00:00 |
Author: அன்னைபூமி
உலகம் பார்க்கும்முன்
உயிர் வதையா. . .?
உயிர் பெறும்முன்
படுகொலையா. . .?
ஜீரண சக்தி அதிகரிக்க
ஜீவகாருண்யம் ஒளிவிளங்க
தாய்பால் கொடுப்பாளாம் தாயொருத்தி. . .
பிறப்பது பெண் என்று தெரிந்தபின்
பிறவாமையே நன்றென்று புரிந்து - பின்
கள்ளிப்பால் கொடுப்பாள் பாதகத்தி. . .
பிறக்கும் குழந்தையை கொல்லும்
அதிலும்அதிகம் பெண்களின் உள்ளம்
நடப்பதை இங்கு எண்ணுகையில்
கண்ணீர்கூட வரவில்லை. . .
கசிந்து வந்ததோ இரத்தமடா . . .
கல்விக்கு சரஸ்வதியாம். . .
செல்வத்திற்கு இலட்சுமியாம். . .
இணையற்ற வீரம்
ஈன்று தருபவள் பார்வதியாம். . .
மூட பெண்சிசுக் கொலைதடுக்க
முன் நிற்க வரும்
கடவுள் தான் யாரோ. . .?
உயிர் வதையா. . .?
உயிர் பெறும்முன்
படுகொலையா. . .?
ஜீரண சக்தி அதிகரிக்க
ஜீவகாருண்யம் ஒளிவிளங்க
தாய்பால் கொடுப்பாளாம் தாயொருத்தி. . .
பிறப்பது பெண் என்று தெரிந்தபின்
பிறவாமையே நன்றென்று புரிந்து - பின்
கள்ளிப்பால் கொடுப்பாள் பாதகத்தி. . .
பிறக்கும் குழந்தையை கொல்லும்
அதிலும்அதிகம் பெண்களின் உள்ளம்
நடப்பதை இங்கு எண்ணுகையில்
கண்ணீர்கூட வரவில்லை. . .
கசிந்து வந்ததோ இரத்தமடா . . .
கல்விக்கு சரஸ்வதியாம். . .
செல்வத்திற்கு இலட்சுமியாம். . .
இணையற்ற வீரம்
ஈன்று தருபவள் பார்வதியாம். . .
மூட பெண்சிசுக் கொலைதடுக்க
முன் நிற்க வரும்
கடவுள் தான் யாரோ. . .?
Category:
சகாவின் கவிதைகள்
|