12:36 | Author: அன்னைபூமி
நம் அன்றாட வாழ்வில் பயணம் செய்யக் கருதியே பல வாழ்க்கைத் தத்துவங்களை மறந்துவிடுகின்றோம். இன்றைய வாழ்வில் பலரது பிரச்சனை பொருளாதாரம், இங்கு ஆதரவு அற்றவர்களும் இருக்கின்றனர், ஆகாசத்தை தொடும் அளவுக்கு பொருள் படைத்தவர்களும் இருக்கின்றனர். இல்லாதவர் நாளைய வாழ்வை என்னி உழைக்கின்றார். இருப்பவர் இன்னும் கொஞ்சம் பொருள்தேடி பயணிக்கின்றார். பசி போல் செல்வமும் ஒரு தேவை கருதியே, அத்தியாவசியமே. உணவை ஒரு அளவுக்கு மேல் உடல் ஏற்க மறுப்பது போல். மனமும் ஒரு அளவுக்கு மேல் செல்வத்தை மறுத்தால் நன்று. நிலையானவை எவை என்பதை மறந்துவிட்டு இது போல் பல அற்ப விசயங்களுக்கு மனதை விட்டுவிடுகின்றோம். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெரிய இயல்பை உடையது இவ்வுலகம்.

     "நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
     வாள்அது உண்ர்வார்ப் பெறின்"

இயற்கையின் இயல்பை அறிந்தவர்கள் நாள் என்பது ஒரு காலப் பகுதிபோல் தோன்றி, உயிரை அறுக்கும் வாள் என்பதை அறிவர்.

அடுத்த நொடி வாழ்வோமா என்பதை மனிதர் அறிய முடிவதில்லை, ஆனால் அவர்தம் எண்ணங்களோ கோடி

நிலையாமையை நன்கு உணர்ந்த வள்ளுவர்
     
     "புக்கில் அமைந்தின்று லொல்லோ உடம்பினுள்
      துச்சில் இருந்த உயிர்க்கு"


உடம்பிற்குள் ஒரு மூலையில் ஒண்டியிருந்த உயிருக்கு தங்குவதற்கு நிலையான இடம் கிடைக்கவில்லை போலும் எங்கின்றார்.
15:44 | Author: அன்னைபூமி

தலைமை என்பது அதிக பொறுப்பு மிக்க ஒரு பதவி. அந்த மகுடத்தை தலையில் சூட்டிக்கொல்ல திறமை மட்டும் போதாது அனைத்து பண்புகளையும் தந்திரம் உட்பட எல்லாவற்றிலும் கைதேர்ந்தவனாக இருத்தல் அவசியம். சுற்றத்தின் நிலை அவர்களின் மனபாங்கு, மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவற்றிலும் அரசன் ஆழ்ந்த கவணம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. அரசரினின் நிலைப்பாடு அவரின் போக்கு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தும் தன்மை அவரை அடுத்த அமைச்சருக்கே உரித்தாகின்றது
                             அரசரின் நிலையரிந்து அவரின் செயல்பாடுகளில் ஏதேனும் முரண் இருப்பின் அதை அவர் மனம் அறிந்து பக்குவமாய் எடுத்துச்சொல்வதும் அமைச்சரின் பொறுப்பாகின்றது. அமைச்சர் அரசரை விட வயதில் மூப்பு உடையவராக இருந்தாலும் அவரின் தலைமை கருதி அவரிடம் மறியாதையாக நடந்து கொள்ளவேண்டும். தலைமை பண்பு கொண்டிருக்கையில் அங்கே உறவுமுறை இருந்தாலும் நாம் அப்பண்பிற்கு மறியாதை தருதல் மிகவும் அவசியம்.
                                     அரசன் தன் நிலைமையில் இருந்து விலகும் போது அமைச்சர் அரசின் போக்கை நிராகரித்து அவரை விட்டு அதிகம் விழகிச்செல்லாமலும், மாறக அவரை கடிந்தும் பேசாமலும். மன்னரின் நிலைப்பாட்டை, அதில் உள்ள மாறுதலை கவனமாக எடுத்துச்சொல்ல வேண்டும். 
                           இதைத்தான் வள்ளுவர்
           "அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
           இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்"    என்கின்றார்.
மேலும் தலைமையாளர் முன்னிருக்கையிலே, அவரின் கீழ் இருக்கும் ஒருவர் மற்றவர்களிடம் கண்சாடையிலோ அல்லது காதருகே ரகசியமாகவோ பேசுதல் கூடாது. மேலும் தலைமையாளர் மற்றவர்களிடம் ரகசியம் பேசினால் அதை மறைமுகமாக கேட்ப்பதும் அல்லது அவ்விசயத்தை அவராக நம்மிடம் சொல்லாதவரை நாமக அவரிடம் கேட்ப்பதும் அனாகரீகமானது.
               பொறுப்பு என்பது தலைமைக்கு மட்டும் அல்ல அவரைசார்ந்த அனைவருக்கும் உள்ளது. 
22:23 | Author: அன்னைபூமி
நம்மிலும் நிறைய தெரிந்தவர்கள் தான் நாம் நிதம் சந்திக்கும் பலர். ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் பலவற்றையும் கற்றுக்கொண்டும், பலரில் ஒருவராக கற்றுக்கொடுத்துக்கொண்டும் இருக்கின்றோம். நம்மை இந்த பலரில் திறமையானவர்களாக நிருபிக்க நாம் கற்றவற்றை, நமக்கு தெரிந்தவற்றை இந்த பலருக்கும் நன்கு புரியும்படி எடுத்துச்சொல்வது நம்முடைய கடமையாகின்றது.பலருக்கும் நன்கு தெரிந்தவற்றை நாம் அவையில் சொல்லும் போது அதை அஞ்சாமல் எடுத்துச்சொல்வது மிகவும் முக்கியம். அவையின் நிலை அறிந்த அறிஞன் தான் சொல்லப்போகும் செய்தியில் தனக்கே நிலைப்புத் தன்மை இல்லையெனில் அதை வழுப்படுத்தி சொல்ல மாட்டான்.
          கற்றவர் அவையில் அஞ்சாமல் தாம் கற்றவற்றை அவர் மனம் கொள்ளும்படி சொல்ல வல்லவர், கற்றவர்களில் சிறந்த கல்வியாளர் எனப் போற்றப்படுவார்.
 இதை வள்ளுவர்
    "கற்றாருள் கற்றார் என்ப்படுவர் கற்றார்முன்
     கற்ற செலச்சொல்லு வார்"        என்கின்றார்.

மேலும் நெஞ்சுறுதி இல்லாதவர்களுக்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, அது போல நுண்ணறிவுடையவர்களின் சபையை அஞ்சுபவர்களுக்கு நல்ல நூலோடு என்ன தொடர்பு உண்டு.
 இதை வள்ளுவர்
   "வாளொடுஎன் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடுஎன்
    நுண்அவை அஞ்சு பவர்க்கு"       என்கின்றார்.

கற்றதின் சிறப்பு பலரின் மத்தியில் அதை தெளிவாக எடுத்துரைப்பதில்தான் இருக்கின்றது, அதற்கு மிகவும் முக்கியமானது அவை அஞ்சாமை, ஆழ்ந்த அறிவு மட்டும் ஒருவனை சான்றோன் ஆக்குவது இல்லை, அதை அவையோருக்கு எடுத்துச்சொல்வதிலேயே அவன் ஆன்றோனாகின்றான்.     
12:15 | Author: அன்னைபூமி
எத்துனை உறவுகள் வந்தாலும், மனதிற்கு வலிமையாகவும், வாழ்க்கையின் இருதிவரை நம் தோழோடு தோழாக வரும் துணை தோழன் மட்டுமே. இந்த உழகத்தில எதிர்பார்ப்பும் பங்கீடும் இல்லாமல் உறவுகள் இல்லை. இவைகள் அணைத்தும் இருந்தாலும் இல்லாவிட்டாலும். என்றும் நம்முடன் வழித்துனையாய் வருவது நட்பு மட்டுமே. நட்பில் விரிசல்களும் புரிதல்களும் அதிகம். தேடுதலும் புரிதல் தன்மையும் இல்லாமல் எதுவும் கிடைப்பதும் இல்லை, எதுவும் நிலைப்பதும் இல்லை.

"பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்துஆங்கு அமையாக் கடை"

உரிமையோடு நண்பன் செய்தனவற்றிற்கு உடன்படாவிட்டால் பழகின நட்பினால் என்ன பயன்.

"கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்"

நண்பனின் குற்றத்தைப் பிறர் சொன்னாலும் நம்பாதவர்க்கு, தம் நண்பன் குற்றம் செய்தால், அது அன்றைய சூழலின் குற்றமாகவே தோன்றும், அவர் செய்ததாக கருதப்படாது. . .
06:00 | Author: Ravi

          ஈதல் இசைபட வாழ்தல் தமிழர் பண்பாடு . உண்மைதான் அலைபேசியில் அழைக்கப்படுவதற்கும் அழைப்பதற்கும் இசைதான்- சந்தர்ப்பம் தெரியாமல் தேசிய கீதமும், திருப்பள்ளி எழுச்சியும் அழைத்து நம்மை திருதிரு திருவாளர் ஆக்கிவிடும். ஆனால் பணம் கரைவது மனதிற்குள் வசைதான். வாகனம்கூட முன்னேயோ பின்னேயோ இசைத்து போகிறது. சமயத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டால் வாகனங்களின் நராசமான கூவல் காதை குடையும் இசைதான்..... இதே கூவல்தான் தொலைகாட்சியிலும்   வானொலியிலும், அவ்வப்போது தொகுப்பாளரின் விருப்பமாக நேயர்களின் வசன இசைகளும் - "நீங்க ரொம்ப நல்லா பாடறீங்க". ஒரொரு சமயத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளபோது மட்டும் ஏற்படும் அமைதி மட்டும் மனதிற்கு உகந்த மெல்லிசை. 

            மற்றபடி தலைப்பின் உண்மையான தகவல் என்னவென்றால், பிறருக்கு தர்மம் செய்து நல்ல பெயருடன் மற்றவர் போற்ற வாழ்வதுதான் இசைபட வாழ்தல் என்று தமிழாசிரியர் சொன்னார். எளியோரின் துயர் தீர்ந்த மனம் பாடும் வாழ்த்துதான் உண்மையான இசை. பாலும் தேனும் ஓடிய காலத்தின் தமிழர் பண்பாடு என்று கேலி பேசாமல், முடிந்தவரை மற்றவறுக்கு உதவி செய்து தமிழனாக வாழப்பார்ப்போம்.... நெஞ்சுரம், நேர்மை திறம், புறமுதுகிடா வீரம், வாக்கு தவறாமை... என திருக்குறள், புறநானூறு போன்றவை போட்டி போட்டு தரும் பட்டியலில் இது மட்டுமே தமிழர் பண்பாட்டிலேயே மிக எளிதாக பின்பற்றக்கூடியது . 
13:01 | Author: அன்னைபூமி
கற்கால முடிவில் தோன்றிய புதிய கற்காலம் விவசாயத்திற்கு வித்திட்டது. உழவு, குழும வாழ்க்கையென தோன்றி நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. விவசாயம் தலைத்தோங்கியது நாகரீகம் தோன்றியது. அது தான் பொற்காலம். அன்று ஆக்க சக்தியாக, ஒளியும், நெருப்பும், சக்கரமும் இந்த உலகத்தை ஆண்ட காலம் அது. மக்கள் மிகவும் சந்தோசமாக இயற்கையுடன் இயைந்த வாழ்வை வாழ்ந்தனர் என்றால் அது மிகையில்லை. இன்று 21ஆம் நூற்றாண்டு விண்ணைத்தொடும் கட்டிடங்களும், வண்ண விலக்குகளும், கணினிகளும் கால் பதித்து நடனம் ஆடிக்கொண்டிருக்கின்றன. இன்று நம் பூமித்தாயின் இதயத்தை இயந்திரங்கள் தூர்வாரிக்கொண்டிருக்கின்றன. நாடோடி வழ்க்கை மறுபடியும் தொடங்கிவிட்டது, மக்கள் இடம் பெயர தொடங்கிவிட்டனர். பண்பாட்டின் பழம்பெறும் பகுப்புகள் மக்கள் மனதில் மெல்ல கரையத்தொடங்கி மறையும் நிலைக்கு வந்துவிட்டது. அன்று வாழ்ந்த அனைவரும் விவசாயிகள். இன்று சிலர் கோடிகளில், நம்மில் பலர் தெருக்கோடிகளில். ஏற்றத்தாழ்வு வந்ததற்கு விவசாயம் மறக்கடிக்கப் பட்டதே காரணம்.
                        
                     "சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
                      உழந்தும் உழவே தலை"

மக்கள் பிற தொழில்களைச் சுழன்று சுழன்று செய்தாலும்,  அவையெல்லாம் உழவுத் தொழிலுக்குப் பிற்பட்டனவே; ஆகவே, துன்பங்கள் நிரைந்தாலும் உழவுத்தொழிலே தலை சிறந்த தொழிலாகும்.

               "உழவார் உலகத்தார்க்கு ஆணி அஃதுஆற்றாது
                எழுவாரை எல்லாம் பொறுத்து" 

பிற தொழில் செய்வாரை எல்லாம் தாங்குபவர்கள் உழவர்களே; ஆகவே, உலகம் என்னும் தேருக்கு உழவர்களே அச்சாணி போன்றவர்கள்.

00:10 | Author: அன்னைபூமி
பரிமாற்று விகிதத்தில் தான் பழக்கமும் பண்பாடும் வளர்ச்சியும் அடங்கியிருக்கின்றது. இன்றைய சூழலில் மனிதர்களின் மனம் எதை பின்பற்றுகின்றது?. நன்பகத்தன்மை நம்மிடையே குறைந்தமைக்கு தனி மனிதனாகிய நாம் ஒவ்வொருவரும் தான் காரணம். மற்றொரு பக்கம் புகழுக்கென்று அழையும் ஒரு கூட்டம். தற்பெறுமை இழவு வீட்டில் மார்ரடிப்பது போல வழக்கமாகிவிட்டது.
    
                  "ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
                   ஊதியம் இல்லை உயிர்க்கு"

ஏழைகளுக்கு உதவ வேண்டும் அதனால் புகழ் பெற்று வாழவேண்டும்; அதை தவிரப் பிறப்பின் பயன் வேறொன்றும் இல்லை.

                    "தோன்றின் புகழொடு தோன்றுக அஃதுஇலார்
                     தோன்றலின் தோன்றமை நன்று"

ஒரு செயலில் நுழைந்தால் புகழ் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு நுழைய வேண்டும் இல்லை யென்றால், அச்செயலில் நுழையாதிருப்பதே நல்லது.

புகழின் நோக்கம் அச்செயலை விரைந்து முடிக்க உந்துதல் செய்யும், அதே சமயம் புகழின் உச்சி தலை கணத்தை உருவாக்கிவிடாமல் இருந்தால் நல்லது.
00:01 | Author: அன்னைபூமி
நாம் வாழ்வில் எத்தனையோ நபர்களை தினமும் நம் தொழில் முறை கருதியோ பழக்கத்தின் காரணமாக பலரை சந்திக்கின்றோம். இவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்வது, அவர்களிடம் இருந்து நமக்கான நடத்தைகளை எப்படி கற்றுக்கொள்வது, ஏன்னென்றால் நாம் பழகும் ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்களின் நடத்தைகளை நாம் அறியாமையே நாம் கற்றுக்கொள்கின்றோம். நம்மை போல் தான் அவர்களும் நம்மிடம் இருந்து ஏதோ ஒன்றை கற்றுகொள்கின்றனர். என்வே நாமும் நம் சுற்றத்தரும் செடயல் மற்றும் எண்ணங்களில் வளமைமிக்கவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

"நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
 இனத்துஇயல்பது ஆகும் அறிவு"

நிலத்தின் தன்மைக்கு ஏற்ப, பெய்த நீரின் தன்மை திரியும் அதுபோல் தாம் சேர்ந்த இனத்திற்குத் தக்கவாரே மனிதர்களுக்கு அறிவு திரியும்.
           
"மனத்தான்ஆம் மாந்தர்க்கு உணரிச்சி இனத்தான்ஆம்
 இன்னான் என்ப்படும் சொல்"

மாந்தர்க்கு பொது உணர்வு மனம் காரணமாக உண்டாகும். இவன் இப்படிப் பட்டவன் என்று சொல்லப்படும் சொல் இனம் காரணமாக உண்டாகும்.

இங்கு வள்ளுவர் இனம் என்று குறிப்பிடுவது நாம் பழகும் மனிதர்களை, அவர் தம் இயல்பை. 
23:27 | Author: அன்னைபூமி
எந்த பிறவி என்றாலும் மானுடம் போல் வருமா? தனக்கு செய்த உதவிக்காக உயிரையும் துட்சமென அவர் தம் செய்த உதவிக்காக அவர்களுக்காக நீத்த பல உயர்ந்த உள்ளங்கள் வாழ்ந்து மடிந்த பூமி நம் தமிழ் மண் என்றால் அதில் மிகையில்லை. கெளரவர்களுக்காக கர்ணனும், பாரிக்காக கபிலரும் தங்கள் உயிரை செய்ந்நன்றிக்காக நீத்தனர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. . .
குறள்
             "காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும்
             ஞாலத்தின் மாணப் பெரிது"
நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிரியதாக இருந்தாலும் பயன்பாட்டு நிலையில் உலகத்தைவிட மிகப்பெரியது.
குறள்
            "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுஉண்டாம் உய்வுஇல்லை
             செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எத்தகைய அறத்தைக் கெடுத்தவர்க்கும் மன்னிப்பு உண்டு ஆனால், ஒருவர் செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே கிடையது

மனிதத்தில் சமூகம் என்ற அமைப்பே ஒருவருக்கொருவர் பலவற்றையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வதாலும் திரும்பப்பெருதலாலும் தான் சமனிலை பெருகின்றது.
00:42 | Author: அன்னைபூமி
மற்றவர்களுக்கு எந்த கெடுதலும் நினைக்காமலும் தன்னிடம் இல்லை என்றாலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும் தமிழ் மறபில் அதிகம்.
குரல்
           "தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
             வீயாது அடிஉறைந்து அற்று"
ஒருவருடைய நிழல் அவரை விடாது தொடர்ந்து நிற்பது உறுதி; அதுபோல், தீமை செய்தவரும் கெடுவது உறுதி.

"மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
 அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு"
மறந்தும் கூடப் பிறருக்குத் தீங்கு நினைக்காதே; ஏனெனில், தீங்கு நினைப்பவர்க்கு அறமே தீங்கு நினைக்கும். என்கின்றார் வள்ளுவர்.

ஆனால் இன்றைய நிலையோ.......? நீங்களே சிந்தியுங்கள்
23:30 | Author: அன்னைபூமி
தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த பண்பு விருந்தோம்பல், பண்டைய காலத்தில் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே காணப்பட்டன, எனவே விருந்தினர்கள் அல்லது அடியவர்கள் யாரேனும் எப்பொழுதும் வந்தால் கூட அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு அளிக்கும் மனிதர்களும் அவர் தம் சமைத்த உணவும் குறையாமல் நிறைவாய் இருக்கும். 
                               குடும்பமாக இருந்து செல்வத்தை காப்பாற்றி வாழ்வது, விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்காகவே. என்று வள்ளுவர் தம் குரலில் சொல்லியுள்ளார்.
குரல்
         "இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
         வேளாண்மை செய்தல் பொருட்டு"      
விருந்து படைப்பதிலும் தனிச்சிறப்பு உண்டு, படைப்பவர்க்கும் சிறப்பு உண்டு.
விருந்து படைப்பவரின் தன்மை மாறுபட்டால் கூட விருந்தின் பயன் மாறிவிடும் 
குரல்  
         "மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து  
         நோக்கக்குலையும் விருந்து" 
அனிச்சம் மலர் முகர்ந்து பார்த்த அளவில் வாடிவிடும்; ஆனால், முகம் திரிந்து பார்த்த அளவிலேயே விருந்தினர் வாடிவிடுவர்.  
00:04 | Author: அன்னைபூமி
தமிழர் பண்பாட்டில் ஈகை ஒரு கடமையாக கருதப்பட்டது. ஏழைகளின் பசிப்பிணியை தீர்த்த பல செல்வந்தர்கள் தன்னலம் பாராமலும் செருக்கு இல்லாமலும் தேடிவந்த பலருக்கு தங்களால் இயன்றவரை அன்புக்கரம் நீட்டி இருக்கின்றனர். வள்ளுவர் தமது குரலில், ஏழைக்கு ஒன்று கொடுப்பதுதான் ஈகை எனப்படும்; மற்றவர் கையில் பொருள் கொடுப்பது எல்லாம் தனக்கு ஒரு பயனை எதிர்பார்த்துக் கொடுப்பனவாகும். என்று சொல்லி இருக்கின்றார்.  
குரல் 
"வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து"

பண்டமாற்று முறை என்ற பழக்கமே மனிதனின் தேவை கருதி தான் வழக்கத்திற்கு வந்தது, பின் இந்த தேவை என்ற பயன்பாடு மட்டும் தொடர்ந்து ஈகை மறுக்கப்பட்ட பின் மறக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. ஆனால் ஈகை இன்றளவும் அதன் தன்மையில் பல நல்ல உள்ளங்களில் வழக்கில்லிருந்து கொண்டுதான் இருக்கின்றது. . .
    
இனிவரும் களங்களில் மாறிவிட்ட மறக்கடிக்கப்பட்ட நம் மரபுகளை நினைவு கூறுவோம். நன்றி. . .         
23:45 | Author: அன்னைபூமி