15:44 |
Author: அன்னைபூமி
தலைமை என்பது அதிக பொறுப்பு மிக்க ஒரு பதவி. அந்த மகுடத்தை தலையில் சூட்டிக்கொல்ல திறமை மட்டும் போதாது அனைத்து பண்புகளையும் தந்திரம் உட்பட எல்லாவற்றிலும் கைதேர்ந்தவனாக இருத்தல் அவசியம். சுற்றத்தின் நிலை அவர்களின் மனபாங்கு, மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றிலும் அரசன் ஆழ்ந்த கவணம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. அரசரினின் நிலைப்பாடு அவரின் போக்கு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் தன்மை அவரை அடுத்த அமைச்சருக்கே உரித்தாகின்றது.
அரசரின் நிலையரிந்து அவரின் செயல்பாடுகளில் ஏதேனும் முரண் இருப்பின் அதை அவர் மனம் அறிந்து பக்குவமாய் எடுத்துச்சொல்வதும் அமைச்சரின் பொறுப்பாகின்றது. அமைச்சர் அரசரை விட வயதில் மூப்பு உடையவராக இருந்தாலும் அவரின் தலைமை கருதி அவரிடம் மறியாதையாக நடந்து கொள்ளவேண்டும். தலைமை பண்பு கொண்டிருக்கையில் அங்கே உறவுமுறை இருந்தாலும் நாம் அப்பண்பிற்கு மறியாதை தருதல் மிகவும் அவசியம்.
அரசன் தன் நிலைமையில் இருந்து விலகும் போது அமைச்சர் அரசின் போக்கை நிராகரித்து அவரை விட்டு அதிகம் விழகிச்செல்லாமலும், மாறக அவரை கடிந்தும் பேசாமலும். மன்னரின் நிலைப்பாட்டை, அதில் உள்ள மாறுதலை கவனமாக எடுத்துச்சொல்ல வேண்டும்.
இதைத்தான் வள்ளுவர்
"அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்" என்கின்றார்.
மேலும் தலைமையாளர் முன்னிருக்கையிலே, அவரின் கீழ் இருக்கும் ஒருவர் மற்றவர்களிடம் கண்சாடையிலோ அல்லது காதருகே ரகசியமாகவோ பேசுதல் கூடாது. மேலும் தலைமையாளர் மற்றவர்களிடம் ரகசியம் பேசினால் அதை மறைமுகமாக கேட்ப்பதும் அல்லது அவ்விசயத்தை அவராக நம்மிடம் சொல்லாதவரை நாமக அவரிடம் கேட்ப்பதும் அனாகரீகமானது.
பொறுப்பு என்பது தலைமைக்கு மட்டும் அல்ல அவரைசார்ந்த அனைவருக்கும் உள்ளது.
Category:
தமிழர் பண்பாடு
|
0 comments: