18:35 | Author: அன்னைபூமி
விதைகளைத் தொலைத்துவிட்ட
விருட்சம் ஆகிவிட்டேன். . .


நல்ல சத்தான கனிமங்களை
உண்டு களைத்தவன். . .
கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு
கொட்டும் மழையில்
உல்லாசமாய் நனைந்தவன். . .


கனத்த கிளைகளின்
கஷ்டங்களை வேராய் 
மாறித் தாங்கியவன். . .


எனக்கும் அல்லாது
என்னைச் சார்ந்தவ்ர்களுக்கும்
எவ்வித துன்பத்தையும்
தந்திராதவன். . .


பல குடும்பங்களுக்கு
வாழ்வாதாரமாய் ஆண்டுகள்
பல இருந்துவிட்டவன். . .


சத்துக்களை பகுத்து
சதைகளை அறுத்து
வரும் சந்ததியை
உயிர்ப்பிக்க உதிரம்
கலந்தவன். . .


காலச் சுழற்சியில் 
கடமைகளை மறந்துவிட்ட
விதைகள் எங்கெங்கோ
போய் வீழ்ந்துவிட்டன. . .


கிளைகளைத் தாங்கியவன்
கீழே தள்ளப்பட்டேன். . .
விதைகளைத் தொலைத்துவிட்ட
விருட்சம் நான். . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On May 19, 2011 at 9:53 PM , அன்னைபூமி said...

//சத்துக்களை பகுத்து
சதைகளை அறுத்து
வரும் சந்ததியை
உயிர்ப்பிக்க உதிரம்
கலந்தவன். . .//
பிரணவன். அருமை கவிதை. வாழ்த்துக்கள்.

 
On May 20, 2011 at 7:18 PM , பிரணவன் said...

இந்த கவிதை எழுதி முடித்த தருணத்திலும் உங்களின் இந்த வாழ்த்துரையிலும் ஒரு நல்ல கவிதையை எழுதினேன் என்று முழுமை பேறுகின்றது மனது. . .நன்றி அம்மா. . .