23:09 | Author: அன்னைபூமி
ஏதோ தோன்றியது
எழுதுகிறேன். . .
காதல் பரிணாமத்தின்
இயற்கை தேர்விலிருந்து
விடுபட்டவர்கள் நாம். . .
ஆனாலும்
வாழ்கிறோம். . .
உயிர்த்துளியின் எச்சங்களாய்
உண்மையின் மிச்சங்களாய்
வளிமண்டலக் காற்றில்
உனக்குன்டான பங்கில்
உரிமை கோரியவன் நான். . .
மாறாக. . .
எனக்குண்டான பங்குமுழுதும்
எடுத்துப்போனவள் நீ. . .
உரிமை மறுத்தவள் நீ
உணர்வு கேடுத்தவள் நீ
என் உயிர்த்திசுக்களின்
கோரிக்கைகளுக்கு
ஊமைப்பதில் தந்தவளும் நீ. . .
எனக்குத் தெரியாது
எங்கோ போய்ச் சேர்ந்தாய்
எனக்குத் தெரியாது
எங்க்குண்டான உனதை
எங்கோ போய்ச் சேர்த்தாய். . .
காதல் எனக்கு
கானலாய். . .
இருந்தும் கிடந்தேன்
காதல் எனக்கு
சாபமாய். . . 
சபித்தும் தவம் புரியலானேன். . .
நீ என் செய்தாய்
உனக்குத்தான் தெரியாதே
உள்ளுணர்வின் அழுகுரல். . .
போலியிடம் பேயர்ந்தாய்
ஆழிமட்டம் அன்பு சுரந்தாய்
கனவுக்குள்ளும் நினைவுமலர்ந்தாய்
நினைவிலும் கனவுகாணுகின்றாய். . .
ஊண் மறந்தன செல்கள்
நாண் எரிந்தன விழிகள். . .
ஆசை தழுவிப்பிடித்தது
அன்பு லயித்துக் கிடந்தாது. . .
உன்னில் 
நா பேச்சு மறந்தது
பா மனது சொன்னது. . .
இறுதியில் என்ன நடந்தது. . .
நாடு கடத்தப்பட்டன
உன் கனவுகள். . .
சுடுகாடு கடத்தப்பட்டது
உன் காதல். . .
ஈரத்தசைகள்
அமிலம் குடித்தாற்போல். . .
கோரத்துயரங்கள் உன்னை
கொன்று குவித்தன. . .
நீ என் செய்வாய்?
உனக்குத்தான் தெரியாதே
உள்ளுணர்வின் அபயக்குரல். . .
எனக்குன்மேல்
பரிதாபம் இல்லை
இப்பொழுதும். . .
எனக்குன்மேல்
படுபயங்கர காதல்
இப்பொழுதும். . .
காதல் எனக்கு
கானலாய். . .
இருந்தும் கிடந்தேன் - இனி
இறந்தும் கிடப்பேன். . ..
ஏதோ தோன்றியது
எழுதினேன்............



You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On May 12, 2011 at 10:00 AM , சாகம்பரி said...

கவிதை நன்றாக உள்ளது. ஆனால் என்னாச்சு? பாலை நிலத்து அனலடிக்க கவிதை எழுதும் சகாவுமா இப்படி.....

 
On May 14, 2011 at 5:07 PM , இராஜராஜேஸ்வரி said...

காதல் எனக்கு
கானலாய். . //
Nice..

 
On May 16, 2011 at 11:10 AM , அன்னைபூமி said...

கானலாக இருந்தாலும் நீரென ரசிக்க வைக்கும் காதல். . .நன்றி அக்கா. . .