22:01 | Author: அன்னைபூமி
மனிதஇனம் தோன்றி
நூற்றாண்டுகள் பல
கடந்த பின்பும்
மாக்களாகவே பலர்
இன்னும் மண்ணுலகில். . .


காட்டுச் சூழ்நிலையில்
பல்லுயிர்த்தன்மை அதிகம்
காப்பாற்றிக் கொள்வது
தன்னைத்தானே கடினம். . .


தவளைக்கு பூச்சி
பாம்பிற்கு தவளை
கழுகிற்கு பாம்பு
புலிக்கு மான். . .


ஊண் உண்ணிக்கும்
தாவர உண்ணிக்கும்
ஒரே நிலைதான்
இங்கு நடப்பவை
அத்தனையும் அவசியமான
கொலை தான். . .


இது சூழ்நிலைச்சமநிலை
ஐந்தறிவுதான் இவைகளுக்கு
பாவம். . .


விலங்கினங்களில் வேற்றுமை
அதிகம் பிறப்பில். . .
நம்மில்.?
ஒன்று ஆண்
மற்றொன்று பெண். . .


காட்டுவாசியாய் வாழ்ந்த
காலம் தொட்டு
கணினி கையில் தூக்கிச்செல்லும்
காலத்திற்கு மாறியபிறகும்


இதயத்தை தொலைத்துவிட்ட
பல இரும்பு மனிதர்களிடையே
இன்னமும் மாறாமல்
இருப்பது இது. . .


மனிதகுலம் ஒன்று ஆனால்
காட்டுச்சூழ்நிலையை
உருவாக்குகின்றது. . .
ஆறறிவுதான் இதறக்கு
பாவம். . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On May 7, 2011 at 4:31 PM , சாகம்பரி said...

பல்லுயிர்த்தன்மை என்பது biodiversity தானே. காட்டில் பலவகை உயிர்கள் தன்னுடைய குணம் மாறாமல். சேர்ந்து வாழ்கின்றன. ஏவாள் வயிற்று பிறப்பான மனிதர்களிடையே ஏன் குணமாற்றங்கள். அதேதான் உன் வயதில் இதே கேள்வியைதான் நானும் கேட்டேன். பதில் கிட்டவில்லை.

 
On May 7, 2011 at 5:35 PM , இராஜராஜேஸ்வரி said...

அத்தனை மிருகங்களின் குணங்களையும் கைப்பற்றியிருப்பானோ?

 
On May 7, 2011 at 8:54 PM , பிரணவன் said...

ஏவாள் வயிற்று பிறப்பான மனிதர்களிடையே ஏன் குணமாற்றங்கள். மனிதன் தான் மனிதன் என்று உணர்ந்தால் இந்த குணமாற்றங்கள் குறையும் அல்லவா? அம்மா. . .

 
On May 7, 2011 at 8:59 PM , பிரணவன் said...

உன்மைதான் அக்கா நீங்கள் சொல்வதும். . .