23:30 |
Author: அன்னைபூமி
தமிழர் பண்பாட்டில் தலை சிறந்த பண்பு விருந்தோம்பல், பண்டைய காலத்தில் பெரும்பாலும் கூட்டுக்குடும்பமாகவே காணப்பட்டன, எனவே விருந்தினர்கள் அல்லது அடியவர்கள் யாரேனும் எப்பொழுதும் வந்தால் கூட அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உணவு அளிக்கும் மனிதர்களும் அவர் தம் சமைத்த உணவும் குறையாமல் நிறைவாய் இருக்கும்.
குடும்பமாக இருந்து செல்வத்தை காப்பாற்றி வாழ்வது, விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்காகவே. என்று வள்ளுவர் தம் குரலில் சொல்லியுள்ளார்.
குரல்
"இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு"
விருந்து படைப்பதிலும் தனிச்சிறப்பு உண்டு, படைப்பவர்க்கும் சிறப்பு உண்டு.
விருந்து படைப்பவரின் தன்மை மாறுபட்டால் கூட விருந்தின் பயன் மாறிவிடும்
குரல்
"மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக்குலையும் விருந்து"
அனிச்சம் மலர் முகர்ந்து பார்த்த அளவில் வாடிவிடும்; ஆனால், முகம் திரிந்து பார்த்த அளவிலேயே விருந்தினர் வாடிவிடுவர்.
Category:
தமிழர் பண்பாடு
|
2 comments:
அருமை .. வாழ்த்துக்கள் நண்பரே ...
thank you
i pass my exam