16:21 | Author: அன்னைபூமி
தண்ணீரில் உடல் தத்தளிக்கும்போது
மனம் தீப்பற்றி எரியுதடி. . .
உன்ஈர விழிகள் என்மனதை
தீவைத்து மெல்லத் திரும்புதடி. . .
மௌன மொழியின் பலஅர்த்தங்கள்
என்உயிரைச் சுற்றி வளைக்குதடி. . .
உன் இதழ்கள் இறுகிக் கிடந்தாலும்
கண்கள் காதலைச் சொல்லுதடி. . .

மொட்டாகவே இருந்த பூவொன்று
மலர்ந்து மார்பில் விழுந்ததென்ன. . .
கானலாகவே இருந்த காதலொன்று
பனித்துளியாய் மனதை நனைத்ததென்ன. . .
சிதறி வீழ்ந்த மனத்துண்டுகளெல்லாம்
சிற்பமாய் காதலைச் செதுக்கியதென்ன. . .
வார்த்தையாகவே இருந்த வாழ்க்கையொன்று
கவிதையாய் மொழிபெயர்த்து நின்றதென்ன. . .
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: