13:33 |
Author: பிரணவன்
அந்நாளில் தேடுதல் என்ற ஒன்றே மனித வாழ்வாதரங்களை பெரிதும் பூர்த்தி செய்வதாக அமைந்தது. உறைவிடம் அற்ற மனிதன் உணவை மட்டுமே தேடினான். காடுகளுக்குள் தன் வாழ்க்கையை தொடங்கிய மனிதன் அவனுக்கு உணவு மட்டுமே பிரதானமாக இருந்தது, பின் ஆற்றங்கரைகளில் குடியேரினான், நெருப்பு, சக்கரம் என அவனது தேடலும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே சென்றன. ஆரம்பம் முதலே விலங்குகளை வேட்டையாடி உணவிற்காக மட்டுமே பயன்படுத்திவந்த அவன் பின் நாளில் அதனை தன் வளர்ப்பு பிராணியாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். முதலில் காட்டு ஆடு, பின் யானை பிறகு மாடு என பல வலிய மிருகங்களை தன் இயல்பிற்கு கொண்டுவந்தான்.
கிரிஸ்த்து பிறப்பதற்கு 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் கோதுமை மற்றும் பார்லி பயிரிட்டு வளர்த்ததாக சொல்லப்படுகின்றது, கி.மு 8000 முதல் 6000 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களில் நெல், பருத்தி போன்றவையும் பயிரிடப்பட்டதாக சொல்லப்படுகின்றது, இந்த காலகட்டத்தில் தான் யானையும் வீட்டு விலங்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இயற்க்கையை மட்டுமே சார்ந்த இந்த வாழ்வில் நீர்பாசனம் என்ற ஒன்று கி.மு 4500 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. பின் இதையடுத்த வேதகாலம், கிரிஸ்த்துவ காலம், போன்ற காலங்களிலும் கூட மக்களில் வாழ்வாதரம் என்பது விவசாய உற்பத்திசார்ந்து தான் அமைந்தைருந்தது. பின் நாளில் மனிதன் கடுமையான உழைப்பில் இருந்து விலகி சுகமாக வாழ்வது என்பதற்கு பழகத்தொடங்கிவிட்டான்.
விவசாயம் என்பது பிரதானமாக இருந்த காலம் மாறி இயந்திரத்தொழில், அணு, வாகனம், சாயத் தொழில், மின்உற்பத்தி, குளிர் பாணங்கள், மது, கேளிக்கை என அத்தியாவசியம் சாந்துஅல்லாத பல தொழில்கள் உருவெடுக்க தொடங்கிவிட்டன.
முன் நாளில் அத்தியாவசியம் என கருதப்பட்டது உணவு, உடை, இருப்பிடம், இந் நாளில் அப்படியா ? எல்லாவற்றிலும் செயற்கையை புகுத்திவிட்டோம். செயற்கை குளிர்பாணம், பாலி எஸ்டர் ஆடைகள், உரைகள், பாதுகாப்பு பெட்டகங்கள், முக்கியமாக தொலைத்தொடர்பு, அணு ஆயுதம் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
மனிதனின் தன் நிறைவு என்ற ஒன்றே இந் நாளில் இல்லாமல் போய்விட்டது. நாணயங்கள் சங்க காலம் முதலே பயண்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்றது, அவைகள் ஆட்சியாளர்களில் அடையாளங்களை சுமந்த படியே இருந்ததே தவிர பெருவாரியாக புழக்கத்தில் இல்லை, அதாவது சாமானியர்களை சென்றடையவில்லை, பண்டமாற்று முறையே பெரிதும் பயன்பாட்டில் இருந்தது, பண புழக்கம் என்பதே ஆங்கிலேய ஆட்சியிலேயே கொண்டுவந்தாதாக சொல்லப்படுகின்றது, ஆனால் இந்தியாவில் மூன்று இடங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் தொழிற்சாலை அந் நாளில் இருந்து இன்றளவும் செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந் நாளில் உற்பத்தியின் மதிப்பு குறைந்து நாணயத்தின் மதிப்பு மட்டுமே அதிகரிக்க தொடங்கிவிட்டது. நெல் உற்பத்தியில் ஒருவர் ஒரு ரூபாய்க்கு 25காசு மட்டுமே லாபம் அடைகின்றார் என்பது மறுக்க முடியாத உன்மை. ஆனால் விவசாயம் அல்லாத பிறதொழிலில் ஈடுபடுபவர்கள் அடையும் நிகரலாபம் 3 முதல் 5 மடங்கையும் தாண்டி செல்கின்றது. இங்கே வாங்கி விற்பவர்களுக்குத்தான் அதிக லாபம்.
மனிதனின் அத்தியாவசியத்திற்காக வேலை செய்பவன் தன் உடல் உழைப்பையும் கொடுத்து குறைவான லாபத்தையே அடைகின்றான், மாறாக ஒரு தொலைதொடர்பில் வேலை பார்ப்பவனோ, கணினியில், சொகுசு வாகனங்கள், பொருட்கள், மதுபாண உற்பத்தி என இதன் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கின்றது. இயற்கை பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் மீதான கவனம் குறைவுதான்.
விவசாயம் மீதான கவனம் குறைந்து, சொகுசு வாழ்க்கை மீதான கவனமே அதிகரித்துவிட்டது. . .
23:47 |
Author: பிரணவன்
வறட்சி மாவட்டங்கள் என முற்காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களில் வளர்க்கப்பட்ட மரம் தான் கருவேல மரம், பெரும்பாலும் கரி மற்றும் விறகு எரிபொருளுக்காக இந்த மரம் வளர்க்கப்பட்டது,. வறட்சி காலங்களில் மக்களின் வருவாய்க்காக இந்த மரங்கள் வளர்க்கப்பட்டது. இன்று தமிழகத்தின் வறட்சிக்கு இதுவே முக்கிய காரணம் ஆகிவிட்டது. ஏனெனில் இம் மரத்தின் தன்மை அப்படி இதன் வேர்கள் மண்ணின் ஆழம் வரை சென்று அங்கு இருக்கும் நீரை உறிஞ்சும் தன்மை கொண்டவை, இதன் அருகில் எந்த வித சிறு செடியையும் வளரவிடாது, முக்கியமாக இதை வேரோடு பிடுங்கினால் மட்டுமே அழிக்க முடியும், ஆனால் அது அவ்வளவு எளிதல்ல, இதன் வேர்கள் அதிக ஆழம் வரை செல்லக்கூடியவை.
ஆனால் கருவேலம் ஒரு மரம், இப்ப விஷயத்திற்கு வருவோம், அடக்கவிலை 40 பைசாவிற்கும் குறைவாக தயாரிக்கப்பட்டு 2ரூபாய் முதல் 4ரூபாய் வரை விற்கப்படும் தண்ணீர் பைகள். மற்றும் 13 ரூபாயை தாண்டிய ஒரு லிட்டர் தண்ணீர் புட்டிகள், இதற்கு காரணம் எல்லாம் பொருளாதாரமயமாக்கப்பட்ட பின், தண்ணீரும் விற்பனைக்கு வந்துவிட்டது.
இதுவும் விஷயம் அல்ல, இவைகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன. அதிக நீர்வளமிக்க இடங்களில் 500 முதல் 1500அடிக்கு மேல் ஆழ்துளை கிணறு உருவாக்கப்பட்டு அங்கு இந்த தண்ணீர் புட்டிகள் ( நிரப்பப்படுகின்றன) தயாரிக்கப்படுகின்றன. இந் நிலப்பரப்பைச் சுற்றி இருப்பது விவசாய நிலங்கள். இங்கே உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க நிலத்தடி நீர் குறைந்து கொண்டே செல்கின்றது, பின் விவசாய நிலங்கலும், வறட்சி நிலமாகின்றன.
கருவேல மரத்தை பற்றி ஏன் நான் முதலில் சொன்னேன்னு தெரியுதா, சொல்றேன், அவைகளாவது தனக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டும் எடுத்துக்கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை மற்ற தாவரங்களுக்கு விட்டுவிடுகின்றன. இதன் செயல்முறைகள் இயற்கையின் வசம் இருகின்றன. ஆனால் மனிதால் உருவாக்கப்பட்ட தாண்ணீர் புட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், எந்த நிலையிலும் தன்நிறைவு அடைவதில்லை. முடிவில் அந் நிலம் வறட்சியாகின்றது.
நாம் குடிக்கும் தண்ணீருக்கு நாமே பணம் கொடுக்கின்றோம். நாமே நம் நிலத்தையும் வறண்ட பூமியாக்குகின்றோம். இந்த நாசகார வேலையை பல வெளி நாட்டு நிருவணங்கள் நம் நாட்டிலையே துணிச்சலாக செய்கின்றன. இவர்கள் போதாது என்று நம்மவர்கள் வேறு இந்த தொழிலை செய்கின்றனர். நம் தலையில் நாமே மண்னை வாரி போட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய வாழ்விற்காக நம் எதிர்காலத்தை இருள் அடித்துக்கொண்டிருக்கின்றோம், இம்மாதிரியான உற்பத்தி ஆலைகள் வளமிக்க கிராமபுறங்களில் ஆரம்பிக்கப்பட்டு வருகிறன. மாறாக கடல் பகுதியை சுற்றியுள்ள நில பரப்புகளில் மட்டும் இம்மாதிரியான தொழிற்சாலைகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால் நல்லது. . .
19:11 |
Author: அன்னைபூமி
கீதை பல நல்ல தத்துவங்களை சொல்கிறது. கீதோபதேசத்தின் முக்கிய சாரம் பெருபாலானோருக்குத் தெரியும். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியது. போர்களத்தில் அர்சுனனுக்கு உபதேசித்தது . ஏன் அர்சுனன்?
பகவத் கீதைக்கு முந்தைய உபதேச நூல்கள் எல்லாம் வேத ரிஷிகள் தங்களுடைய சீடர்களுக்கு சொன்னதாக வரும். ஆனால் கீதை மட்டும்தான், ஒரு சத்திரியனுக்கு உபதேசிக்கப் பட்டது, சாமானியர்களுக்கும் நீதி சொன்ன நூல். இது சாமானியர்களை சென்றடைய வேண்டும் என்றால், உபதேசிக்கப்படுபவன் அதே ரகமாக இருக்க வேண்டும். அப்போதுதான், உலகத்தின் பார்வையை கொண்ட கேள்விகள் கிட்டும். மேலும் மேலும் கேள்விகள் கேட்பதானால் விரிவான, தெளிவான பதில்கள் கிட்டும்.
தருமர் இது பற்றித் தெரிந்தவர், தெரிந்தவரிடம் கேள்வி எழாது. பீமன் செயல் வீரன் - கண்ணன் சொன்னதை செய்வான்,கேள்வி எழாது. நகுலன், சகாதேவன சகல் சாஸ்திரமும் தேர்ச்சி பெற்றவர்கள், சந்தேகமே எழாது. ஆனால், அர்சுனன், தன் செயல்களில் நம்பிக்கை வைத்திருப்பவன். அவன் மனம் ஒப்பினால்தான் செயலில் முழு மனதோடு இறங்குவான். நிறைய இடங்களில் தர்மர் அவனுக்கு விளக்கம் சொல்லியிருப்பார். எப்போதுமே கேள்வி கேட்டு பதில்களால் சமாதானம் ஆகிறவன். அதே சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வத்தன்மையை உணர்ந்தவன் என்பதால், சரியான கேள்விகள் கேட்கப்படும். ஒரு மாணவன் எப்படியிருக்க வேண்டும் எனபதற்கு உதாரணமாக அர்சுனனை சொல்வார்கள். ஆசிரியரிடம் மரியாதையும், பாடத்தை புரிந்து கொள்வதில் தர்க்க ரீதியான அணுகுமுறையும் இருக்க வேண்டும்.
22:04 |
Author: அன்னைபூமி
கதிர்வீச்சு சீவாட் என்ற கணக்கில் அளக்கப்படுகின்றது. ஒரு சீவாட் என்பது 1000 மில்லி சீவாட் ஆகும். தொலைக்காட்ச்சி பார்ப்பது, எக்ஸ்ரே எடுத்துக்கொள்வது போன்றவை மூலம் கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்குகின்றன.
ஒரு சீவாட் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் வாந்தி, மயக்கம் ஏற்ப்படும் ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. 5 சீவாட் கதிர்வீச்சு தாக்கம் என்றால் ஒரு மாதத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
நமது உடலில் உள்ள செல்கள் ஒவ்வொன்றும் பலவாக பிரிந்து அதிகரிக்கும் தன்மை கொண்டவை. குறிப்பிட்ட காலத்தில் அந்த செல்கள் தாங்களாக இறந்துவிடுகின்றன. ஆனால் கதிர்வீச்சு தாக்கம் ஏற்பட்டால் அந்த செல்கள் அழியும் தன்மை நீங்கி புற்று கட்டியாக மாறிவிடுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு 100மில்லி சீவாட் கதிர்வீச்சு தாக்கினால் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
15:33 |
Author: அன்னைபூமி
31 நாடுகளில் அணு சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் தற்போது 443 அணு உலைகள் உள்ளன. 62 உலைகள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக 482 அணு உலைகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அணு சக்தி உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கின்றது. உலகில் உற்பத்தியாகும் அணுசக்தியில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 27 சதவிகிதம் ஆகும். அமெரிக்காவை அடுத்து 17 சதவிகித பங்களிப்புடன் பிரான்சு 2 வது இடத்திலும், 13 சதவிகித பங்களிப்புடன் ஜப்பான் 3 வது இடத்திலும், 6 சதவிகித பங்களிப்புடன் ரசியா 4 வது இடத்திலும், 5 சதவிகித பங்களிப்புடன் ஜெர்மனி 5 வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 20 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மேலும் கட்டுமான பணியில் (projects under construction) 8 உலைகளும், கட்டுமான பணி திட்டமிடலில் (planned projects)21 உலைகலும், அணு உலை அமைக்க திட்டமிடலில் (projects are firmly proposed)15 உலைகளும் பயன்பாட்டிற்கு வருகைதர உள்ளன. திட்டங்கள் முடிவடைந்த நிலையில் செயல் பாட்டின் துவக்க நிலையில் 2 அணு உலைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தமிழ் நாட்டில் செயல்படப்போகின்றது.
ஆனால் இந்தியாவில் வெறும் 2 .2 சதவிகிதம் மின்சாரம் மட்டுமே அணு மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செயப்படுகின்றன.
நமது அடுத்த பதிப்பில் அணு உலைகளால் ஏற்ப்படும் பாதிப்புகள் பற்றி காண்போம் . . .
00:33 |
Author: அன்னைபூமி
எத்துனை இதயங்கள் இருந்தாலும், ஒரு இதயத்திற்காக துடிக்கவும், இறக்கவும் துணிவதுதான் காதல். காதல், அனைத்தையையும் அழகாய்காட்டும். காதல் இறக்கை கட்டிப்பறக்கும் ஒரு சிந்தை கலங்கிய பறவை. எந்த திசையும் தெரியாத ஒரு அழகான கடல் பகுதி. வின்மீங்கள் நிரப்பப்பட்ட செவ்வானம். ஒரு முழுச்சந்திரன். இப்படி காதலை வர்ணித்துக்கொண்டே செல்லலாம். காதல் அழகானது தான் ஆனாலும் அன்றில் இறுந்து இன்று வரை பெற்றோரின் புரிதலுக்கு அப்பார்பட்டதாக உள்ளது. இதில் நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லையா?. இல்லை அவர்கள் நம்மை புரிந்துகொள்ளவில்லையா?. ஆனால் காதலில் புரிதல் மட்டும் அவசியம். காதலை இன்று பலரும் கையில் எடுத்துக்கொண்டுவிட்டனர், எடுத்தவரெல்லாம் வென்றுவிட்டால் காதல் மரம் இன்று படிமமாய் மாறியிருந்திருக்காது. காதலுக்கென்று தனி வரையரை ஒன்றும் இல்லை. அது கையில் எடுத்தவர்களின் கண்ணோட்டத்தை பொருத்தது. பலதரப்பட்டவர்களும் காதலை அனுவிக்கின்றனர் ஆனால் வாழ்க்கை முழுவதும் காதலுடன் வாழ்கின்றனரா? என்றால் அது அவரவர்களைச் சார்ந்தது.
காதலிக்கத் தொடங்கும் முன் தயவு கூர்ந்து உங்களின் குடும்ப சூழ்நிலையை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். காதல் பிறப்பதற்கு எந்த தருணமும் தேவை இல்லை, ஆனால் பிறந்தது காதலா? இல்லையா? என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கின்றதா என்பதை நீங்கள் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
காதலில் வெற்றிபெற்றவர்கள் தோல்வியடைந்தவர்கள் பற்றி நீங்கள் கவலை படத்தேவை இல்லை. ஆனால் அவர்களின் வாழ்க்கையில் நடந்தன வற்றை உங்களுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது நல்லது. அவர்களுக்கு நடந்தன அனைத்தும் உங்களுக்கு நடக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை ஒருவேலை அதற்கு மேலும் நடக்கலாம்.
காதல் செய்வதற்கு தகுதிகள் தேவையில்லை ஆனால் அதை தக்கவைத்துக்கொள்ள கண்டிப்பாக தகுதிகள் அவசியம். காதலின் மேல் சமுதாயத்தின் பார்வையில்லை, ஆனால் அதுவே திருமணமாக மாறும் போது அனைவரின் பார்வையும் காதலர்களின் மேல் திரும்புகின்றது. எதையும் எதிர்பார்க்காமல் வந்த காதல் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்திசெய்யமுடியாமல் இறுதியில் தோல்வியில் முடிகின்றது.
00:46 |
Author: அன்னைபூமி
மது இல்லாத தமிழகம் உருவாகுமா? இந்த கேள்விக்கு முதலில் மதுவை எதிர்க்கும் பல கூட்டங்கள் மக்கள் மத்தியில் உருவாகி இருந்திருக்க வேண்டும். அப்படி எந்த ஒரு நிகழ்வும் இங்கு நடந்ததாக தெரியவில்லை, மாறாக இன்றைய நிலையில் மது அருந்துவோர் மறுவாழ்வு மையங்கள் தான் பல இடங்களிலும் காணப்படுகின்றன. மதுவை வைத்து வாழ்வது பல குடும்பங்களா? இல்லை சாவது பல குடும்பங்களா? என்றால் சாதல் தான் அதிகம். ஆனால் இன்று இது வெளிப்படையாக தெரியவில்லை, காரணம் மது மக்களிடையே ஊரிப்போய் விட்டது. மதுவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் செயல்களை பொருத்துக்கொல்லும் சமூகமும் சூழலலும் இன்று உறுவாகிவிட்டது.
ஒரு செயலை நாம் செய்ய வேண்டும் என்றால் அதை பற்றிய அறிமுகமோ அல்லது அதில் முன்னோடியாக இருப்பவர்களின் வழிநடத்துதலோ தேவைப்படுகின்றது, செயலுக்கான கலமும் நம் அருகில் இருப்பது அவசியம். நாம் எதிர்பார்க்கும் ஒரு வேலைக்கே இத்துனை படிகள் என்றால், மது அருந்துவதர்க்கு? இதில் ஒரு அவசியமும் இல்லை, ஒரு முறை வாசம் பிடித்துவிட்டால் நம் நாசித்துளைகளை விட்டு இவைகள் அகல்வதே இல்லை. இப்படி ஒருவரால் அறிமுகபடுத்தப்பட்டு பின் நம்மால் பலருக்கு பயணிக்கும் இந்த பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க ஒருவருமே இல்லை.
நம் மனச்சோகங்களை பகிர்ந்துகொள்ள, இறக்கிவைக்க பின் என்னதான் வழி எங்கின்றீர்களா? இதற்கான பதிலையும் வழிமாறி நடந்த நாம் தான் யோசித்தாக வேண்டும். எந்த ஒரு மனிதனிடத்தும் போதைக்கான தேடல் இல்லாமல் இல்லை. இன்றைய சூழழில் மது ஒரு சிறந்த வழித்தடம். பலரும் இந்த முட்பாதையில் நடந்து இதை சிறந்த பாதையென பெயர் மற்றம் செய்து பெயர்பலகை அடித்துவைத்துவிட்டனர். உடனடியாக இந்த பாதை அடைக்கப்பட்டுவிட்டால், பயணிப்பவர்கள் பாதை மாறி போவார்களோ என்ற பயமும் எழுகின்றது. இதற்கு சிறந்த வழி பாதையை இன்னும் அதிகப்படுத்தாமல் முதலில் குறுகளாக்கி பின் அதை அடைத்து விடலாம். நமது வாழ்வில் இன்றுவரை தொடர்ந்து வந்த இந்த மதுவை நாம் கைவிட்டே ஆகவேண்டும்.
மக்களின் வழ்வில் அதீதம் ஊறிவிட்ட இந்த மது இன்று அரசுடமை ஆக்கப்பட்டு, புத்தாண்டுக்கும், தீபவளிக்கும் 70 கோடிகள் 80 கோடிகள் என்று வருமாணம் ஈட்டித்தரும் நல்ல லாபகரமாண தொழிலாக உருப்பெற்றுவிட்டது. நாளை மதுக்கடை விடுமுறை என்றால் முதல் நாளே பல புட்டிகளை வாங்க்கிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம். ஒரு நாள் கூட இதை பிரிய மனம் இல்லாமல் இப்படியும் செய்கின்றனர் பலர். மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிடும் நிலை வரும் என்றான் பாரதி, இன்று அழித்தே சாப்பிடும் நிலைக்கே வந்துவிட்டோம்.
அரேபிய நாடுகளில் மதுவே கிடையாது, மது அருந்துவது குற்றம்.ஏன் பஞ்சாப்பில் மதுவிலக்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்திலும் மதுவிலக்கு நடைமுறை படுத்தப்பட்டால் இனி வரும் நம் இளைய தலைமுறை சிறந்த தலைமுறையாக மது வாசம் அற்ற தலைமுறையாக மலரும் என்பதில் வியப்பேதும் இல்லை.முதலும் முடிவுமாகச் சொல்லப்போனால் மது நாட்டுக்கு, வீட்டுக்கு, நம் உயிருக்கு கேடு.!!!!!!!!!
00:54 |
Author: அன்னைபூமி
அழகழகாய் வண்ண வண்ண புட்டிகளில் அடைபட்டிருக்கும் இவைகள் பலரின் கவலைகளையும், மனக்குமுறல்களையும், பலதரப்பட்ட நினைவலைகளில் இருந்தும் அவர்களை நிலைமறக்கச்செய்யும் இனிமையான அழகிகள். சில இனிப்பான நேரங்களின் போதும் ரசமேற்றிக்கொடுப்பதும் இதுதான். மது மனிதர்கள் கவலை மறக்கவும் சந்தோசமாய் இருக்கவும் பயன்படுகின்றது என்றால் அது உன்மைய்யா? இதற்கு ஆம் என்றே பதில் சொல்லியே ஆகவேண்டும்.
இன்றைய சூழலும் தொடர்பும் அப்படி மனிதர்களை மாற்றிவிட்டது, என்றல் அது உன்மைதான். கிராமங்களில் நூலகம் இருக்கின்றதோ இல்லையோ கண்டிப்பாக மதுக்கடைகள் காணப்படுகின்றன. கிராமங்களிலேயே இந்த நிலை என்றல் நகரங்களைச் சொல்லவா வேண்டும். ஆம் சொல்லித்தான் ஆகவேண்டும். வசதி படைத்தவர்கள் சென்று மகிழயென குளிரூட்டப்பட்ட மதுக்கடைகள், ஒளி மங்கிய விளக்குகள் என மரணத்தை வரவேற்கும் மயாணங்கள் பல.
மனிதனின் சோகம், மகிழ்ச்சி, என்பதை தாண்டி திருவிழாக்கள், திருமணங்கள், இறுதி ஊர்வலம் என அத்தனைகளிலும் தனது முத்திரையை பதித்துவிட்டது இந்த மது. இதற்கு யார் காரணம்?
