணயிக்கும்போது இறங்கு வரிசையில் வருவதால் அப்படியே எழுதுங்கள். இல்லை என்றால் குழப்பம் வரும். (கி.மு. 700 முதல் கி.மு. 300 வரை) என்று வரவேண்டும்

 
On November 17, 2011 at 11:36 PM , Anonymous said...

முதல் மனிதனின் தோற்றம் தமிழகத்தில் இருந்தது என்பதுதாண் அது//

வாசிக்கும் பொது மெய் சிலிர்க்கிறது சகோதரி...

 
On November 18, 2011 at 12:30 AM , Unknown said...

சாகம்பரி..
அருமையான ஆய்வு!
வாழ்த்துக்கள்.

அகழ்வாயில் இன்னும் ஆர்வத்தோடும் தேடலோடும் செயல் பட வேண்டியது அரசுதானே.... இன்னும் முழுமையான தேடல் இருந்தால், நிச்சயம், விடுபட்ட காலம் பற்றிய விடயங்கள் கிடைக்கலாம்...

 
On November 18, 2011 at 6:08 AM , பால கணேஷ் said...

கடும் உழைப்புக்குப் பின்புதான் நீங்கள் எழுதுவதை உணர முடிகிறது. தமிழர்கள் நாகரீகத்தில் மூத்தவர்கள் என்பதில் பெருமித உணர்வு மனதில் தோன்றியது. தொடருங்கள்... தொடர்கிறோம்...

 
On November 18, 2011 at 7:33 AM , K.s.s.Rajh said...

இந்தத்தொடருக்கான உங்கள் உழைப்புக்கு ஒரு சலூட்.....

தொடருங்கள் வாழ்த்துக்கள்

 
On November 18, 2011 at 8:55 AM , Yaathoramani.blogspot.com said...

தாங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக் கொள்கிற
முயற்சியும் உழைப்பும் மலைப் பூட்டுகிறது
மிகச் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிற
ஆர்வத்தையும் இது அதிகரிக்கச் செய்து போகிறது
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

 
On November 18, 2011 at 11:33 AM , SURYAJEEVA said...

மேலும் காந்தார மொழியும் திராவிட மொழியும் ஒரே சாயல் என்றும் வரலாறு சொல்கிறது... காந்தாரம் இன்றைய ஆப்கானிஸ்தான்

 
On December 26, 2011 at 4:43 PM , Shakthiprabha (Prabha Sridhar) said...

//http://asi.nic.in/asi_exca_imp_tamilnadu.asp
http://www.antiquity.ac.uk/projgall/pappu297/
http://www.thehindu.com/sci-tech/science/article1568651.ece//


awesome. சுட்டிக்கு நன்றி ...