14:22 |
Author: சாகம்பரி
ஆதி காலத்தில் இருந்து தொடங்குவோம். சில பெருமைமிக்க செய்திகளை தருகிறேன். கி.முக்களிலேயே அறிவியல், கணிதம், வானவியல், மருத்துவம் ஆகியவற்றில் சிறந்திருந்த நம் மூதாதையர்களின் சிறப்புமிக்க குறிப்புகள் வேதங்களிலும், சித்தர் பாடல்களிலும் ஓலைச்சுவடிகளாக பதியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தருகிறேன்.
அறிவியல் :
* சிறப்பான மருத்துவ குறிப்புகளை சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் காண முடிகிறது. அகஸ்த்தியர் - மூலிகை மருத்துவத்திலும்(microbiology), போகர் - கனிம மருத்துவத்திலும்(chemical components), புலிப்பாணி விலங்குகளை (biotechnology) பயன்படுத்திய மருத்துவ முறைகளிலும் சிறப்பான குறிப்புகள் தந்துள்ளனர். கதிரியக்க குறிப்புகளையும், அணு அளவில் மாற்றங்களை நிகழ்த்தக் கூடிய ரசவாத குறிப்புகளையும் சுவடிகளின் காணமுடிகிறது கி.மு 3000 அணுவின் அமைப்புகளை மாற்றி வேறு ஒரு கனிமமாக மாற்றும் வித்தையை போகர் குறிபிட்டுள்ளார்.
*. இரத்தும் உறிஞ்சும் அட்டைகளை(leach) வைத்து இப்போது ஆராய்ச்சிகள் உலக அளவில் நடைபெறுகின்றன. முதல் முதலில் 1020ல்தான் இது பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன. ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே ஆயுர்வேதத்தில் இது பற்றிய குறிப்புகள் உள்ளன. மருத்துவ கடவுளாக கருதப்படும் தன்வந்திரி பகவானின் கையில் மருத்துவ உபகர்ணங்களுடன் leach உள்ளது.
* அகஸ்திய சம்ஹிதா என்ற நூலில் ஒரு மின்சார பெட்டரியை தயாரிக்கும் முறை சொல்லப்பட்டுள்ளது.
வானவியல்
* ரிக் வேதத்தின் குறிப்புகளை கொண்டு கி.பி 1315ல் சாயனாச்சார்ய என்ற விஜய நகரப்பேரரசின் அறிஞர் ஒளியின் வேகத்தை குறிப்பிட்டுள்ளார். "ஓ, சூரிய கடவுளே அரை நிமிஷாவில் 2022 யோசனைகள் கடந்து வரும் உன்னை வணங்குகிறேன்" ஒரு யோசனை என்பது 9 மைல்கள், நிமிஷா என்பது 8/75 வினாடிகள்.. அவருடைய குறிப்பின்படி ஒலிவேகம் -186,413.22 மைல்/வினாடி. நவீன கணிப்பு 186,300மைல்கள்/வினாடி.
*சூரிய கதிர்களில் ஏழு வர்ணங்கள் உள்ளதை கி.மு 1500லேயே ரிக் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதையே ஏழு குதிரைகளாக தேரில் பூட்டியுள்ளதாக காட்டினர். நவீன கருத்தின்படி 1671ல் நியூட்டன் முதன்முதலில் ஸ்பெக்டரம் என்று குறிப்பிட்டார்.
* வேதங்களின்படி, ஒரு பூஜையினை செய்வதற்குமுன் சங்கல்பமாக கூறப்படுகின்ற வாக்கியத்தில் உலகம் ஆரம்பித்த நாலில் இருந்து இன்றைய நாளினை குறிக்கிறோம்."த்விதீய பரார்த்தே, ஸ்வேத வராககல்பே, வைவஸ்வத மன்வந்த்ரே, அஷ்டாவிம்ஸ்திதமே, கலியுகே" என்று வரும். இதன்படி

ஒரு மகாயுகா = 4 யுகங்கள் = 43,20,000 வருடங்கள்
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)
ஒரு மன்வந்திரம் = 30,84,48,000 வருடங்கள் (71 மகாயுகா+1 க்ரேதா யுகம்)
ஒரு கல்பம் = 432,00,00,000 (14 மன்வந்திரம்+1 க்ரேதா யுகம்) அல்லது 1000
மகாயுகம்
ஒரு கல்பம், இதுதான் உலகத்தின் வயதும்.
நவீன முறைப்படி 454,00,00,000 ரேடியோமெட்ரிக் முறையில் கணிக்கப்பட்ட வயது. பூமியுடனேயே பிறந்ததாக சொல்லப்படும் நிலவின் மாதிரி கற்களிலும் ஆராய்ச்சி செய்து இது உறுதிபடுத்தப்பட்டது.
கணிதம்
கி.மு -3000 - நீளம், எடை ஆகியவற்றை குறிக்கும் அளவீடுகள் வரையறுக்கப்பட்டன.
கி.மு 1500 - வேதகாலம் - வானவியல் கொள்கைகள், கணித வரைபாடுகள், எண்கள் ஆகியன உருவாக்கப்பட்டன.
கி.மு 200 - பூஜ்யம் குறிப்பிடப்பட்டது. அதுவரை நேர்மறை எண்கள்(+) மட்டுமே குறிப்பிடப்பட்டன, எதிர்மறை எண்களையும்(-) குறிப்பிட முடிந்தது.
கி.பி 400 - 1200- கணித சாஸ்திரத்திற்கான முக்கியமான காலகட்டம். கணிதவியல் வல்லுனர்கள் ஆர்யபட்டா, பாஸ்கரா, ஸ்ரீதரா ஆகியோரின் காலம்.
ஆர்யபட்டா ஒரு நாள் என்பது 23 மணிகள்,56 நிமிடங்கள், 4 வினாடிகளும் 0.1 விகிதத்தையும் கொண்டது என்று கணித்தார்.
நவீன கணக்குப்படி 23 மணி,56 நிமிடம்,4 வினாடி மற்றும் 0.091 விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.அவருடைய ஆர்யபாட்டியா என்ற நூலில் ஒவ்வொருரு கோள்களின் தொலைவும், அது சூரியனை சுற்றி வரும் நாட்களும் நவீன கணிப்புடன் ஒப்பிடும் அளவிற்கு மிகச்சரியாக கூறப்பட்டுள்ளன.
யோகா: இன்றைக்கு உலகம் முழுவது கொண்டாடிக் கொண்டிருக்கும் யோகாசன முறைகள் பதஞ்சலி முனிவரால் உருவாக்கப்பட்டன. இவர் கி.மு 147ல் வாழ்ந்தவர்.
காஷ்யப ரிஷி - முதன்முதலில் அணு என்ற ஒன்றை குறிப்பிட்டார். அணுவையும்(atom) பிளந்து பரம அணு (ந்யூட்ரான்?) என்று ஒன்று உள்ளதையும் குறிப்பிட்டார்.
அடுத்த பதிவில் இன்னும் பார்ப்போம்.
Thanks to Hindusutra.com |
Category:
கட்டுரை,
சிந்தியுங்கள்
|
7 comments:
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.
Aryabhatta's real name was Abdul Azizz bhatt..he was an arabic
everything came from Arabia.
allah gave all this.
it is given in KurAnn.
Brahmins stole everything/.
பயனுள்ள மரபுகளை அடையாளம் காட்டும் பதிவு..
அருமை
இன்று என் வலையில்
அடக்கம் செய்யவா அறிவியல்?
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html
காண அன்புடன் அழைக்கிறேன்.
Rathnavel said...
நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள் அம்மா.//
மிக்க நன்றி சார்.
ஆர்யபட்டா என்பவர் குப்த பேரரசின் ஸ்காலராக இருந்தவர். குப்த பேரரசின் காலம் கி.பி.320-550 என வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இவர் நாளந்தா பல்கலைகழகத்தின் வானவியல் துறையின் தலைவராக இருந்தார். தன்னுடைய 23வது வயதில் கி.பி.499ல் ஆர்யபட்டியம் என்ற நூலை எழுதியுள்ளார். இதில்தான் அவருடைய கணித கோட்பாடுகளும், வானவியல் கணக்கீடுகளும் உள்ளன. இவர் பாரதத்தின் பெருமைமிகு கணிதமேதைகளில் ஒருவர்.
முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி .திரு.குணசீலன் அவர்களே.