00:15 |
Author: அன்னைபூமி
கார்டுன் கதாபாத்திரங்களான மிக்கி மவுஸ், ஜெர்ரி எலிகள் பாடுவதை போல நிஜத்திலும் எலிகள் பாடத்தொடங்கிவிட்டன.... ஜப்பானை சேர்ந்த உயிர்தொழில்நுட்பவியல் ஆராய்ச்சியாளரான அரிகுனி உஸிமுரா இதனை சாதித்துள்ளார்... அவர் மரபணு பொறியியல் மூலமாக மாற்றபட்ட எலிகள் (Genetically modified mouse) கொண்டு "Evolved Mouse Project" என்னும் ஆரய்ச்சியில் ஈடுபட்டனர். இந்த ஆராய்ச்சியினால் ஏற்பட்ட மரபணு திடீர்மாற்றம் காரணமாக பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு புதிதாய் பிறந்த எலிகளில் தற்செயலாக ஒன்று மட்டும் பறவைபோல பாடும் தன்மை கொண்டுள்ளது எண்பதை கண்டறிந்துள்ளனர்.இப்பொழுது அந்த ஆராய்ச்சிகூடத்தில் 100 பாடும் எலிகளை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் மனித மொழி உருப்பெற்ற விதம் குறித்து நாம் அறிந்து கொள்ள உதவும் என்கிறார் உஸிமுரா ..... எலிகள் மனிதனை ஒத்த மூளை அமைப்பையும் உயிரியல் செயல்பாட்டினை புரியும் பண்புகளுடையது என்பதால் இது சாத்தியமே!.. உஸிமுராவிற்கு கனவே எதிர்காலத்தில் நிஜ மிக்கி மவுஸ் உருவாக்குவதுதானாம்.....
வருந்தும் குறிப்பு :
ஜப்பானிலுள்ள எலிகள் பாடுமளவிற்கு முன்னேறிவிட்டன..... நம் நாட்டிலுள்ள எலிகள் இன்னும் கதவுகளையும் சுவர்களையும்தான் சொரண்டி கொண்டிருக்கின்றன!
Category:
அறிவியல் பக்கம்
|
0 comments: