23:14 | Author: அன்னைபூமி
கூத்துக்கலையில் வீழ்ந்து ஆடும் ஆட்டங்கள்

துடி
       கடலின் நடுவே ஒளித்த சூரபதுமனை வென்ற பிறகு அக்கடலையே அரங்கமாகக் கொண்டு துடி கொட்டியாடிய கூத்துத் துடி என்ப்படும்.

கடையம்
        வாண்னுடைய சோ என்னும் நகரத்தின் வடக்குப் புறத்தில் இருந்த வயலில், இந்திரனுடைய மனைவி அயிரானி உழத்தி உருவத்தோடு ஆடிய உழத்திக்கூத்து கடையக்கூத்து எனப்படும். இதற்கு உறுபுகள் ஆறு.

பேடு
       மன்மதன் தன் மகனான அநிருத்தனைச் சிறை மீட்பதற்காக வாணனுடைய சோ என்னும் நகரில் பேடி உருவம் கொண்டு ஆடிய ஆடல் பேடு எனப்படும். இது நான்கு உறுப்புக்களை உடையது.

மரக்கால்
       கொற்றவை முன் நேராக எதிர்த்துப் போர் செய்ய முடியாத அவுணர், வஞ்சனையால் வெல்லக்கருதிப் பாம்பு, தேள் முதலிய ஏவிவிட, அவற்றைக் கொற்றவை மரக்காலினால் உழுக்கி ஆடிய ஆடல் இது. இதற்கு நான்கு உறுப்புகள் உண்டு.

பாவை
       அவுணர்கள் மோகித்து வீழ்ந்து இறக்கும் படி ஆடிய கூத்து இது, இப்பாவைக் கூத்து மூன்று உறுப்புக்களையுடையது.

இப்பதினொரு வகை ஆடலையும் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் மாதவி ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்லுகின்றது.
இந்தப் பதிப்புடன் கூத்த்துக்கலை முடிவு பெற்றது.
00:03 | Author: அன்னைபூமி
கூத்துகலையில் முதல் ஆறு வகை நின்று ஆடுவது. இதில் முதல் மூன்று, அவை பின்வறுவன.

அல்லியம் 
                    இது கண்ணன் யானையின் மருப்பை ஒடித்ததை காட்டும் ஆடல், இந்த ஆடலுக்கு ஆறு உறுப்புகள் உண்டு.


கொடுகொட்டி
                        சிவபெருமான் முப்புரத்தை எரித்து, அது எரியுண்டு எரிவதைக் கண்டு வெற்றிக் களிப்பினால் கைகொட்டி நின்று ஆடிய ஆடல் இது. கொட்டிச் சேதம் என்றும் இதற்குப் பெயர் உண்டு. இந்த ஆடலுக்கு நான்கு உறுப்புகள் உண்டு. இவ் ஆடலில் உட்கு (அச்சம்), வியப்பு, விழைவு, பொழிவு என்னும் குறிப்புகள் உண்டு.


குடைகூத்து
                       இது முருகன் அவுணரை வென்று ஆடிய ஆடல் இக் கூத்திற்கு நான்கு உறுப்புகள் உண்டு. காவடி என்னும் பெயருடன் இக்காலத்தில் ஆடுகிற கூத்து, குடைக் கூத்துப் போலும்.


நன்றி, மீதம் உள்ளவற்றை அடுத்த பதிப்பில் காண்போம்.
00:05 | Author: அன்னைபூமி
கூத்துக்கலை, தெய்வங்கள் தமது பகைவரான அவுணர்களுடன் போர் செய்து வென்று, வெற்றிக் களிப்பில் ஆடிய ஆடல்கல். இவை, பதினொரு வகைப்படும்
1 அல்லியம்
2 கொடு கொட்டி
3 குடை
4 குடம்
5 பாண்டரங்கம்
6 மேல்
7 துடி
8 கடையம்
9 போடு
10 மரக்கால்
11 பாவை
இவற்றில் முதல் "ஆறு" நின்று ஆடுவது; பின்னுள்ள ஐந்தும் வீழ்ந்து ஆடுவது.இந்த ஆடல்களை ஆடத் தொடங்கும் முன்னர் திருமாலுக்கும் சிவ பெருமானுக்கும் தேம்பாவணி பாடப்படும் என்று சொலப்படுகின்றது.
                                                                               இந்த ஆடல்களை எந்த தெய்வங்கள் எதன் வெற்றிக் களிப்பில் ஆடினார்கள் என்பதை அடுத்த பதிப்பில் காண்போம்.
22:14 | Author: அன்னைபூமி
தமிழர்க் கலை என்னும் இப்பகுதியில் முந்தைய காலத்தில் நம் மக்கள் உருவாக்கிய, பயன்படுத்திய, பின்பற்றிய கலைகலைப் பற்றி காண்போம். இன்றைய படைப்பில் கூத்துக்கலை பற்றியும் அதில் உள்ள உட்பிரிவுகள் பற்றியும் காண்போம்.
                                   ஆடற்கலை என்னும் கூத்துக்கலை பழமை வாய்ந்தது. இசைக் கலையுடன் நெருங்கிய தொடர்புடையது. வாயினால் பாடப்படும் இசைப்பாட்டுக்கு செந்துறைப் பாட்டு என்றும், கூத்துக்கலைக்குரிய பாட்டுக்கு வெண்டுறைப் பாட்டு என்றும் பெயர் உண்டு. பண்டைக் காலத்தில் 'தெய்வ விருத்தி' என்னும் ஆட்டம் தெய்வங்களின் பெயரால் ஆடப்பட்டது. இவை பதினொரு வகைப்படும். 
                              கூத்துக்கலையின் வகைகள் அதன் விளக்கங்கள் பற்றி அடுத்த பதிப்பில் காண்போம்.