22:23 |
Author: அன்னைபூமி
நம்மிலும் நிறைய தெரிந்தவர்கள் தான் நாம் நிதம் சந்திக்கும் பலர். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பலவற்றையும் கற்றுக்கொண்டும், பலரில் ஒருவராக கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருக்கின்றோம். நம்மை இந்த பலரில் திறமையானவர்களாக நிருபிக்க நாம் கற்றவற்றை, நமக்கு தெரிந்தவற்றை இந்த பலருக்கும் நன்கு புரியும்படி எடுத்துச்சொல்வது நம்முடைய கடமையாகின்றது.பலருக்கும் நன்கு தெரிந்தவற்றை நாம் அவையில் சொல்லும் போது அதை அஞ்சாமல் எடுத்துச்சொல்வது மிகவும் முக்கியம். அவையின் நிலை அறிந்த அறிஞன் தான் சொல்லப்போகும் செய்தியில் தனக்கே நிலைப்புத் தன்மை இல்லையெனில் அதை வழுப்படுத்தி சொல்ல மாட்டான்.
கற்றவர் அவையில் அஞ்சாமல் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படி சொல்ல வல்லவர், கற்றவர்களில் சிறந்த கல்வியாளர் எனப் போற்றப்படுவார்.
இதை வள்ளுவர்
"கற்றாருள் கற்றார் என்ப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்" என்கின்றார்.
மேலும் நெஞ்சுறுதி இல்லாதவர்களுக்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, அது போல நுண்ணறிவுடையவர்களின் சபையை அஞ்சுபவர்களுக்கு நல்ல நூலோடு என்ன தொடர்பு உண்டு.
இதை வள்ளுவர்
"வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
நுண்அவை அஞ்சு பவர்க்கு" என்கின்றார்.
கற்றதின் சிறப்பு பலரின் மத்தியில் அதை தெளிவாக எடுத்துரைப்பதில்தான் இருக்கின்றது, அதற்கு மிகவும் முக்கியமானது அவை அஞ்சாமை, ஆழ்ந்த அறிவு மட்டும் ஒருவனை சான்றோன் ஆக்குவது இல்லை, அதை அவையோருக்கு எடுத்துச்சொல்வதிலேயே அவன் ஆன்றோனாகின்றான்.
Category:
தமிழர் பண்பாடு
|
2 comments:
சுருங்கச் சொன்னாலும் மிக அழகாக
மனதில் பதியும்படிச் சொல்லிப்போகிறீர்கள்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
தான் சொல்லப்போகும் செய்தியில் தனக்கே நிலைப்புத் தன்மை இல்லையெனில் அதை வழுப்படுத்தி சொல்ல மாட்டான்.//அத்தனையும் உண்மை. மிகச் சரியான கருத்து. நல்ல பதிவு. புதிதாய் ஆசிரியராக இருப்போர் தெரிந்து கொள்ள வேண்டியது.