00:57 | Author: அன்னைபூமி
 ஒவ்வோரு 2 நொடிக்கு, நம் தேசத்தில் ஒரு நபருக்கு இரத்தம் தேவைப்படுகிறது......
 ஒரு ஆண்டில் நம் தேசத்திற்கு 180 கோடி மில்லி இரத்தம் தேவை...... 

 ஆனால் வெறும் 20 கோடி மில்லி இரத்தமே பெறமுடிகிறது......

நம்மவர்களில் பலபேர் இரத்த தானம் செய்வதால் தமக்கு ஏதாவது பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற பயத்தின் காரணமாக இரத்த தானம் செய்ய முன்வருவதில்லை.

ஒரு மனித உயிர் காக்கும் இரத்த தானம் செய்வதால்
          இரத்த தானம் பெறுபவருக்கும் நன்மை...
              இரத்த தானம் செய்யும் அன்பருக்கும் நன்மையே......


ஆம், இது அறிவியல்புர்வமாக நிருப்பிக்கபட்ட உண்மையே
இதோ அதற்கான பதில்கள்.........

இருதயநோய்கான பாதிப்புகள் குறைவு...
நமது உடலிலிருக்கும் அளவுக்கு அதிகமான இரும்புசத்தின் காரணமாக கொழுப்புசத்து இதயத்திற்கு செல்லும் இரத்தகுழாய்யில் அடைந்துவிடுவதன் காரணமாக இருதய பாதிப்பு, மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வருகின்றன.
ஒருவர் முன்று மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள இரும்புச்சத்தின் அளவு குறைகிறது. அதன் காரணமாக இரத்த தானம் செய்யும் தங்களுக்கு இருதயநோய் பாதிப்பின் அளவு 88% குறையும்.

புற்றுநோய் பாதிப்பின் அளவு குறைவு...
அடிக்கடி இரத்த தானம் செய்வதால் புற்றுநோய் பாதிப்பின் அளவு 66% குறையும்.

கொழுப்புசத்து குறைவு...
முன்று மாத இடைவேளையில் இரத்த தானம் செய்வதன் காரணமாக உடலில் உள்ள கொழுப்புசத்து குறைவதால் நம்முடைய உடல் கட்டுகோப்பாகவும், எடை அதிகமாகமாலும் இருக்க உதவும். 450மில்லி இரத்த தானம் செய்வதால் 650கலோரி குறையும்.

புதிய இரத்தம் உருவாக்கம்...
இரத்த தானம் செய்த 48 மணி நேரத்திற்குள் புது இரத்தம் உற்பத்தி செய்யபட்டுவிடும். அதேபோல் புதிய சிவப்பு இரத்த அணுக்கள் 4-8 வாரங்களில் உருவாகிவிடும். இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் பாதுகாக்கபடும், புத்துணர்ச்சியும் புதுதெம்பும் கிடைக்கும்.

இரத்த பரிசோதனை.....
இரத்த தானம் செய்வதற்கு முன்னால் இரத்தபரிசோதனை மேற்கொள்ளப்படுவதால் தங்களுடைய எடை, ரத்த கொதிப்பின் அளவு போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். அதேபோல மஞ்சள்காமாலை, மலேரியா, ஹேச்.ஐ.வி போன்ற நோய்களை அரம்ப நிலையிலேயே அறிந்துகொள்ள உதவும்.......

நம் தேசத்திலுள்ள 100 கோடி மக்களில் வெறும் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதையும் தடுத்து விடலாமே!

           "இரத்த தானம் செய்வோம் மனித உயிர் காப்போம்"
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

1 comments:

On December 24, 2010 at 9:16 PM , shanthi said...

சரியான கருத்துகள். இளையவர்க\ள் தெரிந்து கொள்ளவேண்டியுது.