17:25 |
Author: சாகம்பரி
புதிய வானத்தில் உயிர்ப்புடன்
தானாவே சிந்தித்து பறக்கவே
தோளில் முளைத்த சிறகுகள்
மறைந்தே போனதும் புரிந்தது...
கால்கள் தரைத்தட்டி சொன்னது
கனவு மரத்தின் கனிகள் கைக்கு
எட்டிவிடும் தொலைவு இல்லை!
தலையை கோதி வருடியோ
பிடறியில் பிடித்து தள்ளியோ
ஏதோவொரு விசை வடிவில்
வந்தது வழுக்குமரப் பயணம்!
கண்கட்டியே நகர்ந்த நாட்களோ
தொலைத்தூரத்து தேடல்களில்
சிரிப்பும் அழுகையும் கடந்தன!
சொல்லி வைத்த கதைகளோ,
ஊட்டி வளர்த்த நெறிகளோ,
கற்றுத் தெளிந்த சாத்திரமோ,
தனித்து நீண்ட பாதையில்
பாதி வழி காட்டி பரிதவிக்க...
நினைப்பிற்கும் நிஜத்திற்கும்
கானலின் தூரம் இடையிட்டது !
மனம் மயங்கி மதியிழந்திட,
மரத்தடியோ வேறு எங்கோ..
இரவிலோ வேறு எப்போதோ...
சட்டென ஞானம் தோன்றியது,
கனவு மட்டுமே கண்டுகொண்டு
வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!
Category:
கவிதை,
சாகம்பரி கவிதைகள்
|
7 comments:
//கனவு மட்டுமே கண்டுகொண்டு
வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!//
ரொம்ப அருமையா சொல்லிட்டீங்க.. கவிதை ஜூப்பரு :-)
மனம் மயங்கி மதியிழந்திட,
மரத்தடியோ வேறு எங்கோ..
இரவிலோ வேறு எப்போதோ...
சட்டென ஞானம் தோன்றியது,
கனவு மட்டுமே கண்டுகொண்டு
வரைபடத்தில் பயணிப்பதால்
சேர வேண்டிய இடம் வாராது!.......
அருமையான இலக்கியக் கவிதை
வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ...
தமிழ்மணம் 2
மிக்க நன்றி சார்.
பாராட்டிற்கு நன்றி அமைதி சாரல்.
பாராட்டிற்கும் ஓட்டிற்கும் நன்றி அம்பாளடியாள்.
அழகு கவிதை.
வாழ்த்துக்கள் அம்மா.