15:44 | Author: அன்னைபூமி

தலைமை என்பது அதிக பொறுப்பு மிக்க ஒரு பதவி. அந்த மகுடத்தை தலையில் சூட்டிக்கொல்ல திறமை மட்டும் போதாது அனைத்து பண்புகளையும் தந்திரம் உட்பட எல்லாவற்றிலும் கைதேர்ந்தவனாக இருத்தல் அவசியம். சுற்றத்தின் நிலை அவர்களின் மனபாங்கு, மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றிலும் அரசன் ஆழ்ந்த கவணம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. அரசரினின் நிலைப்பாடு அவரின் போக்கு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் தன்மை அவரை அடுத்த அமைச்சருக்கே உரித்தாகின்றது
                             அரசரின் நிலையரிந்து அவரின் செயல்பாடுகளில் ஏதேனும் முரண் இருப்பின் அதை அவர் மனம் அறிந்து பக்குவமாய் எடுத்துச்சொல்வதும் அமைச்சரின் பொறுப்பாகின்றது. அமைச்சர் அரசரை விட வயதில் மூப்பு உடையவராக இருந்தாலும் அவரின் தலைமை கருதி அவரிடம் மறியாதையாக நடந்து கொள்ளவேண்டும். தலைமை பண்பு கொண்டிருக்கையில் அங்கே உறவுமுறை இருந்தாலும் நாம் அப்பண்பிற்கு மறியாதை தருதல் மிகவும் அவசியம்.
                                     அரசன் தன் நிலைமையில் இருந்து விலகும் போது அமைச்சர் அரசின் போக்கை நிராகரித்து அவரை விட்டு அதிகம் விழகிச்செல்லாமலும், மாறக அவரை கடிந்தும் பேசாமலும். மன்னரின் நிலைப்பாட்டை, அதில் உள்ள மாறுதலை கவனமாக எடுத்துச்சொல்ல வேண்டும். 
                           இதைத்தான் வள்ளுவர்
           "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
           இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்"    என்கின்றார்.
மேலும் தலைமையாளர் முன்னிருக்கையிலே, அவரின் கீழ் இருக்கும் ஒருவர் மற்றவர்களிடம் கண்சாடையிலோ அல்லது காதருகே ரகசியமாகவோ பேசுதல் கூடாது. மேலும் தலைமையாளர் மற்றவர்களிடம் ரகசியம் பேசினால் அதை மறைமுகமாக கேட்ப்பதும் அல்லது அவ்விசயத்தை அவராக நம்மிடம் சொல்லாதவரை நாமக அவரிடம் கேட்ப்பதும் அனாகரீகமானது.
               பொறுப்பு என்பது தலைமைக்கு மட்டும் அல்ல அவரைசார்ந்த அனைவருக்கும் உள்ளது. 
22:23 | Author: அன்னைபூமி
நம்மிலும் நிறைய தெரிந்தவர்கள் தான் நாம் நிதம் சந்திக்கும் பலர். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பலவற்றையும் கற்றுக்கொண்டும், பலரில் ஒருவராக கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருக்கின்றோம். நம்மை இந்த பலரில் திறமையானவர்களாக நிருபிக்க நாம் கற்றவற்றை, நமக்கு தெரிந்தவற்றை இந்த பலருக்கும் நன்கு புரியும்படி எடுத்துச்சொல்வது நம்முடைய கடமையாகின்றது.பலருக்கும் நன்கு தெரிந்தவற்றை நாம் அவையில் சொல்லும் போது அதை அஞ்சாமல் எடுத்துச்சொல்வது மிகவும் முக்கியம். அவையின் நிலை அறிந்த அறிஞன் தான் சொல்லப்போகும் செய்தியில் தனக்கே நிலைப்புத் தன்மை இல்லையெனில் அதை வழுப்படுத்தி சொல்ல மாட்டான்.
          கற்றவர் அவையில் அஞ்சாமல் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படி சொல்ல வல்லவர், கற்றவர்களில் சிறந்த கல்வியாளர் எனப் போற்றப்படுவார்.
 இதை வள்ளுவர்
    "கற்றாருள் கற்றார் என்ப்படுவர் கற்றார்முன்
     கற்ற செலச்சொல்லு வார்"        என்கின்றார்.

மேலும் நெஞ்சுறுதி இல்லாதவர்களுக்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, அது போல நுண்ணறிவுடையவர்களின் சபையை அஞ்சுபவர்களுக்கு நல்ல நூலோடு என்ன தொடர்பு உண்டு.
 இதை வள்ளுவர்
   "வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
    நுண்அவை அஞ்சு பவர்க்கு"       என்கின்றார்.

கற்றதின் சிறப்பு பலரின் மத்தியில் அதை தெளிவாக எடுத்துரைப்பதில்தான் இருக்கின்றது, அதற்கு மிகவும் முக்கியமானது அவை அஞ்சாமை, ஆழ்ந்த அறிவு மட்டும் ஒருவனை சான்றோன் ஆக்குவது இல்லை, அதை அவையோருக்கு எடுத்துச்சொல்வதிலேயே அவன் ஆன்றோனாகின்றான்.     
17:50 | Author: அன்னைபூமி

ஓரவஞ்சனை
அதென்ன .........
பௌர்ணமி வானத்திற்கு
மட்டும் தங்க மேகங்கள் !


புதன் கிழமை பாசஞ்சர்
பயணிகள் இன்றி தனித்து
செல்கிறது ரயில் பூச்சி !


ஹவுஸ் ஓனருக்கே பிராப்ளம்
வாடகைக்கு  இடம் தேடி
வீட்டுடன் அலைகிறது நத்தை!

மின் தடை
இருட்டென்றால் பயமா
விளக்குடன் மின்மினி பூச்சி!


சுமைதாங்கி
பனித்துளியின் பாரத்தால்
வளைகிறது புல், மலர்கிறது பூ.

விருந்தாளி
இலையுடன் விருந்திற்கு
காத்திருக்கிறது வாழைமரம்


தியாகி

காலடி நிழலில் குளிர்ச்சி
தலையின் சூரியனின் சுட்டெரிப்பு
     - தவிப்பில் ஆலமரம்.

கள்ளாட்டம்
அலையின் கல்லா மண்ணா
ஆட்டத்தில் வென்றது கடல்.

வெட்கம்
காற்றின் கவிதை கேட்டு
தலைகுனிந்ததா பன்னீர் பூ.
                                          - சாகம்பரி,மதுரை


18:35 | Author: அன்னைபூமி
விதைகளைத் தொலைத்துவிட்ட
விருட்சம் ஆகிவிட்டேன். . .


நல்ல சத்தான கனிமங்களை
உண்டு களைத்தவன். . .
கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு
கொட்டும் மழையில்
உல்லாசமாய் நனைந்தவன். . .


கனத்த கிளைகளின்
கஷ்டங்களை வேராய் 
மாறித் தாங்கியவன். . .


எனக்கும் அல்லாது
என்னைச் சார்ந்தவ்ர்களுக்கும்
எவ்வித துன்பத்தையும்
தந்திராதவன். . .


பல குடும்பங்களுக்கு
வாழ்வாதாரமாய் ஆண்டுகள்
பல இருந்துவிட்டவன். . .


சத்துக்களை பகுத்து
சதைகளை அறுத்து
வரும் சந்ததியை
உயிர்ப்பிக்க உதிரம்
கலந்தவன். . .


காலச் சுழற்சியில் 
கடமைகளை மறந்துவிட்ட
விதைகள் எங்கெங்கோ
போய் வீழ்ந்துவிட்டன. . .


கிளைகளைத் தாங்கியவன்
கீழே தள்ளப்பட்டேன். . .
விதைகளைத் தொலைத்துவிட்ட
விருட்சம் நான். . .
16:21 | Author: அன்னைபூமி
தண்ணீரில் உடல் தத்தளிக்கும்போது
மனம் தீப்பற்றி எரியுதடி. . .
உன்ஈர விழிகள் என்மனதை
தீவைத்து மெல்லத் திரும்புதடி. . .
மௌன மொழியின் பலஅர்த்தங்கள்
என்உயிரைச் சுற்றி வளைக்குதடி. . .
உன் இதழ்கள் இறுகிக் கிடந்தாலும்
கண்கள் காதலைச் சொல்லுதடி. . .

மொட்டாகவே இருந்த பூவொன்று
மலர்ந்து மார்பில் விழுந்ததென்ன. . .
கானலாகவே இருந்த காதலொன்று
பனித்துளியாய் மனதை நனைத்ததென்ன. . .
சிதறி வீழ்ந்த மனத்துண்டுகளெல்லாம்
சிற்பமாய் காதலைச் செதுக்கியதென்ன. . .
வார்த்தையாகவே இருந்த வாழ்க்கையொன்று
கவிதையாய் மொழிபெயர்த்து நின்றதென்ன. . .
23:09 | Author: அன்னைபூமி
ஏதோ தோன்றியது
எழுதுகிறேன். . .
காதல் பரிணாமத்தின்
இயற்கை தேர்விலிருந்து
விடுபட்டவர்கள் நாம். . .
ஆனாலும்
வாழ்கிறோம். . .
உயிர்த்துளியின் எச்சங்களாய்
உண்மையின் மிச்சங்களாய்
வளிமண்டலக் காற்றில்
உனக்குன்டான பங்கில்
உரிமை கோரியவன் நான். . .
மாறாக. . .
எனக்குண்டான பங்குமுழுதும்
எடுத்துப்போனவள் நீ. . .
உரிமை மறுத்தவள் நீ
உணர்வு கேடுத்தவள் நீ
என் உயிர்த்திசுக்களின்
கோரிக்கைகளுக்கு
ஊமைப்பதில் தந்தவளும் நீ. . .
எனக்குத் தெரியாது
எங்கோ போய்ச் சேர்ந்தாய்
எனக்குத் தெரியாது
எங்க்குண்டான உனதை
எங்கோ போய்ச் சேர்த்தாய். . .
காதல் எனக்கு
கானலாய். . .
இருந்தும் கிடந்தேன்
காதல் எனக்கு
சாபமாய். . . 
சபித்தும் தவம் புரியலானேன். . .
நீ என் செய்தாய்
உனக்குத்தான் தெரியாதே
உள்ளுணர்வின் அழுகுரல். . .
போலியிடம் பேயர்ந்தாய்
ஆழிமட்டம் அன்பு சுரந்தாய்
கனவுக்குள்ளும் நினைவுமலர்ந்தாய்
நினைவிலும் கனவுகாணுகின்றாய். . .
ஊண் மறந்தன செல்கள்
நாண் எரிந்தன விழிகள். . .
ஆசை தழுவிப்பிடித்தது
அன்பு லயித்துக் கிடந்தாது. . .
உன்னில் 
நா பேச்சு மறந்தது
பா மனது சொன்னது. . .
இறுதியில் என்ன நடந்தது. . .
நாடு கடத்தப்பட்டன
உன் கனவுகள். . .
சுடுகாடு கடத்தப்பட்டது
உன் காதல். . .
ஈரத்தசைகள்
அமிலம் குடித்தாற்போல். . .
கோரத்துயரங்கள் உன்னை
கொன்று குவித்தன. . .
நீ என் செய்வாய்?
உனக்குத்தான் தெரியாதே
உள்ளுணர்வின் அபயக்குரல். . .
எனக்குன்மேல்
பரிதாபம் இல்லை
இப்பொழுதும். . .
எனக்குன்மேல்
படுபயங்கர காதல்
இப்பொழுதும். . .
காதல் எனக்கு
கானலாய். . .
இருந்தும் கிடந்தேன் - இனி
இறந்தும் கிடப்பேன். . ..
ஏதோ தோன்றியது
எழுதினேன்............22:01 | Author: அன்னைபூமி
மனிதஇனம் தோன்றி
நூற்றாண்டுகள் பல
கடந்த பின்பும்
மாக்களாகவே பலர்
இன்னும் மண்ணுலகில். . .


காட்டுச் சூழ்நிலையில்
பல்லுயிர்த்தன்மை அதிகம்
காப்பாற்றிக் கொள்வது
தன்னைத்தானே கடினம். . .


தவளைக்கு பூச்சி
பாம்பிற்கு தவளை
கழுகிற்கு பாம்பு
புலிக்கு மான். . .


ஊண் உண்ணிக்கும்
தாவர உண்ணிக்கும்
ஒரே நிலைதான்
இங்கு நடப்பவை
அத்தனையும் அவசியமான
கொலை தான். . .


இது சூழ்நிலைச்சமநிலை
ஐந்தறிவுதான் இவைகளுக்கு
பாவம். . .


விலங்கினங்களில் வேற்றுமை
அதிகம் பிறப்பில். . .
நம்மில்.?
ஒன்று ஆண்
மற்றொன்று பெண். . .


காட்டுவாசியாய் வாழ்ந்த
காலம் தொட்டு
கணினி கையில் தூக்கிச்செல்லும்
காலத்திற்கு மாறியபிறகும்


இதயத்தை தொலைத்துவிட்ட
பல இரும்பு மனிதர்களிடையே
இன்னமும் மாறாமல்
இருப்பது இது. . .


மனிதகுலம் ஒன்று ஆனால்
காட்டுச்சூழ்நிலையை
உருவாக்குகின்றது. . .
ஆறறிவுதான் இதறக்கு
பாவம். . .
15:34 | Author: Ravi

16:59 | Author: அன்னைபூமி

கட்டிய கூட்டின்மேல்
கல்லெரி விழுந்ததென்ன. . .
கோபுரமாய் இருந்த வாழ்க்கை
கொடியிழந்த மலரானதென்ன. . .

ஒரு குலப்பிறப்பே
ஊமையாய் பிறந்திருந்தாலும்
உயிர் பிழைச்சு வாழ்ந்திருப்போம். . .
ஒரு திருமொழி பேசியதால்
உயிர்வாழ தகுதியற்று
உருக்குலைந்து போனோம். . .

ஒண்ட வந்த பிடாரி
ஊரையே உலுக்கிய கதையாய்
பூர்வீக குடியில்
பூகம்பங்கள் பல வந்துவிட்டன. . .

புண்ணியம் தேடும்
பூமிக்கு அருகில் இருந்தும்
கரைக்கப்பட்டன எங்கள்
கண்ணீர்த்துளிகள் கடலுக்கு அடியில். . .

தாயகம் இழந்த நாங்கள்
தரணி முழுதும் பறக்கின்றோம். . .
எங்கள் கூடு
கலைக்கப்பட்டுவிட்டது. . .