18:34 | Author: சாகம்பரி
இந்த கட்டுரையின் முதல் இரண்டு தொடர்புகள்
முதல்பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/2.html
இரண்டாம் பாகம்: http://annaiboomi.blogspot.com/2011/11/1.html

 


முதலிரண்டு பகுதிகளுக்கே சில கேள்விகள் வந்துவிட்டன. அவற்றை விளக்காமல் அடுத்த பகுதிக்கு செல்ல முடியாது போலிருக்கிறது.


1. ஐன்ஸ்டை
ன் சமன்பாடு, '=' குறி, அணுசக்தி ஆகியவற்றை பற்றி எளிய விளக்கம் .
'=' குறிக்கு அப்படி என்ன முக்கியத்துவம் என்று தோன்றுகிறதல்லவா? ஒரு செய்தியை சமன்பாடாக சொல்லிப்பார்ப்போம்.

தன்னம்பிக்கை+உழைப்பு --> உயர்வு
    இதன் விளக்கம் தன்னம்பிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் உயரமுடியும்.

தன்னம்பிக்கை+உழைப்பு
= உயர்வு
   இதன் விளக்கம் எந்த அளவிற்கு தன்னம்பிக்கையும் உழைப்பும் இருக்கிறதோ அந்த அளவிற்கு உயர்வு கிட்டும் என்பதும்,

   உயர்வு=தன்னம்பிக்கை+உழைப்பு என்றும் கொள்ளலாம்.
   இதன் விளக்கம் உயர்வு இல்லையெனில் தன்னம்பிக்கையோ அல்லது உழைப்போ இல்லையென்றும் கொள்ளலாம். இரண்டு பக்கமும் சமமாகும் இந்த
= குறிதான் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை முக்கியத்துவம் பெற்றதாக்கியது.

ஐன்ஸ்டைனின் சமன்பாடு:
 
    
   E - எனப்படுவது ஆற்றல், சக்தி
   M  - ஒரு பொருளின் எடை. இத்துடன் C (ஒளியின் வேகம்)ஐ சேர்க்கும் போது ஆற்றலின் அளவு தெரிய வருகிறது.

இரண்டு விசயம் புரிந்து கொள்வோம்.
1. ஒரு பொருள் ஆற்றலாகவும் ,  ஆற்றல் பொருளாகவும் மாறும்

2. ஒரு பொருளை ஆற்றலாக மாற்றும்போது கிடைக்கவேண்டிய முழு ஆற்றலின் அளவையும் கணக்கிட முடியும். 

  எளிமையாக சொல்ல வேண்டுமெனில் , ஒரு மரத்துண்டை எரிக்கும்போது கிட்டும் சக்தி இந்த சமன்பாட்டை ஒத்துப்போகாது ஏனென்றால், அவை முழுமையாக எரிக்கப்படாமல் கரியாகவும், சாம்பலாகவும் மிச்சம் இருக்கும்.  இது மிகச் சாதாரண வார்த்தைகளில் சொல்லப்பட்டது. இதே கணக்கீட்டை வைத்துதான் ஒரு பொருளின் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் அணுவை பிளக்கும் யுக்திகள் புரிந்து கொள்ளப்பட்டன. அணுவை பிளக்கும் முன் செறிவூட்டும் முறைகள் புகுத்தப்பட்டன. செறிவூட்டுவதால் ஒரு பொருளின் எடையை அதிகரிக்க முடியும். எனவே ஆற்றலையும் அதிகரிக்க முடியும்.
மிகவும் செறிவூட்டப்பட்ட மூலக்கூறுகள் விண்மீன்களில் இருக்கின்றன. எனவேதான் அவை ஓளியையும் வெப்பத்தையும் அதிகமாக வெளியிடுகின்றன. நமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன் சூரியன் ஆகும்.

போகருடைய குறிப்புகளில் கனநீர் தயாரித்ததாக உள்ளன. சாதாரணமாக 100மிலி நீர் இருக்கும் எடையைவிட கன நீர் பல ஆயிரம் மடங்கு எடை அதிகம் உள்ளதாகவும் யாராலும் தூக்க முடியாத அளவிற்கு இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அணு கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முறைகளை தெரிந்து வைத்திருந்தார்கள் (மூலிகையை பயன்படுத்திதான்) அதனால்தான் தாமிரத்திலிருந்து தங்கம் உருவாகும் ரசவாத ரகசியங்கள் தெரிந்திருந்தனர்.