சற்று காலத்திற்கு முன்னர் அன்றைய நாட்களில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மிககுறைவு, வயதில் மூத்தவர்களும் உடல் வருந்தி உழைப்பவர்களும் மட்டுமே செல்லும் பழக்கம் இருந்தது. இளைஞ்கர்கள் மூத்தவர்களின் வார்த்தைக்கு பயந்து நடத்தையில் ஒழுக்கத்தை பின் பற்றினர். அவர்களின் சிந்தனையும் அன்றைய சூழலும் வேறு.
திருவிழாக்களும், திருமணநிகழ்வுகளும், விளையாட்டுகளும் அதன் சடங்குமுறைகளும் அன்றைய மனிதர்களின் வாழ்க்கை முறையை சந்தோசமாகவும், சீறிய நெறிமுறையோடும் வழிநடத்தியது என்றால் அது மிகையில்லை.
இன்றைய சூழ்நிலையில் எல்லாவற்றிர்க்கும் ஆரம்பமும் முடிவுமாக மதுக்கடை இருக்கின்றது. ஆம் கல்லூரியில் சேர்ந்ததில் தொடங்கி முதல் மதிப்பெண், புது வண்டி, முதல் காதல், காதல் தோல்வி, திருமணம், முதல் குழந்தை என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.
படித்தவர்கள் முதல் பாமரர் வரை மது ஊடுருவியதற்கு யார் காரணம். எண்ணில் அடங்கா மதுக்கடைகளா? இது தவறில்லையென மாற்றிவிட்ட சமூகமா? தனி மனித ஒழுக்கத்தை கை உதரிவிட்ட நல்ல உள்ளங்களா? இல்லை வழினடத்த வேண்டிய ஆசானா, அரசனா? யாரைச்சொல்ல.
தவறுகள் பழகிப்போனதால் சரியென்று ஆனது. பல குடும்பங்களின் வழ்வும் பறிபோனது. பழகிய காரணத்தால் கைவிட முடியாத விஷ்வாசியாகிவிட்டது மதுவும்.
தன்னிலை தவறுதலில் காரணமாகவே சமூகத்தில் தவறுகல் நிகழ்கின்றன. எனவே எந்த பிரச்சனைக்கும் யாரையும் குறை சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. தனி மனித ஒழுக்கமே சமூக மாற்றத்திற்கு வழிவகை செய்யும். சுய ஒழுக்கமே இன்றைய சமூகத்தை மாற்றும்.
எது வாழ்க்கைக்குத்தேவை என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், யாருக்காகவும் தவறுசெய்வதற்காக இனங்கிப் போகாதீர்கள். நன்றி. . . .!!!!!!!!!!
05:30 |
Author: அன்னைபூமி
ஒரு சிறிய கதை - கேள்விபட்டிருக்கலாம், இருந்தாலும்... ஒருவன் தவளையை நிற்க வைப்பது பற்றி ஆராய்ச்சி செய்த கதைதான். முதலில் தவளையின் ஒரு காலை வெட்டிவிட்டு "நில்" என்றானாம். மூன்று கால்களில் தவளை நின்றது. பிறகு இரண்டாவது காலையும் இழந்து " நில் " கேட்டு மீதி இரு கால்களில் நின்றது. அப்படியே மூன்றாவது காலையும் இழந்து ஒரு காலில் நின்றது. நான்காவது காலும் போனபின் நிற்க இயலாமல் தவளை அப்படியே கிடக்க , ஆராய்ச்சியின் முடிவை எழுதினான். நான்கு கால்களையும் வெட்டிவிட்டால் தவளைக்கு காது கேட்பதில்லை என்று.
இது கொஞ்சம் பழைய விசயம். இதற்காக ஒரு பக்கத்தை ஒதுக்கி பதிவு செய்யவேண்டியிருக்கிறது. டார்வினின் கோட்பாட்டின்படி மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நாம் நிமிர்ந்து மனிதனாய் நடக்க ஆரம்பித்ததே ஆராச்சியின் விளைவுதான். நம்முடைய ஐந்து புலன்களும் தெரிவிக்கின்ற சேதியை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அதில் மறைந்துள்ள அர்த்தத்தையும் கண்டுணர வேண்டும். பழந்தமிழகத்தில் முன்பிருந்து மூத்தகுடியினர் இதில் தேர்ச்சி பெற்றிருந்ததால்தான் அரிய விசயங்கள் ஓலைச்சுவடிகளாக கிடைத்தன. போகர், அகத்தியர், புலிபாணி போன்றவர்களின் பதிவுகள் இதனை பெரிதும் நிருப்பிக்கின்றன. அந்த திறமை தொப்புள் கொடி அன்பளிப்பாக வழிவழியே வந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து விட்டது போல தோன்றுகிறது.
கல்விமுறையின் கற்பித்தலின் முறைமாறி புரிந்து படிக்காமல் மனப்பாடம் செய்வது, எப்பொருள் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காணாமல் ஒப்பிப்பது போன்றவை யோசிக்கும் ஆற்றலையே சிதைத்து விடுகின்றன. வாழ்க்கையிலும் இதே கடைபிடிக்கப்படுகிறது. பெற்றோரோ ஆசிரியரோ கண்டித்தால், அவர்கள் முற்றிலுமாக வெறுத்து விட்டதாகக் கருதி தற்கொலை முயற்சி மேற்கொள்வது போன்ற மடமை உள்ளது. சமீபத்தில் காதலி இரண்டு நாட்களாக அலைப்பேசியில் பேசவில்லை என்று இளைஞன் ஒருவன் தற்கொலை செய்துகொண்டான். ஒரு செயலோ சொல்லோ அதன் உட்கருத்தினை புரிந்துகொள்ளவேண்டும். இது போன்று ஆராய முற்படும்போது பதிவின் ஆரம்பத்தில் சொன்ன கதையை போல அன்றி உண்மை பொருளை கண்டு கருத்தில் கொள்ள வேண்டும். மகாகவி சொன்ன "நுனியளவு செல்" என்பதன் இன்றைய பொருளும் இதுதான்.
21:36 |
Author: அன்னைபூமி
அனு ஆயுதம் ஒரு நாட்டின் எல்லைகளை வேண்டுமானால் பாதுகாக்கும். மனித இனத்தை பாதுகாகுமா என்றால் ? கேள்வியே மிஞ்சும்........
அனு ஆயுதம் என்பது அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெரும், வெடிப்பாயுதமாகும். மற்ற வெடி பொருட்களோடு ஒப்பிட்டு பார்த்தால் அனு ஆயுதத்தின் சக்தியும் ஆற்றலும் அதிகம்.
முதல் அனு ஆயுதம் இரண்டாம் உலகப் போரின் பொழுது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா முதலிய நாடுகளின் கூட்டு முயற்சியால் மார்கட்டன் திட்டம் (markattan project) என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.
இந்த அனு ஆயுதம் அமெரிக்காவினால் இரண்டு முறை பயன் படுத்தப்பட்டுள்ளது (உலக வரலாற்றிலும் இரண்டு முறைதான்), இரண்டு தாக்குதல்களும் நாம் அறிந்த ஹிரோசிமா நாகசாகி சம்பவமே, இந்த தாக்குதலால் ஏற்பட்ட உயிர் இழப்பு பல ஆயிரம். பாதிப்பு இந்த தலைமுறையிலும் நீடிகின்றது. (இந்த அனு ஆயுதங்களின் பெயர் Little Boy & Fat மண்)
ஒரு நாட்டின் பாதுகாபிற்கும் வல்லரசு பயணத்திற்கும் அனு ஆயுதம் தேவை இல்லை. மாறாக அனு ஆயுதத்தை விடவும் சக்தி வாய்ந்த இளைஞ்கர்கள் நம் நாட்டிலும் மட்டற்ற நாடுகளிலும் உள்ளனர்.
உலக வெப்பமயமாதல் இந்த அனு ஆயுதத்தின் பங்களிப்பை பெற்றுக்கொண்டு தன்னுடைய அழிவை இந்த உலகத்திற்கு தர காத்திருக்கின்றது.
Little Boy & Fat man போன்றவற்றால் தேசியம் பாதுகாக்கப்படும். . . மனிதம் அழியும் . . .
அனு ஆயுதத்தை எதிர்ப்போம். . .
அன்னை பூமியை காப்போம். . .