00:09 | Author: அன்னைபூமி
          நெருப்பு காதல்

நாளை உன்னை பார்க்க முடியாது
இன்று எரியும் உன் 
நினைவுப்பசிக்கு நாளைக்குதான் 
ஏகோபித்த உணவு. . .
இன்று பார்த்ததால் மட்டும் 
உன் நினைவுத்தீ குறையவில்லை 
இன்றும் எரிகிறது - நாளை 
கொழுந்துவிட்டு ஏறியும் . . .
உன்னை பார்த்தாலும் பிரிந்தாலும் 
இது குறையப்போவதில்லை 
என்றும் நிலையை - என்னுள் 
எரிந்து கொண்டேதான் இருக்கும் . . .
  
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.