2. அண்டவெளி விரிவடைதல் சுருங்குதல் பற்றிய விளக்கம்

அண்டவெளி எனப்படும் universeன் மையத்தில் மிகுந்த அடர்த்தியுடன் கூடிய வாயு மூலக்கூறுகள் (ஹீலியம் போன்றவை) எரிந்து கொண்டே இருக்கின்றன. இதனால் அதனை சுற்றியுள்ள பொருட்கள் உந்தி வெளித் தள்ளப்பட்டுகின்றன. உ-ம், பறக்கும் பலூன்களை வெப்பத்தை பயன்படுத்தி விரிவடைய வைப்பதுபோல்.

அண்டவெளி விரிவடையும்போது மையப்பகுதியை விட்டு பயணிக்கும் வாயு மூலக்கூறுகள் குளிர்ந்து விண்மீன்கள், உருவானது. அவை  பருப்பொருளானது
மாறியது போக எஞ்சிய ஆற்றல் மற்ற பொருட்களையும் தன்னகத்தே இழுக்க முயற்சிக்க, அண்டங்கள் (Galaxy), கோள்கள்(planets) உருவாகின.
   
இதேபோல தலைகீழாக நடக்கும்போது விண்மீன்கள், அண்டங்கள், கோள்கள் ஆகியன மீண்டும் வாயு மூலக்கூறுகளாக மாற வாய்ப்பு உள்ளதல்லவா? இதனைத்தான் அண்டவெளி சுருங்குதல் என்கிறார்கள். மையத்திலிருக்கும் எரிதல் நின்றவுடன் ஏற்படும் வெற்றிடம்(black hole) அனைத்தையும் மீண்டும் தன்னகத்தே இழுத்துக் கொள்ளும்  நிலை வரும்போது. வெறும் வாயு மூலக்கூறுகளால் நிரப்பபட்ட ஆற்றல் மிக்க நெபுலா உருவாகும். 

உ-ம், ஓரிடத்தில் வளி மண்டல அழுத்தம் குறையும்போது அதன் அருகிலுள்ள மேகங்களை இழுத்து சேர்த்துக் கொண்டு புயல் உருவாகுவது போல.

3.  காலமாகிய நான்காவது பரிமாணம் பற்றிய விளக்கம்

   "ஒவ்வொரு நிகழ்வும் அண்டவெளி நேரத்தால் கட்டப்பட்டுள்ளதால் இதுதான் சாத்தியம். எளிதாக சொல்ல வேண்டுமெனில், இதே போல இந்த விசயத்தை நான் நிறைய முறை பதிவிட்டுக் கொண்டே இருக்கிறேன். நீங்களும் நிறைய முறை படித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனில் அனைத்து நிகழ்வும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவைதான்."


ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான். 

ஒரு வேளை மதுரை வடக்கு வெளி வீதியில்...

    -  கிமு 200ல்
நான் கண்ணைமூடிக் கொண்டு சென்றிருந்தால் மிருகத்தின் வயிற்றுக்குள் செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கும். 
    -  நான் மூன்றாம் நூற்றாண்டில் கண்ணை மூடிக் கொண்டு சென்றிருந்தால் குறைந்த பட்சம் அரசனின் குதிரையின் உதை மட்டும் கிட்டியிருக்கும்.
    -  ஆனால் இப்போது சென்றால் எனக்கு மிக மோசமான விபத்து நேரிடலாம்.  ஏனெனில் அப்போது பேருந்து என்ற பொருளின் காலம் இல்லை.  வடக்கு வெளி வீதி, நான், பேருந்து இத்தனையும் சேர ஒரு காலம் வருகிறது அல்லவா அப்போது 'அந்த நிகழ்வு' ஏற்பட வாய்ப்பு வருகிறது. 

   விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.


You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On November 12, 2011 at 6:49 PM , suryajeeva said...

தொடருங்கள்....

 
On November 12, 2011 at 8:01 PM , K.s.s.Rajh said...

இதில் கேள்வி கேட்டக எனக்குத்தோனவில்லை தொடருங்கள்

 
On November 12, 2011 at 8:20 PM , புலவர் சா இராமாநுசம் said...

அருமையாக எழுதி வருகீர்
நன்று!
தொடருங்கள் தொடர்வேன்

புலவர் சா இராமாநுசம்

 
On November 12, 2011 at 9:19 PM , அப்பு said...

சாகம்பரி,

மிக எளிமையான தமிழில் அருமையான விளக்கம்.

 
On November 12, 2011 at 10:14 PM , shanmugavel said...

தெளிவாக புரியும்படி இருக்கிறது,நன்று

 
On November 13, 2011 at 1:17 AM , வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்காங்கே தகுந்த உதாரணங்களை அழகாகச் சொல்லி Slow motion இல் விளக்கிக் கொண்டுபோவதால் ஏதோ எங்களுக்கும் புரிவது போல ஒரு பிரமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. தொடருங்கள்.
பாராட்டுக்கள்.
vgk

தமிழ்மணம்: 5

 
On November 13, 2011 at 4:49 PM , Ramani said...

இப்போதுதான் கொஞ்சம் புரிகிறது
அருமையாக விளக்கி போகிறீர்கள்
அதனால் ஆர்வமும் அதிகரிக்கிறது
தொடர வாழ்த்துக்கள்

 
On November 13, 2011 at 5:23 PM , சாகம்பரி said...

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு.சூரியஜீவா

 
On November 13, 2011 at 5:23 PM , சாகம்பரி said...

K.s.s.Rajh said.//
புரிகிறது என்றால் மகிழ்ச்சி. புரிதலுக்காக கருத்துரையிடுங்கள். மிக்க நன்றி

 
On November 13, 2011 at 5:24 PM , சாகம்பரி said...

//புலவர் சா இராமாநுசம் said...

அருமையாக எழுதி வருகீர்
நன்று!//
மிக்க நன்றி ஐயா.

 
On November 13, 2011 at 5:25 PM , சாகம்பரி said...

@அப்பு said...

முதல் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி சார்.

 
On November 13, 2011 at 5:25 PM , சாகம்பரி said...

மிக்க நன்றி திரு.சண்முகவேல்.

 
On November 13, 2011 at 5:25 PM , சாகம்பரி said...

கொஞ்சம் எளிமைபடுத்தி விரிவாக விளக்க ஆரம்பிக்காமல் எழுதுகிறேன் சார். மிக்க நன்றி

 
On November 13, 2011 at 5:26 PM , சாகம்பரி said...

இந்த பதிவுகளில் அறிமுகம் மட்டுமே செய்ய எண்ணுகிறேன். அதனால் எளிதாகவே வார்த்தைகளை பயன்படுத்துகிறேன். நன்றி ரமணி சார்.

 
On November 13, 2011 at 6:35 PM , Anonymous said...

தெளிவாக புரியும்படி இருக்கிறது...அருமை...தொடருங்கள்

 
On November 14, 2011 at 6:33 AM , ஷைலஜா said...

//ஒவ்வொரு பொருளுக்கும் காலசுழற்சி என்பது உண்டு. அண்டவெளிக்கு இருப்பது போலவே தோற்றமும் மறைவும் மீண்டும் தோன்றுதலும். குறிப்பிட்ட நிகழ்வு எனப்படுவது அந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட பொருட்களுடைய காலமும் சேர்ந்ததுதான்.

////சாகம்பரி, இந்தப்பதிவை இப்போதுதான் வாசித்தேன்...என்ன அருமையா எழுதறீங்க...என்னால இதெல்லாம் எழுதமுடியுமான்னா அது சந்தேகம்தான்..தொடருங்க..

 
On December 26, 2011 at 4:22 PM , Shakthiprabha said...

//விபத்து ஏற்படாமலும் போகலாமே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது இந்த கேள்வியை குறித்து வையுங்கள். பிறகு விளக்குகிறேன்.
//

இங்க தான் chance என்கிற probability theory வருகிறதொ..

தொடர்கிறேன். சில அறிவியல் தமிழ் வார்த்தைகள் கடினமாக உள்ளன. சொல்ல வந்த விஷயம் புரிந்து விட்டதால், ஒரு மாதிரி அர்த்தம் செய்து கொண்டேன்.